Friday, 7 March 2014

பிறந்த பூமி !(15)

''நம் மதத்தை சேர்ந்தவர்கள்தான்-
கிருஸ்தவர்கள்!

ஆனாலும்-
நம்மை இத்தாலியர்களாக பார்ப்பவர்கள்!

பணம் கொடுத்தால்-
உணவு தருவார்கள்!
யூதர்கள்!

கூடுதலாக எதிரிகள் கொடுத்தால்-
விஷத்தையும் தாராளமாக கலந்திடுவார்கள்''!

கிராசியானி நிலவரத்தை சொன்னார்!

''வேறன்னதான் வழி.!?-
மக்ரோனி  கேட்டார்!

''சமாதான வழி அடைபட்டுவிட்டது!

ஒரே வழிதான் உள்ளது!

போராடி ஜெயிப்பது!
அல்லது-
போரிலேயே சாவது!''

மீண்டும் ஆலோசனை கூட்டம்!

அனைத்து முக்கிய அதிகாரிகளும் பங்கேற்றம்!

உங்கள் பகுதி நிலவரங்கள் என்ன!?-
கிராசியானி கேட்டார்!

''கலகக்காரர்கள் வம்பிற்கு வருவதில்லை!

லிபியர் ஒருவர் கொல்லப்பட்டால், மூன்று இத்தாலியர்களை கொல்லாமல் விடுவதில்லை!

போராட்டக்காரர்கள் !

எரிமலையை போன்றவர்கள்!

வெளிவரும்வரை தெரிவதில்லை!

உறுப்பினர்கள் ''குறிப்பிட்ட''தகுதியுடையவர்களென கூறுவதற்கில்லை!''

விவாதங்கள் தொடர்ந்தது!

பரிதாபம்-
 ''துப்பு''எதுவும் கிடைக்காதது!


வரைபடம் படாதபாடுபட்டது!

எல்லை நாடுகள் ஆராயப்பட்டது!

சாதகம் யார் யார்!?

'சங்கை 'அறுப்பவர்கள் யார் யார்!?

எங்கு தொடங்க !?
எங்கே முடிக்க!?

முடிவு வந்தது!

துனீசியா நாட்டின் எல்லையில்-
 ''நாலூது',எனும் இடத்தில்}
ஒரு படை!

அல்ஜீரியா நாட்டின்  எல்லையில்-
'காட்''எனும் இடத்தில்-
ஒரு படை!

இரண்டு படைகளுக்கும் மத்தியில்-
அவசர உதவிக்கு ஒரு படை!

மக்களோ சகஜ நிலை!

ராணுவ வீரர்களுக்கோ வியப்பு நிலை!

போராளிகள் சொன்ன-
மூன்றுநாள் கெடு முடிந்தது!

மேலும் இரு நாள்களும் முடிந்தது!

அசம்பாவிதங்கள் இல்லை!

போராளிகள் திட்டம்தான் என்ன!?-
அறிய முடியவில்லை!

காதலியின் மௌனம்-
காதலனுக்கு ரணம்!

போர்களத்தில் நிசப்தம்-
எதற்கான முன்னோட்டம்!?

(தொடரும்..!!)


Thursday, 6 March 2014

பிறந்த பூமி !(14)

''பேச்சு வார்த்தைக்கு இடமே இல்லை!
நாட்டையே அழித்தாலும் கவலையில்லை!

மக்ரோனிக்கு உதவவும்!
மறுத்தால் தேச விரோதமாகும்!

இப்படியாக-
 கோபத்தை கொப்பளித்தது கடிதம்!

வேதனைகொண்டது-
கிராசியானி மனம்!

தூக்கமில்லாமல் உருண்டார்!

மனஅமைதி கொள்ளாமல் தவித்தார்!

பத்திரிக்கை முதல் பிரதி-
கிராசியானி பார்வைக்கு வந்தது!

அச்செய்தியை  தடுக்க மனம் மறுத்தது!

வெளியாகி விட்டது!

லிபியாவெங்கும் அதிர்ந்தது!

''விடுதலை போராளிகளின் அறிக்கை!
ஆக்கிமிப்பாளர்களுக்கான எச்சரிக்கை!

லிபிய தேசம்!
எங்கள் சுவாசம்!

சுவாசத்தில் ஆக்கிமிப்பா.!?
அதனை அங்கீகரித்தால் நாங்கள் மனிதபிறப்பா!?

நாட்டை சுரண்டினீர்கள்!
துளியளவு இத்தேசத்திற்காக செலவிட்டீர்கள்!

நன்றியுணர்வு உள்ளது!
அதற்கு அடிமைதனமென்று பொருளாகாது!

அதிகாரம் இத்தேசத்தினரிடம் ஒப்படைக்கப்படனும்!

அப்படியென்றால் நட்பு முறையாவது தொடரும்!

வீரர்களை கொன்றதில் மகிழவில்லை!
வரம்பு மீறுபவர்களை-
நாங்கள் வேடிக்கை பார்ப்பதில்லை!

மண்ணை மீட்போம்!
மடியும்வரை போராடுவோம்!

இத்தேசம் எங்களுக்கானது!
இதனை அடிமைபடுத்த யார் அனுமதித்தது!?

இத்தாலியர்கள் சென்றிட வேண்டும்!
இல்லையாயின் எம்மண்ணிற்கு உங்கள் உடல்கள் உரமாகும்!''

படைகளை திரும்ப பெறுங்கள்!
தவணையோ இன்னும் மூன்று தினங்கள்!

மறுத்தால் மடிவீர்கள்!
விஷத்தையே ருசிப்பீர்கள்!

இனி போராட்டம் ஓயாது!
வெல்லும்வரை அடங்காது!''

அறிக்கை சூளுரைத்தது!

''இனி எதுவும் நடக்கலாம் ''-என
தேசமே முனங்கியது!

மக்ரோனி -
பத்திரிக்கையை நீட்டினார்!

கிராசியானி வாங்கி கீழே வைத்தார்!

''கவர்னர் அவர்களே!
இனி என்ன செய்ய..!?-
மக்ரோனி கேட்டார்!

கிராசியானி தொடர்ந்தார்!

''முசோலினி அவர்கள் புரிந்துக்கொள்ளாதது!
மிகவும் வருத்ததிற்கு உரியது!

விஷயம் எல்லை மீறி விட்டது!
சமாதான முடிவும் இனி நடக்காதது!

உமர் முக்தாரின் சொல்!
கோழைகளையும் வீரனாக்கிடும் மந்திரசொல்!

எல்லோரையும் சந்தேகம் கொள்ளமுடியாது!
விடுதலை போராளிகள் நடவடிக்கை ரகசியமானது!

இம்மக்கள்-
உமர் முக்தாரின் வார்த்தைக்காக காத்திருப்பவர்கள்!

எதையும் செய்ய துணிந்தவர்கள்!''

கிராசியானி சொல்லிக்கொண்டிருந்தார்!

மக்ரோனி ஒரு கேள்வியை முன்வைத்தார்!

''முஸ்லிம்கள் கட்டுபடுவார்கள்!
இங்குள்ள கிருஸ்தவர்கள்,யூதர்கள்..!?

(தொடரும்....!!)



Wednesday, 5 March 2014

பிறந்த பூமி !(13)

ராணுவ வீரர்களின்-
உணவுகள்!
பழங்கள்!
தண்ணீர் குடுவைகள்!

அனைத்திலும் கலந்திருந்தது-
விஷங்கள்!

விஷத்தின் தாக்கம்!

கொடுத்துவிட்டது-
முடிவில்லாத உறக்கம்!

மக்ரோனி-
கிராசியானியை சந்திக்க வந்தார்!

கிராசியானி வரவேற்றார்!

மக்ரோனி-
போராளிகளை திட்டித்தீர்த்தார்!

கிராசியானி பொறுமைக்காத்தார்!

''அடுத்தது என்ன செய்யலாம்..!?-
கிராசியானி கேட்டார்!

''பத்திரிக்கைகள் நாம் கொடுக்கும் செய்திகளைத்தான் வெளியிடனும்!
கலகக்காரர்கள் கை ஓங்கியதை மறைக்கனும்!
அத்துடன் என்னையும் நீங்கள் மன்னிக்கனும்!-
மக்ரோனி சொன்னார்!

அழைப்பு மணி அழுத்தப்பட்டது!

சிப்பந்தி நுழைய கதவு திறந்தது!

''பத்திரிக்கையை கட்டுக்குள் கொண்டுவரவும்!

மருத்துவர்கள் அவசரமாக முகாம்களுக்கு செல்லவும்!''

உத்தரவு இடப்பட்டது!

''பத்திரிக்கை விவகாரம் சாத்தியம்!

மருத்துவர்கள் ''தூனிஸ்''நகர மாநாட்டிற்கு சென்றுவிட்டதால் சிகிச்சையளிப்பது அசாத்தியம்!''

சிப்பந்தி விளக்கினார்!

அனுமதி கிடைத்ததும் விலகினார்!

சென்றார்கள்-
முகாம்களை நோக்கி இருதளபதிகளும்!

வரவேற்றது -
சடலங்களும்!
ரத்த வாந்திகளும்!

ராணுவ மருத்துவர்கள் சிகிச்சையளித்தார்கள்!

விஷத்தின் வீரியத்தை குறைக்க முடியாமல் தவித்தார்கள்!

கவர்னர் கண்கள் கலங்கினார்!

மக்ரோனி வார்த்தையின்றி பற்களை கடித்தார்!

காப்பாற்ற முடிந்தவர்கள் -
மருத்துவ மனைக்கு மாற்றப்பட்டார்கள்!

மரணித்தவர்கள்-
''ஹோம்ஸ்''துறைமுக ''தர்ஹுனா ''எனும் இடத்திற்கு கொண்டு செல்லப்பட்டார்கள்!

சடலங்களை அடுக்கி வைத்தார்கள்!
அடக்கம் செய்தார்கள்!

மக்ரோனி ஆலோசனை கேட்டார்!

கிராசியானி பேச்சிற்கு ஒத்துப்போனார்!

தந்தி மூலம் தகவல்கள் பறிமாற்றம்!

சொல்லப்பட்டது-
தீர்வுக்கு வழி-
 பேச்சு வார்த்தையும்!
உடன்படிக்கையும்!

முசோலினி பதிலனுப்பினார்!

கிராசியானி வெம்பினார்!

''பதில் -
தற்காப்பு கேடயமாக இல்லை!
நஞ்சு தடவிய வேலாக இருந்தது!''

(தொடரும்...!!)


Tuesday, 4 March 2014

பிறந்த பூமி !(12)

''சந்தேக கிராமங்கள் முற்றுகை''!
''பள்ளிவாசல்கள் முற்றுகை''!

வெளியிலிருப்பவர்கள் உள்ளேயும்-
உள்ளே இருப்பவர்கள் வெளியேயும்-
சென்றுவர தடை!

செய்தியை சொல்லியது பத்திரிக்கை!

மக்ரோனிக்கு அழைப்புவிடுத்தார்!

கிராசியானி முன் வந்து நின்றார்!

''ஏன் அவசரப்பட்டீர் !?
ஆபத்தை சந்திக்கவுள்ளீர்!-
கிராசியானி!

''நீங்கள் பேசுவது வியப்பாகவுள்ளது!-
நசுக்குவதுதான் என் இலக்கானது!-
மக்ரோனி!

''அப்பாவிகள் என்ன செய்தார்கள்!?''
கிராசியானி!

''காட்டிக்கொடுக்காததால் அவர்களும் துரோகிகள்''-
மக்ரோனி!

''கடவுளுக்கு பயந்துக்கொள்ளுங்கள்''-
இது கிராசியானி!

''நல்லவேளை கடவுள் நம்பிக்கை எனக்கில்லை!''
இது மக்ரோனி!

''நான் கவர்னர்!
இங்கே நடப்பதற்கெல்லாம் நானே பொறுப்பாவேன்!
என் அனுமதியின்றி நடந்தது தவறு''-
இது கிராசியானி!

''ராணுவ நடவடிக்கை எனக்கானது!
மற்றவர்கள் குறுக்கீடு தேவையில்லாதது!-
இது மக்ரோனி!

பேச்சு காரசாரமானது!

திரும்பி நின்ற கிராசியானிக்கு-
மக்ரோனி கிளம்பியதை  -
காலடி சப்தம் உணர்த்தியது!

மக்களை ராணுவம் ரத்தக்களரியாக்கியது!

தோட்டக்கள் ரத்தங்களைகொண்டு பசியாறியது!

யானைக்காலில் மிதிபட்ட சோளப்பொறி போலவும்!

வெறிநாய்களிடம் சிக்கி வெள்ளாடு போலவும்!

சீரழிக்கப்பட்டார்கள்!
மக்கள்!

மக்களின் வேதனை !
பெரும் சோதனை!

பத்திரிக்கை செய்திகளால் -
கிராசியானி கலங்கினார்!

போராளிகள் பதிலடி கொடுக்கததால்-
''பெரிய அடி '' இருக்கும் என நம்பினார்!

சரிதான்!
அவர் நினைத்தது!

ராணுவ வீரர்களின் -
உயிர்கள் காற்றோடு கலந்தது!

எண்ணூற்றுக்கும் மேற்பட்டோர்கள்!
பலியானார்கள்!

போராளிகள் வாள்களை உருவவில்லை!
துப்பாக்கிகளின் தோட்டாக்களை வீணாக்கிடவில்லை!

பிறகெப்படி!?
அதுதான் அவர்களது அடி!

(தொடரும்...!!)






Monday, 3 March 2014

பிறந்த பூமி !(11)

கிராசியானி-
கையை தூக்கி மரியாதை செய்தார்-
புதிய தளபதி மக்ரோனிக்கு!

மக்ரோனியும் பதிலுக்கு மரியாதை செய்தார்-
கிராசியானிக்கு!

படை அணிவகுத்தது!

நகருக்கள் நுழைந்தது!

கடிதம் தாங்கி வந்த செய்தியானது!

சுருங்க சொல்வதாயின்,
'' கிராசியானி தாளத்திற்கு மக்ரோனி ஆடமாட்டார்!
மக்ரோனி ஆட்டத்திற்கு கிராசியானி தாளம் போடு''-
என்றிருந்தது!

கிராசியானியை -
தளபதி மக்ரோனி சந்தித்தார்!

லிபியா வரைபடத்தை விரித்தார்!

ஆபத்தான பகுதிகளை கேட்டார்!

அதன் மேல் வட்டமிட்டார்!

''ஜெனரல் !
இக்காட்டுமிராண்டிகளை -
உங்களால் ஏன் ஒடுக்க முடியவில்லை''!-
இது மக்ரோனி!

''அவர்கள் அறிவாளிகள்-
அதைவிட ஆபத்தானவர்கள்!-
இது கிராசியானி!

''நான் ஒடுக்கிடுவேன்!
நசுக்கிடுவேன்!-என
சூளுரைத்து சென்றார்-
மக்ரோனி!

தர்ம சங்கடமானார்-
கிராசியானி!

எதிர்கவும் முடியவில்லை!
ஆதரிக்கவும் முடியவில்லை!

உமர் முக்தார்-
என்னை என்ன நினைப்பார்!?

என் நிலையை யார்தான் தெரிவிப்பார்!?

கிராசியானி சிந்தித்தார்!

இமாமை கைது செய்துவர உத்தரவிட்டார்!

தன் நிலைபாட்டை சொல்லதான்!

ஆனால் பரிதாபம், அவர் மசூதியில் இல்லாது போனதுதான்!

மக்ரோனி திட்டத்தோடு வந்தார்!

''ஜெனரல் அவர்களே!
உங்களது பேரால் அறிக்கை வெளியிடுங்கள்!

ஆயுதங்கள் மௌனிக்கனும்!
போராட்டக்காரர்கள் சரணடையனும்!

பொதுமக்கள் ஒதுங்கி விடுங்கள்!

போராட்டக்காரர்களுக்கு உதவினால் அவர்களும் தேசதுரோகிகள்!

களையெடுக்கப்பட போகிறார்கள்!
போராட்டக்காரர்கள்''!

வெளியிட வேண்டியதை சொல்லி முடித்தார்-
தளபதி மக்ரோனி!

அதிபரிடம் பேசிக்கொள்வோம்!
அமைதியாக போராட்டத்தை முறியடிப்போம்!

ஆவேசம் வேண்டாம்!
ஆபத்தில் முடிந்திடும் ஆதலால் வேண்டாம்!
இது கிராசியானி!

மக்ரோனி விடுவதாக இல்லை!
கிராசியானி ஒத்துக்கொள்வதாக இல்லை!

கோபத்துடன் கிளம்பினார் மக்ரோனி!

விபரிதத்தை தடுக்க முயன்றார் கிராசியானி!

ஆனால்-
முசோலினை தொடர்புகொள்ள இயலவில்லை!

வரப்போகும் பேராபத்தை தடுக்கவும் வழி தெரியவில்லை!

பொழுது விடுகிறது!

செய்திதாள் காற்றிற்கு படபடக்கிறது!

கிராசியானி -
பத்திரிக்கையை பார்த்ததும் பதறினார்!

உச்சந்தலையில் ஆணி இறங்குவது போலவும்!

உள்ளங்கையில் ''தீக்கங்கை'' மூடிகொண்டதை போலவும்!

(தொடரும்...!!)





Sunday, 2 March 2014

பிறந்த பூமி !(10)

ஜெனரல் கேட்டார்!

''இத்தனையும் அறிந்த நீங்கள்..!
பேச்சு வார்த்தைக்கு உடன்பட்டதின் காரணங்கள்!?

உமர் முக்தார் ஆரம்பித்தார்!

''ஜெனரல் நீங்கள் !
சுத்தமான வீரர் என்பதும்-
பேச்சு வார்த்தை ஏய்ப்பு என்பதும்-
எங்களுக்கு தெரிந்தவைகள்!

மக்களோ அறியாதவர்கள்!
எங்கள் போராட்டத்தை கலகமாக எண்ணிடுவார்கள்!

ஆதலால் -
உங்கள் வழியில் வந்தோம்!

இப்போது-
மக்களும் உணர்ந்திருவார்களென நம்புகிறோம்!

மீன் முள்ளொன்று தொண்டையில் குத்திக்கொண்டது போல்!

ஜெனரலுக்கு வேதனை தந்தது-
உமர் முக்தாரின் பதில்கள்!

முக்தார் அவர்களே!
உங்கள் முகம் காண வேண்டுகிறேன்!
வஞ்சகம் இல்லாமல் கேட்கிறேன்!
ஜெனரல் கேட்டு நின்றார்!

முக்தார்-
ஜெனரலின் கண்களின் வழி-
மனதை படித்தார்!

''நாம் பேச்சுவார்த்தை தோல்வியில் பிரிகிறோம்!

என் முகம் பார்ப்பதால் மக்களுக்கு என்ன நன்மையாக்க போகிறோம்!?

முகம் காட்ட மறுத்தார்!

வற்புறுத்த விரும்பாமல் ஜெனரல் நின்றார்!

அனைவரும் எழுந்தார்கள்!

களைந்திட நின்றார்கள்!

ஜெனரல் கேட்டார்!

''உமர் முக்தார் அவர்களே!
எப்போதும் கேட்கலாம்-
என்னிடம் உங்களுக்கு உதவி வேண்டுமானால்!

உமர் முக்தார் சொன்னார்!

உங்கள் ஆட்சியை தக்க வைக்க உங்கள் போராட்டம்!

பிறந்த மண்ணை மீட்க எங்கள் போராட்டம்!

உங்களிடம் போராட்டக்குழு கருணையை எதிர்ப்பார்க்கவில்லை!

மண்ணின் விடுதலைக்காக நாங்கள்  மரணிக்கவும் தயங்கவில்லை!

ஆனால்-
அப்பாவிகளான மக்களைத்தண்டித்து பாவிகளாகாதீர்கள்!

இதுவே என் வேண்டுகோள்!

உமர் முக்தார் முடித்தார்!

''எனக்கு அதிகாரம் இருக்கும்வரை அப்பாவிகளுக்கு அநீதி நடக்காது!-என
ஜெனரல் சொல்லி முடித்தார்!

குதிரைகள் வந்த திசைகளில் சென்றது!

மறைந்தது!

ஓரிரு நாட்களாது!

இத்தாலிய போர்க்கப்பல் துறைமுகம் வந்தது!

ஆறு டிவிஷன் படைகள்!

புதுரக துப்பாக்கிகள்!

கனரக வாகனங்கள்!

வந்துவிட்டது ஏராளமானவைகள்!

இத்தாலிய தேசியகீதம் ஒலித்தது!

அத்தனைபேரின் சப்த நாளங்கள் அடங்கியது!

கொடிக்கு வணக்கம் செலுத்தினார்-
புதிதாக வந்த மேலதிக தளபதி!

கிராசியானியிடம் நீட்டினார் அரச முத்திரையிட்ட கடிதத்தை!

வாங்கினார்!

பிரித்தார்!

பாதாளத்தில் விழுவதாக உணர்ந்தார்!

(தொடரும்...!!)


Saturday, 1 March 2014

பிறந்த பூமி !(9)

மண் கடல் போல்-
காட்சி தந்தது பாலைவனம் !

நடுவில் மட்டுமே-
ஒரு கூடாரம்!

மணி பணிரெண்டு!

நேரம் சென்றது-
வினாடிகளாக கழிந்துக்கொண்டு!

காத்திருந்தார்கள்-
ஜெனரலும்!
மற்ற இருவரும்!

பார்வை விரித்திருந்தார்கள்-
வழியெங்கும்!

வருகிறது-
புழுதியை  கிளப்பியபடி!
குதிரைகளின் காலடி!

மூன்று திசைகளிலிருந்து குதிரைகள்!
அளவிட்டதுபோல் ஒன்றாக சேர்ந்தார்கள்!

வந்தனர் மூவர்!
மரியாதை செய்தனர்!

அமரச்சொல்லி கைகாட்டினார்-
ஜெனரல்!

இடம் மாறி அமரலாமே!?-
இது வந்தவரில் ஒரு குரல்!

இடம் மாறி அமர்ந்தார்கள்!

நான் ஜெனரல் கிராசியானி!
இவர்கள் என் மெய்ப்பாதுகாவலர்கள்!

நான் உமர்முக்தார்!
இவர்கள் என் நண்பர்கள்!

''ஆண்களுக்கு முகத்திரை தேவையா..!?-
புருவங்களை கவனித்துக்கொண்டே-ஜெனரல் கேட்டார்!

''கண்களையும் ,புருவங்களையும் வைத்தே-
கண்டுபிடிப்பவர்களிடம்-
முகத்திரையணிவது தவறா..!?-
இது உமர் முக்தார்!

ஜெனரல் பொய் சிரிப்பை தவழ விட்டார்!

''முகம் பார்த்து பேசினால் சிறப்பாக இருக்குமே..!?-
ஜெனரல் கேட்டார்!

''முகம் திறந்து பேசுவதை விட-
மனம் திறந்து பேசுவது சிறப்பு.!-
இது உமர் முக்தார்!

ஜெனரல்!
''பேச்சு வார்த்தைக்கு வருவோமே..?''

உமர் முக்தார்-
''எதன் அடிப்படையிலென்றால் சிறப்பாக இருக்குமே..!?

ஜெனரல்-
''பத்திரிக்கைகளில் அறிக்கை பார்த்திருப்பீர்களல்லவா..!?

உமர்-
''முழுவதுமாக நம்ப கூடியதாக இல்லையல்லலா..!?

பேச்சு வார்த்தைக்கு அழைப்பு விட்டீர்கள்!

ஏன் ''உமர் முக்தார்''பெயருடையவர்களை விசாரித்தீர்கள்!

இதுவரை லிபியாவிற்கு வந்தது இரண்டு டிவிஷன் படைகள்!

ஒவ்வொரு முறையும் இதுவே அளவுகோல்கள்!

நீங்கள் கேட்டுள்ளது ஆறு டிவிஷன் படைகள்!

படைகள் சில நாட்களில் வந்துவிடும்!

அதுவரைக்கும் இது பேச்சுவார்த்தையெனும் நாடகம்!

உமர் முக்தார் -
அடுக்கி சென்றார்!

''எங்கள் பாதுகாப்பிற்காக படை வருகிறது..!
நீங்கள் ஆயுத கிடங்கை சூறையாடியதால் இந்நிலையானது!-
சொன்னார் ஜெனரல்!

''ஆயுதக்கிடங்கை சூறையாடினோம்!
எங்கள் தற்காப்பிற்காக எடுத்தோம்!

ஏன் காயம்பட்டவர்களை நாங்கள் சுடவில்லை!

இன்னும் எங்கள் நெஞ்சில் ஈரம் காயவில்லை!

ஆயுத போராட்டத்தில் எங்களுக்கு நம்பிக்கையில்லை!

எங்களை யாரென்று உணர்த்துவதற்காகவே துப்பாக்கி தூக்க வேண்டிய நிலை!

தற்போதுகூட தலைநகரை கைப்பற்ற முடியும்!

தற்காப்புக்கு கூட உங்கள் படைகளிடம் ஆயுதப்பற்றாக்குறை என்பதும் தெரியும்!

திட்டுத்தோட்ட சண்டையில் உங்களுடனிருந்த சிறுபடையையும் தீர்த்திருக்க முடியும்!

தோட்டத்தில் நுழைந்த உங்களை சுட்டிருக்க முடியும்!

கிணற்று வாளியை எடுத்துச்சென்றிருக்கலாம்!

கிணற்று நீரில்  விஷத்தையும் கலந்திருக்கலாம்''

உமர் முக்தார் -
அடுக்கடுக்கான வார்த்தைகள்!

ஜெனரலுக்கோ-
மனதோடு உறுத்தல்கள்!

முடிவுதான் என்ன!?
இது முடியகூடிய விஷயமா என்ன!?

(தொடரும்...!!)