Monday, 12 September 2011

இப்படிக்கு......

 ஓர் மரம் -
தோப்பாகுமா?
ஓர் பூ -
பூந்தோட்டம் -
ஆகுமா!?

ஜோடிகளை -
இணைப்பது-
தோப்பாக்கி விட!

ஜோடியாக -
வருபவளோ -
நினைக்கலாமோ -
துண்டாக்கி விட!

சீர் கொண்டு -
வந்தவளே!

என்னை-
சீர் தூக்கி பார்த்த -
பின் தான் -
உன்னை -
தாரமக்கினார்கள் -
உனது சொந்தங்கள்!

சதை பிண்டமாக-
 பிறந்தேன் -
வருங்காலத்தில் -
உதவுவேனா ?-
உதவாக்கரை -
ஆவேனா!-என்று -
தெரியாமல்-
சீராட்டி வளர்த்தது -
எனது சொந்தங்கள்!


உடனே துண்டித்திட -
அதென்ன -
தொலைகாட்சி அலைவரிசையா?
தொலை பேசி தொடர்பா?-
அல்ல-
தொப்புள் கொடி உறவு!

கொஞ்ச நாள் -
நட்பை கூட -
முடியாது மறக்க !

கொஞ்சி வளர்த்து -
நெஞ்சில் பாசத்தையும் -
மார்பில் பாலையும் -
தந்தவளை-
முடியுமா?-
என்னால் ஒதுக்க!

வயிறு முட்ட -
தின்பவனுக்கு -
தெரியாத நிலை!

வயிறு ஒட்டி -
எலும்பு தெரிபவனின் -
நிலை!

கஷ்டத்தை மட்டும் -
சுவைத்தவள் -
காசுக்கரி உனக்கு-
என்னை-
கணவன் ஆகினாள்!

காசுக்காரி உறவு -
அவளை
விட்டு தூரம் -
ஆக்கி  விடும் -
என்பது தெரியாமல்!

என் வீட்டு -
நெளிஞ்ச சட்டியின் சோத்துக்கும்-
கிழிஞ்ச என் தாயின்-
சேலை வாசத்துக்கும் -
ஈடாகுமா!?

உன் வீட்டு -
குளு குளு அறையும் -
கம கம சாப்பாடும் -
அந்த சுகத்தை தருமா!?

அன்று-
நான் ,
ஏழை வீட்டு-
சீமான்!

இன்று ,
பணக்கார வீட்டில் -
'சீ' என்று ஆனவன்!

இப்படிக்கு ,
வீட்டோட மாப்பிள்ளை.

நாகரீகம்!

கற்கால-
 பெண்களே!
இலை தழைகளை-
 வைத்து-
உடை அணிந்தீர்கள் -
உடல் தனை -
மறைக்க!

இக்காலத்தில் -
செய்ய பட்ட -
ஆடையோ -
இலையுதிர் காலம் போல-
முடியாது -
எதையும் மறைக்க!

துரியோதரா!
ஒரு பாஞ்சாலி-
 சேலையை -
உருவி வில்லன் -
ஆனாய்!

இன்றைய -
பஞ்சகல்யாணிகள்-
சேலையை-
 உருவ தேவை-
 இல்லை-
ஏனென்றால் -
சேலையை -
உடுத்துவது இல்லை!

அன்று ,
மானத்தை மறைத்து -
ஆடை தான் -
காற்றில் ஆடியது!

இன்று,
மானமே காற்றில் -
பறக்குது!

விலை வாசி -
ஏற்றம் -
போராடும் -
மாதர் சங்கமே!

கெண்டை -
காலுக்கு மேல் -
ஆடை ஏறிக்கொண்டே-
 போகுதே -
யார் போராடுவது -
சொல்லுங்கள் தங்கமே!

படிப்பு ஏற ஏற -
உடுப்பு குறையணுமா!?

அறிவு வளர்ச்சிக்கு -
அது தான் அர்த்தமா!


நேற்று-
 முழு ஆடையாக !
இன்று குட்டை-
 பாவாடையாக!
நாளை ஆகி விடுமோ -
உள்ளாடையாக!

நாகரீகம் என்று -
இதை சொன்னால் -
அது தான்-
அநாகரீகம்!

இதெல்லாம்-
 பெண்ணுரிமை -என
போற்றினால் -
என்னை உலகம்-
பார்க்கும் -
அறிவு ஜீவியாக!

கள்ளு விற்கும் ஊரில் -
பால் விற்பவனும்-
அம்மணமாக -
உள்ளவர்கள் -
மத்தியில் -
கோவணம் கட்டியவனும் -
கருத படுவார்கள் -
மூடனாக!

ஆயிரம் பேர்-
 செய்வதினால் -
தவறு சரியென்று -
ஆகிடுமா!
மலம்தான் -
சாதமாகி விடுமா!!!?

காதலி கிடைத்திட....!

ஒன்று-
நீ!-
வெளிநாட்டு -
குடி உரிமை-
பெற்று கொள்!

இல்லையானால்-
வெளி நாடு-
 குடியுரிமை -
பெற்றவன் -
பொண்ணு கேட்காமல் -
பார்த்து கொள்!!

தெரிந்தது தான்!

நெருங்கிட-
 முடியாது தான்-
சூரியனை -
பார்த்து கொண்டு -
இருப்பதுதான் -
சூரிய காந்தி -
பூவுக்கு -
மகிழ்ச்சி!


இணைந்திட -
முடியாதுதான் -
தண்டவாள கம்பிகள் -
அருகே இருப்பது தான் -
கம்பிகளுக்கு -
மகிழ்ச்சி!

கடக்க-
 முடியாது தான் -
கரையை -
கடல் அலை-
முயல்வது தான் -
அலைகளுக்கு-
மகிழ்ச்சி!

ஏற்று -
கொள்ள மாட்டாய் தான் -
உன்னை -
நினைப்பதில் தான் -
எனக்கு -
மகிழ்ச்சி!

Monday, 1 August 2011

குழந்தைகளே...!

 மழலைகளே...!
கற்று -
தாருங்களேன் !
உங்களது -
குணங்களை !

கள்ளங்கபடம்-
 இல்லாத-
வெள்ளை -
உள்ளத்தை -
என் நெஞ்சில் -
கொஞ்சம் -
ஊற்றுங்களேன்!

அணைப்பீர்களே!
அடித்த-
 அம்மாவையே!-
அந்த அன்பை -
அணு அளவாவது-
எனக்கு -
தாருங்களேன்!

அடி மேல் -
அடி விழுந்தாலும் -
அடி மேல் -
அடி வைக்கும் வரை-
அடங்க மாட்டீர்களே!-
அந்த-
அயராத -
குணத்தை!

திரும்ப திரும்ப-
 சொல்லியாவது -
"திருந்த" -
சொல்வீர்களே!-
அந்த-
திறன் வாய்ந்த -
குணத்தை!

சிடு சிடுத்து -
பார்ப்பவகளையும்-
சிரித்து பார்ப்பீர்களே!-
அந்த
சிறந்த-
 குணத்தை!

நீங்கள் கற்று -
கொள்வீர்கள் -
பெரியவர்களிடம்!

கற்று கொள்ளத்தான் -தெரியவில்லை -
பெரியவர்கள்-
உங்களிடம்!

நண்பேண்டா........

 நண்பனானவன்-
கூட பிறக்காத -
பிறப்பானவன்!

வார்த்தைகளில் -
வரையறை உண்டு-
வார்த்து -
எடுத்தவளிடமும்!

வரையறை இல்லாமல் -வாழ்கையை-
பங்கிட்டு-
 கொள்ளலாம் -
நண்பனிடம்!

நட்பு!
புண்ணான -
மனசுக்கு -
களும்பாக-
 மாறும்!

காதலுக்கு-
 தூதாகும்-
காயத்திற்கு -
மருந்தாகும்!

கண்ணீரை -
துடைப்பான்-
கண் துடைப்புக்காக -
அல்ல!

காற்றில் -
அசையும் -
கண்மாய் -
தண்ணியை போல !

கஷ்டத்தின்போது-
 முந்தும்
கண்ணீரை -
போல!

துன்பத்தின் -
போது-
தோள் கொடுப்பவனே -
தோழன்!

நல் வழி படுத்தினால் -
தானே-
நண்பன்!

புன்னகை -
தர வேண்டிய -
உதட்டில் -
புற்று நோயை தரும் -
புகை இலையை -
வைப்பதா -
நட்பு!?

மனக்கஷ்டத்தில் -
வருபவனுக்கு -
மன நோயை தரும் -
மதுவை ஊற்றி -
கொடுப்பதா-நட்பு!?

'தவறும்போது'-
திருத்தணும்-
'தவறான'விஷயத்திற்கு -
அழைத்து -
செல்வதா !-
நட்பு!?

இவையெல்லாம் -
நட்பு அல்ல!
நடிப்பு எனலாம்!

உயிர் காப்பான் -
தோழன்-
என்பது -
முது மொழி!

நட்பு -
கொள்ளலாம் -
நட்பே கொல்லலாமா!?-இதுதான்-
எனது 'வலி'!

தெரிந்தும் தெரியாமலும்...!

திரும்ப-
 தெரியாமல் -
வலைக்குள் -
செல்லும் -
மீனை -
போல!

சாம்பலாவோம் -என-
தெரிந்தே -
நெருப்பை தொடும் -
விட்டில் பூச்சியை -
போல!

வாழ்க்கை மாறாது-
'வாங்கியதற்காக'-
வாக்களிக்கும்
வாக்காளர்களை -
போல!

தேங்காய் -
சில்லுக்கு -
ஆசை பட்டு-
பொறிக்குள்-
மாட்டும் -
எலியை -
போல!

காயங்களை -
தரும்-என
தெரிந்தே -
காதல் செய்கிறோம் -
நாமலும்!-
எல்லோரையும் -
போல!