Sunday 8 April 2018

உன்னால் முடியும்தான்....!!

செடிக்கு தண்ணீர் ஊற்றுவது நீயாக இருந்தாலும்
அச்செடியை வளரச் செய்வது 
உன் கையில் இல்லை!

கிணறுகள் தோண்டுவது நீயாக இருந்தாலும்
அதில் நீரூற்றுகளை பீறிடச் செய்வது
உன் கையில் இல்லை!

முயற்சிப்பது நீயாக இருக்கலாம்
அது வெற்றியாக மாறுவதென்பது
உன் கையில் இல்லை!

பயணப்படுதல் நீயாக இருந்தாலும்
அதன் பயண முடிவு என்பது
உன் கையில் இல்லை!

புத்தகங்கள் வாங்குவது நீயாக இருந்தாலும்
அது அறிவாக மாறுவது 
உன் கையில் இல்லை!

தூங்கச் செல்வது நீயாக இருந்தாலும்
தூங்கி எழுவதென்பது
உன் கையில் இல்லை!

மனிதா...!
உன்னால் முடியும் என்பது உண்மைதான்
ஆனால்
உன்னால் எல்லாம் முடியாது என்பதும் பேருண்மை!






1 comment:

  1. உன்னால் முடியும் தம்பி.....

    போலவே உன்னால் சில விஷயங்கள் செய்யமுடியாது என்பதும் உண்மை!

    ReplyDelete