Sunday 17 February 2013

வினோதினிகள்....!!

வினோதினியே!
வீணானவனால்-
எரிக்கப்பட்ட-
பூவே நீ!

ஜனநாயகத்தை-
பண நாகம்-
விழுங்குவது போல!

கொலைகாரனும்-
ஒரு தலை காதலென-
சொல்கிறான் போல!

உன்னை போலவே-
சிதைக்கப்பட்ட-
எரிக்கப்பட்ட-
வினோதினிகள்-
எத்தனையோ!?

டெல்லி சம்பவத்தால்-
"துள்ளியவர்கள்"-
"பல வினோதிகளுக்கு"-
மௌனிப்பது-
உணர்த்துவது-
அவலத்தையே!

நீ!
என்ன சாதி-
மதம்-
எனக்கு -
தெரியாது!

அதையெல்லாம்-
பார்த்து விட்டு-
உனக்கு -
ஆதரவென்றால்-
நான் மனித ஜென்மமே-
கிடையாது!

ஒரு தலைபட்சமான-
காலமிது!

மற்றவர்களை பற்றிய-
கவலையேது!?

இப்படியாக-
இருந்தே விட்டால்-
நம் வீடும்-
"அத்தீமைக்கு"-
இரையாகும்-
இதில் மறுப்பேது!?

நீ!
இறந்தாய்!
வினோதினியே!
சகோதரியே!

உன்னை போன்றவர்களை-
காவு வாங்கியவர்களை-
தண்டிக்காதவரை-
நீதிகளும்-
இருக்கும் இடம்-
புதை குழியே!
-------------------------
// வினோதினி சம்பவத்திற்கு-
குற்றவாளிகளை தண்டிக்க சொல்லி ஆர்பாட்டம் நடத்தியர்களாக முக நூல் வாயிலாக அறிந்த ஒரு அமைப்பு-
"நேஷனல் விமன்ஸ் ப்ரண்ட் "
அவர்களுக்கு நன்றி!

வேறு எந்த அமைப்பாவது நடத்தி இருந்தால் எனக்கு பின்னூட்டம் இடுங்கள் .இணைக்கிறேன்!////

11 comments:

  1. baalan sako...!

    nalla irukkiyalaa.....!?

    neenga vanthamikku mikka nantri anne..!

    ReplyDelete
  2. உணர்வு பூர்வமான பதிவு..... இதுபோன்ற நல்ல பதிவுகளை தர சீனிக்கு நிகர் சீனிதான்.... வாழ்த்துக்கள் தோழரே.... உங்கள் பணி சிறக்கட்டும்.

    ReplyDelete
  3. நெஞ்சம் கனத்துப் போனது.

    ReplyDelete
    Replies
    1. sasi sako..!

      unmaithaan...


      varavukku mikka nantri!

      Delete
  4. உண்மைதான்! தமிழகப் பெண்ணுக்கு நடந்த அநீதிக்கு நீதி கேட்டவர்கள் குறைவு! சிறப்பான படைப்பு! நன்றி!

    ReplyDelete
  5. இரத்தக் கண்ணீர் சிந்த வைத்த சம்பவமும் கவிதையும். விழியோர நீரால் பெண்ணினம் சார்பில் சீனி அவர்களுக்கு நன்றி எழுதுகிறேன்.

    ReplyDelete
    Replies
    1. aathiraa sako..!

      karuthirkku mikka nantri!

      aaninamum penninamum ore manitha inamthaane...

      Delete
  6. கவிதை நெகிழ வைத்தது.வினொதியின் பேச்ச்சினை யூ டியூபில் கேட்டு விட்டு மனம் கலங்கிப்போனேன்.

    ReplyDelete
    Replies
    1. sadiqa sako..!

      mikka nantri!

      naan seythi padiththathu mattume....

      Delete