Sunday, 16 December 2012

முகலாயர்களே...(8)

செலுத்துகிறோம்-
நாம் ஈட்டிய-
வருமானத்தில்-
வருமான வரி!

வாங்க -
முடியாத-
விலைவாசியானாலும்-
பொருளில்-
சேர்ந்திருக்குது-
விற்பனை வரி!

பொறுத்து -
கொள்கிறோம்-
மின்சாரமே -
இல்லாமல்-
மின்சார கட்டண-
உயர்வு!

வாழ்வாதார-
பால்-
விலை உயர்வு!

உயிரை உறிஞ்சும்-
மது விற்பனை-
சாதனை -
அளவு!

இன்னும்-
என்னன்னா -
விற்கிறதோ-
அத்தனையிலும்-
இருக்கிறது-
வரி!

நாட்டுக்குத்தானே-
போகிறது-
வரி!

நினைத்து-
கொண்டால்-
அதுவும்-
சரி!

இதனை-
மனதில்-
நிறுத்துவோம்!

அடுத்து-
வரலாற்றுக்கு-
போவோம்!

என்ன-
இந்த -
ஜிஸ்யா வரி!?

இது-
முகலாயர்கள் மீது-
பெரிதுபடுத்தப்படும்-
ஒரு வகுப்புவாத-
வதந்தீ!

இவ்வரியாவது(ஜிஸ்யா வரி)-
முஸ்லிம்கள் அல்லாத-
மக்கள் மீது-
விதிக்கப்படும்-
பாதுகாப்பு -
வரி!

இப்பணம்-
மன்னரின் -
சமூகத்திற்கு-
செலவழிக்கபட்டதா-
சிந்திப்பதே-
சரி!?

இல்லை-
என்பதே-
சரி!

மன்னரின்-
சமூகத்திற்கும்-
இருந்தது-
வரி!

அதன்-
பெயர்-
ஏழை வரி!(ஜகாத்)

இருக்கும்-
வீட்டை -
தவிர்த்து!

கணிசமான-
அளவிற்கு மேல் -
அசையும் சொத்து-
அசையா சொத்து-
அத்தனைக்கும்-
வரி வாங்கப்பட்டது!

இத்தனையும்-
அரசு கஜானாவில்-
சேர்க்கபட்டது!

சொல்லுங்கள்-
சொந்தங்களே!

இதில்-
யாருக்கு-
அதிக வரி!

ஏன்-
ஒருதலைபட்சமாக-
பிரசாரத்தின் வழி-
விதைக்கபடுது-
கொலை வெறி!?

(தொடரும்.....)

(குறிப்பு-ஜகாத் பணம் யார் நிர்பந்தமும் இல்லாமல் இறைவனுக்காக கொடுப்பவர்களும்-
இருக்கிறார்கள்-கொடுக்காதவரை நிற்பதிந்து கொடுக்கவும் -வைக்கப்பட்டுள்ளார்கள்!
இது ஜகாத் இஸ்லாமியர்களின்-
நான்காவது கடைமையும் கூட)






Saturday, 15 December 2012

முகலாயர்களே......(7)

முகலாய-
மன்னர்களில்-
அதிகம்-
விமர்சிக்கபடுபவர்!

மன்னர்-
ஔரங்கசீப்-
ஆவார்!

கொஞ்சம்-
பார்ப்போம்-
இவர்-
எப்படிபட்டவர் -
ஆவார்!!

தந்தை-
ஷாஜகானை-
கைது செய்தவர்-என
குற்றசாட்டு !

ஏன் செய்தார்-என
சிந்தித்தோமா-
நம் மனசாட்சியை-
தொட்டு!?

காரணம்-
தாஜ் மகாலை-
கட்டியதுதான்!

பைத்துல் மால்(பொதுநிதி)-
எடுத்து அதை -
கட்டியதுதான்!

ஒரே-
வித்தியாசம்!

தந்தைக்கும்-
மகனுக்கும்!

தந்தை-
கட்டிடத்தை-
ரசனையாக-
பார்த்தார்-
கட்டி முடித்தார்!

தனயன்-
நீதியை நேசித்தார்-
வீட்டில்-
சிறை வைத்தார்!

கன்றுக்காக-
தன் மகனையே-
கொன்றவரை-
மனு நீதி சோழன்-
என்கிறோம்!

பொதுநிதியை-
செலவழித்ததால்-
சிறை வைத்தவரை-
"வெறியன்"-
என்கிறோம்!

இன்றைக்கு-
அமர்ந்து விட்டால்-
ஆட்சியில்!

எல்லாம்-
அனுபவிக்கிறார்கள்-
ஓசியில்!

ஒருவர் கலந்து-
கொள்ளும்-
நிகழ்ச்சிக்கு!

இலவசமாகுது-
குடும்பத்துக்கு!

சொல்கிறார்கள்-
விமான சேவை-
நஷ்டம் என்று!

ஏன் சொல்ல-
மறந்தார்கள்-
ஒவ்வொருவரின்-
ஆட்சிகால செலவு-
இவ்வளவு-
என்று!?

"இப்படிப்பட்ட-"
ஆட்சியாளர்களை-
பார்த்தே பழகிவிட்ட-
நாம்!

"அப்படிப்பட்ட-"
ஆட்சியாளனை-
தூற்றுவோம்தாம்!!

(தொடரும்.........)





Friday, 14 December 2012

முகலாயர்களே.....(6)

அச்செய்தி -
சொல்லியது!

அதன்-
சுருக்கம்-
இது!

"ஒரு இஸ்லாமிய-
அமைப்பு (பெயர் குறிப்பிட்டு இருந்தது)-
அதனை செய்ததாகவும்!

மீனாக்ஷி அம்மன் கோவில் -
உலக அதிசயமானால்-
தாஜ்மகால் மௌசு-
குறைந்திடும்-
என்பதாலும்!

என்றெல்லாம்-
எழுதி இருந்தது!

முஸ்லிம்கள் கூட-
கடிந்து -
கொண்டார்கள்-
அவ்வமைப்பினர்களை!

கொட்டி தீர்த்தார்கள்-
வார்த்தைகளை!

ஒரே சமூகத்தை-
சார்ந்தவர்களே-
இப்படி என்றால்!

எப்படி -
கொதித்து-
இருப்பார்கள்-
அக்கோவிலை-
புனிதமாக-
கருதும்-
சகோதரர்கள்!

சில-
நாட்கள்-
சென்றது!

உண்மை-
வெளிவந்தது!

அச்செயலை-
செய்தவர்கள்-
முஸ்லிம்கள் -
அல்லாதவர்கள்!

பூக்கடை-
ஏல விவாகாரத்தில்-
நடந்த-
பிரச்சனைகள்!

ஒருவர் மற்றவரை-
பழிவாங்கவே-
இக்குண்டு வைத்த-
சம்பவங்கள்!

ஒரு துளிகூட-
சம்பந்தமில்லை-
அவ்வமைப்பினர்கள்-
மீது!

எதற்க்காக-
இல்லாததை-
பொல்லாததை-
அப்பத்திரிக்கைகள்-
எழுதுகிறது!?

எழுதிட-
முடியும்!

பத்திரிகை-
பெயரையும்!

அவ்வமைப்பினர்-
பெயரையும்!

ஆனாலும்-
நாகரீகம்-
கருதி-
நான் -
தவிர்த்தது!

இன்னும்-
இது போன்ற-
செய்திகளை-
பரப்பவே-
செய்கிறார்கள்!

மக்களே!-
நீங்களே-
உண்மையா-என
சிந்தித்து பார்த்து-
கொள்ளுங்கள்!

பிணந்தின்னி-
கழுகள்-
பிணங்களைதான்-
தின்னும்!

இக்கழுகுகளோ-
மனிதர்களை-
சண்டையிட்டு-
சாகவே-
எழுத்தையும்-
பயன்படுத்தும்!

எத்தனையோ-
பத்திரிக்கைத்துறை-
நண்பர்கள்!

உண்மையை-
தேடி உயிரையும்-
பணயம் வைக்கிறார்கள்!

அப்பேர்பட்டவர்களில்-
இது போன்ற-
அசிங்கங்களும்-
இருக்கிறார்கள்!

கட்டபொம்மன்கள்-
மத்தியில்-
எட்டப்பன்களும்!

திப்பு சுல்தானை-
சுற்றி -
தப்பான-
வரலாற்று திரிபுகளும்!

நிறைந்தே-
காணபடுகிறது!

உண்மை எது-
பொய் எது-
சிந்திப்பதே-
சாலசிறந்தது!

(தொடரும்....)





Thursday, 13 December 2012

முகலாயர்களே....(5)

பெரும்பாலான-
மக்கள்-
விரும்புவது!-
சமூக-
நல்லிணக்கத்தை!

சிலர்-
விஷத்தை-
விதைத்து-
அதில்-
நிரப்பி கொள்கிறார்கள்-
தன் வயிற்றை!

மதுரை-
என்றால்-
மல்லியும்!

மீனாக்ஷி அம்மன்-
கோவிலும்!

சுதந்திர போராட்ட-
தியாகி-
மருதநாயகம்-
"தலை " அடக்கம்-
செய்யப்பட்ட-
சம்மட்டிபுரமும்!

பல பசுமையான-
நினைவுகளை-
தரும்!

வாசத்திற்கும்-
பேர் இருக்கு!

பாசத்திற்கும்-
மனசிருக்கு!

கடல் இல்லாத-
ஊரு!

அரசியல் புயல்கள்-
மையம் கொள்ளும்-
ஊரு!

நான் -
சொல்ல போற-
செய்தி வேறு!

சில வருடங்களுக்கு-
முன்னால்!

மதுரைஎங்கும்-
ஒரு செய்தியை-
பரப்பியது-
விளம்பர-
 பலைகையினால்!

உலக அதிசயமவதற்க்கு-
மீனாக்ஷி அம்மன் கோவிலுக்கு-
வாக்களிக்குமாறு!

வாகனங்கள்-
மதுரையில் -
காண முடிந்தது-
இப்பதகைகளை-
சுமந்தவாறு!

இவ்வேளையில்-
ஒரு வார இதழ்-
செய்தி வெளியிட்டது!

அது-
"கோவிலில் குண்டு-
கண்டுபிடிக்கப்பட்டது-"என
எழுதியது!

நல்லிணக்கம் -
விரும்பும்-
எல்லோரையும் -
நசுக்கியது!

அச்செய்தியானது.....!!!

(தொடரும்......)

(குறிப்பு;மருதநாயகம் சுதந்திரத்திற்கு போராடியதால் உடலை வெள்ளையர்கள் கண்ட துண்டமாக வெட்டி தலையை மட்டும் மதுரையில் புதைதுள்ளார்கள்-
மற்ற உறுப்புகளை வேறொரு ஊருகளில் புதைத்தார்கள்)


Wednesday, 12 December 2012

முகலாயர்களே......(4)

நிலவை-
வார்த்தையில்-
வடிப்பவன்-
கவி-
பித்தன்!

காதலுக்காக-
காலத்தை-
இழப்பவன்-
காதல்-
பித்தன்!

மண்ணில்-
நிலவை-
சலவை செய்து-
"அதிசயம்"-
செய்தவன்-
கலை-
பித்தன்!

அப்பித்தன்தான்-
தாஜ்மகால்-
கட்டிய-
முகலாய மன்னன்-
ஷாஜகான்!

இந்தியா -
என்றால்-
தாஜ்மகாலும்!

தாஜ்மகால்-
என்றால்-
இந்தியாவும்!

ஒன்று சேர-
நினைவுகள்-
வந்து விடும்!

வெண்ணிலாவிடம்-
ஒளியை கடன்-
வாங்கி கட்டியதுபோல்-
அற்புதம்!

பார்க்க-
பார்க்க-
வியக்க வைக்கும்-
கலைகளின்-
களஞ்சியம்!

உலகின்-
அதிசயங்களில்-
முதலிடம்!

அக்கட்டிடத்தின்-
சொந்தம் கொண்டாட-
கூடிய மக்களோ-
நாட்டில்-
கடைசி இடம்!

ஓ!
ஷாஜகானே!
முகலாய மன்னனே!

இன்று-
உன் வாரிசுகளுக்கு-
வாடைகைக்கு -
வீடுகள் கூட-
மறுக்குதே!

நாட்டை ஆண்ட-
சமூகம் -
நடுத்தெருவில்-
நிக்குதே!

எத்தனை-
கமிசன்கள்-
வச்சாச்சி!

அத்தனையும்-
அவலத்தை-
சொல்லிருச்சி!

நடை முறைபடுத்தாமல்-
மனசு ஏனோ-
அரசுகளுக்கு-
மரத்து போச்சி!

ஏன்-
நியாயம் தேடும்-
கண்களில்-
மண்ணு விழுந்திடுச்சி!?

தாஜ்மகால்-
உலகபோரின்போது-
குண்டுகளில் இருந்து-
பாதுகாக்க-
மூங்கில்களால்-
கட்டப்பட்டது!-

புகைபடியாமல்-
இருக்க-
குறிப்பிட்ட தூரம்-
புகைவண்டிக்கு-
தடை விதிக்கப்பட்டுள்ளது!

கட்டிடத்தை-
பாதுகாக்கும்-
உங்களுக்கு!

மக்களின் நிலையை-
 கண்டும் காணாமல்-
இருப்பது-
எதற்கு!?


(தொடரும்.....)




Tuesday, 11 December 2012

முகலாயர்களே...(3)

நிலவினை-
பாடாத-
கவிஞர்களா!?

நிலவு-
தராத-
கற்பனைகளா!?

வர்ணங்கள்-
ஜாலங்கள்-
புரிவதுண்டு!

ஒரே-
வர்ணம் கொண்ட-
நிலவே!-
நீ!
எத்தனை-
சலனங்கள்-
தருவதுண்டு!

கொள்ளைகொள்ளும்-
குழந்தை-
சிரிப்பாகவும்-
தெரிகிறாய்!

நேசமானவளின்-
முகத்தை-
நினைவூட்டுகிறாய்!

ஒதுக்கியவளின்-
நினைவை-
தூரத்தில்-
இருந்து  தந்து-
துன்புறுத்துகிறாய்!

பிறையாக-
தெரிந்து-
மௌனமாக-
சிரித்தவளின்-
சிணுங்களை-
நினைவூட்டுகிறாய்!

நட்சத்திரங்கள்-
புடை சூழ-
ராணி போல்-
வலம் வருகிறாய்!

வெறித்து பார்க்கும்-
என்னவள்-
பார்வையை -
போலும்!

திரும்பி-
நான் பார்த்தால்-
மறைந்து கொள்வது-
போலவும்!

நிலவே!
பௌர்ணமி-
நாளில்-
ஒளியை -
கொட்டுகிறாய்!

அண்ணாந்து-
பார்க்கையில்-
மேகத்துக்குள்-
மறைந்து-
கொள்கிறாய்!

எத்தனை-
ரசனை வருது-
உன்னை-
பார்த்து!

எழுத முடியாத-
என் நிலையை-
பார்த்து-
எழுத்துக்கள்-
சிரிக்கிறது-
என்னை-
பார்த்து!

படைப்பான-
உன்னையே-
முழுவதும்-
அறிய முடியவில்லை!

உன்னை-
படைத்தவனின்-
பெருமையை-
எப்படி-
வார்த்தைகளில்-
அடக்கி சொல்ல!

"முகலாயர்-"
தலைப்பை-
வைத்தேன்!

முழு நிலவை பற்றி-
எழுதி இருக்கிறேன்!

இரண்டின்-
தொடர்பை-
தொடருங்கள்-
சொல்கிறேன்!

(தொடரும்....)






Monday, 10 December 2012

முகலாயர்களே......(2)

இல்லை-
இல்லை -
என்று-
கத்தினார்கள்-
கதறினார்கள்-
அம்மக்களும்-
ஆய்வுகளும்!

நம்ப மாட்டோம்-
இருக்குது-
"பேரழிவு ஆயுதம்"-
என்றார்கள்-
கொடுத்தவர்களும்!
எதிரியாக-
மாறியவர்களும்!

அதன்-
விளைவானது!

ஒரு நாடே-
சுடுகானாது!

இது-
ஒரு புறம்!

இனி-
மற்றொருபுறம்!

ரயிலில்-
ஒரு பகுதி-
எரிந்தது!

பிறகு-
பொய் பிரச்சாரம்-
பரவியது!

ஒரு-
மாநிலமே -
மனிதத்தை-
தொலைத்தது!

கலவரம்!
கலவரம்!

எங்கும்-
கொலைகளம்!

முன்பு-
உலகளவானது!

பின்பு-
நம் -
தேசமானது!

சில வருட-
ஆட்சியிலே!

இத்தனையும்-
செய்து முடிக்கையிலே!

உடனடியாக-
ஒளிபரப்பு-
செய்கிற
ஊடகங்கள்-
இருக்கையிலே!

முகலாயர்களே!
உங்கள்-
எண்ணூறு வருட-
ஆட்சியிலே!

தேசத்தையே-
புரட்டி இருக்கலாமே-
உங்கள்-
அதிகாரத்தினாலே!

நீங்கள்-
மதவெறியர்கள்-
என்றால்!

மதமாற்றம்-
செய்தவர்கள் -
என்றால்!

ஏன்-
இன்னும்-
உங்கள்-
சமூகம்-
சிறுபான்மை-
மக்கள்!?

இன்னும்-
அத்தனை-
சமூகமக்களும்-
வாழ்கிறதே!

இதுவே-
உங்கள் மீது-
சுமத்தப்படும்-
குற்றங்களை-
துடைக்கிறதே!

ஆனால்-
மனங்கள்-
புரிந்திட-
மறுக்கிறதே!!

(தொடரும்.......)