Sunday, 8 July 2012

பசியிலிருந்து...



அரக்க பறக்க-
ஓடுகிறோம்-
வாழ்நாள்-
முழுவதும்!

ஒரு கணமாவது-
நிதானித்திட-
மறக்கிறோம்!

சிலர் வாழ்வதற்காக-
பணத்தை தேடி கொண்டு!

பலர் பணத்தினுள்-
வாழ்வை தேடி கொண்டு!

உச்சி வெயிலின்-
உக்கிரத்தை -
அனுபவிக்காதவர்கள்-
உண்டோ!?

பசியில் கொதிக்கும்-
வயிற்றின் வலியை-
அறிந்தவர்கள்-
நம்மில் எத்தனை பேர்-
உண்டோ!?

"குடிச்சவனுக்கு"-
தெரியாது-
சாக்கடையும்!
சந்தனமும்!

பசியில இருக்கும்-
உறவுகளை-
மறக்கலாமோ-
பந்தங்களும்!
பாசங்களும்!

முதியோர் இல்லங்கள்-
பெருகி வரும்-
காலம் இது!

"முடியாதவர்களையா-"
கவனிக்க போகுது!?

அன்று -
தானிய அமைச்சர்-
அதிகமாக நோன்பிருந்தார்!

பிரதானிகளில்-
ஒருவர்-காரணம்
அறிய ஆவல் கொண்டார்!

பதிலும் கிடைத்தது-
நான் பசியின் -
வலி அறிந்தால்தான்-
மக்களின் பசியை-
புரிந்து கொள்ள முடியும்-
என்றார்!

இன்று-
"விலைவாசியை கட்டுபடுத்த-
என்னிடம் மந்திர கோல் இல்லை"

"தானியங்களை பாதுகாக்க-
சாக்குகள் இல்லை"-என
"பொறுப்பாக(!!!)-
பதிலுரைத்தவர்!

இவரை ஆதரிக்கும்-
ஒரு அணி!

"இருப்பதை"-
இடிப்பார்கள்!

"இல்லாததை"-
இருக்கு-என்பார்கள்!

சேது திட்டத்திற்கு-
பாதை - திட்டங்கள்-
வகுத்தவர்கள்!

ஆட்சி இழந்ததும்-
"சேதுவுக்கு" மத-
சாயம் பூசுபவர்கள்!

இவர்கள்-
ஆதரவில்-
ஒருவர்!

இது மற்றொரு-
அணி!

"இவர்கள்"-
"ஆண்ட போதும்"-
"ஆளும்போதும்"-
மாறிடவில்லை!

நாட்டின்-
நிலை!

இவர்கள் ஆதரிப்பவர்களால்-
மாறும் என-
நம்பலாமோ!-
இனி!?

ஆண்டிடும் காலம்தான்-
வாராத -
"பசியிலிருந்து விடுதலை"-
தர ஒரு அணி....!!


Friday, 6 July 2012

கருணையிலுமா கபடம்...!?



எத்தனையோ-
மாற்றம்-
உலகிலே!

எப்போதுதான்-
மாறுமோ-
அநீதிகளே!

கடுமையாக -
நடத்தபட்டார்கள் -
கைதிகள்!

நம் பார்வைக்கு-
சுதந்திர தியாகிகள்!

வெள்ளையர்களுக்கு-
அடிமைகள்!

"அவர்கள்"ஏற்றிய-
கொடும்சட்டங்களே!

இன்றும் -
நடை முறையிலே!

அது சரி!

என்ன வித்தியாசம்-
வெள்ளைகாரர்கள்-
அடக்கு முறைக்கும்!
இப்போது-
"இருப்பவர்களுக்கும்"!

அன்றைக்கு-
அரிக்கேன் விளக்கு-
போராட்டம்-
நடந்துச்சி!

இன்றைக்கு-
சிறை நிரப்பு போராட்டம்-
நடந்துச்சி!

இரண்டுக்கும்-
என்னய்யா வேறு காரணங்கள்-
சொல்லபட்டுச்சி!?

இன்று -
சிறு மாற்றம்!

"ஆட்சி"!
"கட்சி"!

மாறியதா-?
ஜனங்களின்-
அவல காட்சி!?

எரி பொருள்-
ஏறுதாம்-
எகிறுது தேசிய-
எதிர்க்கட்சி!

விலையை நிர்ணயிக்க-
பெட்ரோலிய நிறுவனங்களுக்கே-
அனுமதி கொடுத்தது-
மக்கா!
மறந்தா போச்சி!?

ஸ்விஸ் வங்கி -
கருப்பு பணத்தை-
கொண்டு வருவாங்களாம்!

"போட்டதெல்லாம்-"
யாருங்கய்யா!,?

சுப்பனும் -
குப்பனுமாய்யா!?

மாறி மாறி-
ஆட்சி பண்ணுவீங்க!

தேர்தல் நேரத்துல-
வீர வசனம்-
பேசுவீங்க!

மக்கள் வாயில-
மண்ணை அள்ளி போடுவீங்க!

எப்படியோ-
போங்க!

தலைவர்கள் பிறந்தநாள்-
பொது மன்னிப்பில்-
"பொதுவாக" நடந்துக்கங்க!

7 வருட சிறைவாசிகள்-
பொது மன்னிப்பில்-
இடம் பெறலாம்!

அதுலயும்-
ஏன் முரண்பாடாம்!

சிறப்பு சலுகை-
கேட்கவில்லை!

அச்சலுகையில்-
சிறுபான்மையினர்களுக்கு-
ஏன் இடம் இல்லை....!?


(அர்ப்பணம்; சிறைகைதிகளுக்காக போராடும்
நல்லுள்ளங்களுக்கு...)

Thursday, 5 July 2012

பருவத்திலே.....



காற்றின் ஈரப்பதம்-
மேகமாகிறது!

மழையோ-
"பருவம்"தவறினால்-
விவசாயி கன்னம்-
ஈரமாகிறது!

விவசாயிகள்-
நாட்டின் முதுகெழும்பு-
என்றார்கள்!

அதனால்தானோ-
"வளைத்து" விட்டார்கள்!?

விதைக்கிறவர்களே!

மண்ணிலே!

தேடுகிறீர்கள்!
மானுடத்துக்கு-
உணவு தானியங்கள்!

உங்கள் வாழ்வோ-
இடர்பாடுகளிடையே!

மண்ணோட -
மலந்து கிடக்க-
மது குடிக்கிரவனும்-
விக்கிரவனும்!-
அடங்கி விடுகிறான்-
கௌரவம் என்ற-
பேரிலே!
-----------------------

"பருவம் "வந்த பெண்ணை-
கரை சேர்க்க முடியாமல்!-
ஏழை தகப்பன்களின்-
கண்களே குளமாகுது!

ஏழ்மை சகோதரிகள்-
இளமையோ-
எரிதணலில் இட்ட-
தாளாகுது!

உழவெடுக்க!
வண்டி இழுக்க!

பந்தயம் ஓட!
ஜல்லி கட்டில் ஓட!

வித விதமான-
மாடுகள் விற்பனைக்கு-
சந்தையிலே!

நடு நிலை பள்ளி!
உயர் நிலை பள்ளி!

பட்டதாரி!
"பட்டத்துல" பாதி!

உள் நாடு!
வெளி நாடு!

விலை வித்தியாசப்படும்-
மாடுகள் -மன்னிக்கவும்-
மாப்பிள்ளைகள்-
விற்பனையிலே!

வளர்த்தவர்களுக்கு-
என்ன?-
உரிமை இருக்கு!?

மாடோ-
மகனோ-
போன பிறகு-
விற்பனைக்கு!

தாரை தப்பட்டைகளின்-
சப்தத்துக்கு பயந்து ஓடி-
மாட்டிடும்-பலம் கொண்ட-
யானைகள் கூட்டம்!

காசை பார்த்து-
ஆசையில் மயங்கி-
தன் மானத்தை-
இழக்கலாமோ-!,?
இளைஞர் பட்டாளம்!
-------------------------




Wednesday, 4 July 2012

மகளே...



என் உயிரின்-
வழி வந்த-
உயிரே!

உயிரணு ஒன்னை-
உருவமாக்க இடம்-
தந்தவளின் -உரு
கொண்டவளே!

என் வாழ்வு-
விளங்கவில்லை-உன்
தாய் "வரும்வரை!"

என் தாயின் பாசம் -
புரியவில்லை- நீ!
எனக்கு மகளாக-
பிறக்கும் வரை!

பாடசாலை கேள்வியை-
என்னிடம்- கேட்பாய்!

தெரியாததுபோல்-
தலை அசைத்தால்-
"ஐயோ" என செல்லமாய்!

உன் தலையிலேயே-
தட்டி கொள்வாய்!

என் தாயிடம்-
அதே கேள்வியை கொண்டு-
செல்வாய்!

என் தாயோ-
வாழ்வில் பாடம்-
படித்தவள்!

வகுப்பு பாடம்-
அறியாதவள்!

என் தாயோ தெரியாது என-
தலையாட்டினாள்!

யாருக்குமே தெரியல-
என- சொல்லி கொண்டு!

பதிலை நீயே -
சொன்னாய்-
அதட்டி கொண்டு!

இங்கே நீ!
ஆசிரியை ஆனாய்!

என் தாயோ-
மாணவி ஆனாள்!

கேட்பதுண்டு-
சிலர்!

சந்தோசம் கிடைப்பது-
வெற்றியிலா! ?

தோல்வியிலா!?

வித்தியாசப்படும்-
யாரிடம் தோற்கிறோம்-
என்பதிலே!

இதுவே -
என் பதிலே!

கல்வி கற்பதில்தான்-
உள்ளது- கண்ணியம்!

ஆடை குறைப்புதான்-
சுதந்திரம் என்பது-
போலி பெண்ணியம்!

சீன தேசம் சென்றேனும்-
சீரிய கல்வியை தேடு-
நபிகளார் மொழி!

"அறியாதவர்கள்"-
விமர்சனத்திற்கும்-
அடைத்து வைப்பவர்களுக்கும்-
நபிகளார் மீதா!?-
பழி!?

என் ஈராக்குலைகலான-
பெண் குழந்தைகளே!

இன்று-
உலகில் சுதந்திரம்-
என்ற -மாயை உள்ளது!

அது-
"எப்படியும்" வாழலாம்-
என்கிறது!

வாகனம் ஓட்டுபவனுக்கே-
கட்டுபாட்டு விதிகள்-
இருக்கு!

கட்டுப்பாடு -
தேவையில்லையோ-
மனித வாழ்விற்கு!?



Tuesday, 3 July 2012

யாரடி  நீ.....!?



பாலையில்-
மழையா-நீ!?

மழையில்-
அனலா-நீ!?

சாலையில்-
வேக தடையா-நீ!?

வேக தடை-
இல்லாத-
சாலையா-நீ!?

உப்பு கரிக்காத-
கடலா-நீ!,?

இனிக்கும்-
உப்பு கல்லா-நீ!?

முற்கள் இல்லாத-
மலர்வனமா-நீ!?

முள்ளில் உள்ள-
மலரின் மென்மையா-
நீ!?

கண்ணில் பட்டும்-
காந்தாத -
சலவை கட்டி-
நுரையா-நீ!?

நுரைகளால் செய்யப்பட்ட-
தொழில் நுட்ப-
"தோகையா"-நீ!?

"நீலம்" இழந்த-
வானமா-நீ!?

"நீளம்" இல்லாத-
கடலா-நீ!?

உள்ளிழுக்காத-
புதை குழியா-நீ!?

மேல்நோக்கி பாயும்-
அருவியா-நீ!?

தலை கீழாக-
எரியும் குத்து விளக்கா-நீ!?

வன்முறை செய்யும்-
காந்தியின் கைத்தடியா-நீ!?

அகிம்சை பேசும்-
அணுகுண்டா-நீ!?

ஏறுக்கு மாறாக-
சிந்திக்க வைத்தாயடி-
நீ!!

இனி-
நேருக்கு நேராய் -
என் முன்னால்-
வராதடி-நீ!!




Monday, 2 July 2012

செஞ்ச பாவம்தான் என்ன....?(2 )



விடுதலை பெற்ற-
அறுபது ஆண்டிலேயே!

என்ன மாற்றம்-
வந்துவிட்டது-
நாட்டிலே!?

தேசம் என்றால்-
அனைத்து மக்களும்-
வாழத்தானே!?

ஓன்று மட்டும்-
வாழ மற்றதெல்லாம்-
அழிந்திடனுமோ!?

ஒன்றை கொன்று-
மற்றொன்று வாழ்வது-
காடு!

ஒரே பக்கம் வளர்ச்சி-
அனைத்து பக்கமும்-
தளர்வதா-நாடு!?

ஒன்று-
மக்களுக்கு வாழ-
வழி செய்யுங்கள்!

அல்லது-வாழ நினைப்பவர்களின்
வழியை -
மறைக்காதீர்கள்!

உரிமை கேட்டால்-
"பிரிவினை "-என
பிதற்றுகிறார்கள்!

அரசுகளே! நீங்களே-
நியமித்த "கமிசன்கள்"-
சொல்லவதையும்-
மறுக்குறீர்கள்!

அல்லது-
மறந்து விடுகிறீர்கள்!

ஆந்திரா தந்த-
இட ஒதுக்கீடை-
நீதி மன்றம் தடுக்குது!

"மதவெறி நாயகர்கள்"-
வழக்குகள்-
கிடப்பில் கிடக்குது!

நீதி தேவதை-
கண்களை கட்டி உள்ளது!
பாரபட்சம் பார்க்க -
கூடாதென்பதற்கா!?

இல்லை - குருடாகவே
உள்ளதை -
மறைப்பதுக்கா!?

ஏன் இப்படி-
ஒடுக்கபடுகிறது-
சமூகம்!?

எதற்கு-
ஒடுக்குதலை -செய்கிறது
அரசு நிர்வாகம்!

வாழ வழி-
இல்லை!

வேலை-
வாய்ப்பில்லை!

படிக்க-
இட ஒதுக்கீடு-
இல்லை!

ஆனால்-
குற்றமற்றவனுக்கும்-
இடம் இருக்கு-
சிறைகளிலே!

உண்மை-நிரந்தரமா
உறங்காது!

பொய்கள் எந்நாளும்-
பொழைக்காது!

சத்தியம்-
சாகாது!

அசத்தியம்-
நீண்ட காலம்-
வாழாது!

(குறிப்பு;மகாராஷ்ட்ராவில் உள்ள பதினைந்து
சிறைகளில் அடைபட்டு கிடக்கும்-
மூவாயிரம் முஸ்லிம் கைதிகளில் 70 சதவிகிதம் பேர் நிரபராதிகள்.25 .4 சதவிகிதம் வழக்காட வழக்கறிஞர் கூட இல்லை.ஆதாரம் ;Tata institute of social sciences (TISS) ஆய்வு செய்தது ;)



Sunday, 1 July 2012

செஞ்ச பாவம்தான் என்ன...?(1 )



இம்மண்ணில் -
பிறந்ததா!?

இம்மண்ணை -
நேசிப்பதா! ?

எம்மண்ணில் நாம்-
பிறக்கணும் என-
முடிவெடுக்க முடியாததா!?

சிறுபான்மை-
மக்களாக-
இருப்பதா!?

பெரும்பான்மையாக-
சுதந்திரத்திற்காக-
மடிந்ததா!?

ஷாஜகான்-
நாட்டுக்கு தலைநகர்-
டில்லியை உருவாக்கியதா!?

வருமானம் கொட்டும்-
தாஜ் மகாலை-
கட்டியதா!?

ஆட்சி மாறும்போதெல்லாம்-
காட்சி மாறால்-
கொடியேற்ற உதவும்-
செங்கோட்டை அமைத்ததா!?

கப்பம் கட்டிய-
கோழைகளிடையே-
கடும்சினம் கொண்டு-
பகதூர் ஷா-விடுதலைக்காக
வீறுகொண்டதா!?

சிறையில் கிடைக்கையிலே-
தன் தவ புதல்வங்கள்-
தலையை தாம்புலதட்டில்-
கண்டும் கலங்காமல்-
இருந்ததா! ?

போராளிகள் இப்படிதான்-
காட்சி அளிப்பார்கள்-என
அவர் மகிழ்ச்சியுற்றதா!?

மரணதருவாயிலும்-
அடக்கம் செய்ய இந்தியாவில்-
இடம் இல்லையா!?-என
கலங்கியதுவா!?

"அடிபடிந்தவர்களின்"-
வாரிசுகள் - அரசபரம்பரை
என பந்தா செய்வதா!?

பகதூர் ஷாவின் குடும்பம்-
இன்றும் வாடகை வீட்டில்-
இருப்பதா!?

கவச உடைகூட-
அணிய கால அவகாசம்-
எடுத்துகொள்ளாம-"திப்பு"
போராடி மடிந்ததுவா!?

வலிகள்தான்-
எத்தனை!

வலைபதிவு-
உணருமா-!?அந்த
வலிகளை!?

(தொடரும்......)