Saturday, 8 December 2012

முகலாயர்களே....(1)

முகலாயர்களே!
ராஜபுத்திர-
அரசர்-
அழைத்ததால்-
பாரதம்-
வந்தீர்கள்!

வந்த-
நீங்கள்-
கொள்ளையா-
 அடித்தீர்கள்!?

உங்கள்-
தேசமான-
காபூலுக்கா-
கொண்டு சென்றீர்கள்!?

இல்லையே-
இங்குதானே-
இருந்தீர்கள்!

மண்ணோடும்-
மக்களோடும்-
மலர்களாக-
மணம் வீசினீர்கள்!

அரண்மனைகளையும்-
ஏன்!?-
இன்றைய தலைநகர்-
நிர்மானித்தவர்களும்-
நீங்கள்!

செங்கோட்டையில்-
கொடியேற்றுவார்கள்-
சுதந்திர-
தினத்தன்று!

அது-
நேதாஜி அவர்களின்-
ஆசை என்று!

செங்கோட்டையின்-
சொந்தங்களுக்கு-
இடஒதுக்கீடு கூட-
கிடைக்க மறுக்குதே-
இன்று!

வெள்ளையன்-
கொள்ளையிட-
வந்தான்-
நம் -
தேசத்தை!

அப்போது-
ஆண்ட நீங்கள்-(முகலாயர்கள்)
வளமிக்க நாடாக-
மாற்றி இருக்குறீர்கள்-
நம் தேசத்தை!

அப்படிஎன்றால்-
நால்லாட்சிதானே-
ஆண்டிருக்கும்-
நம்-
தேசத்தை!

அப்போது-
ஏன்-
நீங்கள்-
கொடுங்கோலர்கள்!

கொள்ளையிட்டு-
அடிமைபடுத்திய-
வெள்ளையர்கள்-
நாகரீக -
புருஷர்கள்!

கூப்பிட்டதால் வந்த-
நீங்கள்-
"படை எடுத்தவர்கள்"!

சுரண்ட வந்த-
வெள்ளையர்கள்-
"வருகை புரிந்தவர்கள்"!

இவ்விசத்தை-
சுமக்கிறது-
பாட புத்தகங்கள்!!

ஏன்-
இந்த-
விஷ வித்துகள்!

ஒரு-
சமூகத்திற்கு-
எதிரான-
வன்மங்கள்!

(தொடரும்...)





Friday, 7 December 2012

வெளிச்சங்கள்"! (10)

"நடந்த காரியங்களுக்கு"  -
காரணத்தை-
கண்டறிந்தவன்-
நீ!

எல்லாம்-
"செய்து விட்டு"-
எதுவும் -
தெரியாததுபோல்-
திரிந்தவர்கள்-
தெருவுக்கு-
இழுத்தவன்-
நீ!

"காவலாளிகள்"-என்று
சொல்லி கொண்டிருந்தவர்களை-
காவாளிகள்-என
உலகிற்கு காட்டியவன்-
நீ!

எங்கிருந்து-
தொடங்குது-
ஏன் -
தொடர்கிறது-
என்பதற்கு எல்லாம்-
பதிலை-
படித்தவன் -
நீ!

தேசபக்தன் -என்று
"மெச்சி" கொண்டவர்களை-
நெஞ்சி சட்டையை-
பிடித்து இழுத்தவன்-
நீ!

அநியாங்கள்-
சுமத்தப்பட்ட-
சமூகத்தை -
சுத்தம்-
செய்தவன்-
நீ!

தப்பு செய்த-
உண்மை குற்றவாளிகளை-
தண்டிக்கணும்-என்ற
நெஞ்சழுத்தம்-
கொண்டவன்-
நீ!

மர்மங்களை-
மறைக்காமல்-
வெளியுலகிற்கு-
சொன்னவன்-
நீ!

ஏதோ-
ஒன்றை மறைக்க-
எங்கோ ஓன்று-
நடக்க-
சம்பந்தபடுத்தி-
பார்த்தவன்-
நீ!

உன் மரணத்திலும்-
மர்மங்களை-
மறைத்து கொண்டே-
மறைந்து-
விட்டாயே!
நீ!

நீ!
வீரன் அல்ல-
மாவீரன்-
ஹேமந்த் கர்கரே-
நீ!

உன்னை போன்ற -
ஒரு சில-
வீரர்களால்தான்-
நீதி-
இன்னும் -
சாகாமல்-
இருக்கு!

உன்னை போன்றவர்கள்-
"நடவடிக்கைகள்-"
பலரின் தூக்கத்தை-
"கெடுத்து இருக்கு"!

எங்கிருந்தோ-
வந்தவனுங்க-
"உண்ம்மையை" சொன்ன -
உன்னை கொன்றதுதான்-
மர்மமாகவும்-
சந்தேகங்களையும்-
புதைத்து-
இருக்கு....!!!!!

---------முற்றும்-----

Wednesday, 5 December 2012

வெளிச்சங்கள்"! (9)

"இருந்ததை"-
இடித்தார்கள்!

"இல்லாததை-"
இருக்குது-
என்கிறார்கள்!

அரசே-
கமிசன்கள்-
அமைத்தார்கள்'

உலக சாதனைக்கு-
பதியலாம்-
அத்தனை-
தவணை -
நீட்டிப்புகள்!

அக்கமிசன்-
சொன்ன-
முக்கிய -
குற்றவாளிகள் மேல்-
பாய மறுக்குது-
வழக்குகள்!

அப்போ-
எதற்கு-
நடத்திட-
உத்தவு-
பிறப்பிக்கணும்-
கமிசன்கள்!

தெரியாமல்-
நடந்தால்-
விபத்தினால்-
மரணம்!

அனைவரும்-
பார்க்க-
நடந்ததுவோ-
அக்கிரம-
கொலைவெறியாகும்!

எல்லோரும்-
பார்க்க!

அரசுகளும்-
மௌனிக்க!

பாதுகாப்பு-
படைகளும்-
கண்ணை-
மூடி கொண்டிருக்க!

நடந்து-
முடிந்தது-
அச்சம்பவம்!

குத்தி-
கிழித்து-
தொங்கி கொண்டிருக்கிறது-
மதசார்பற்ற நாடு-என்ற
சொல்லாகும்!

உலகே-
தேசத்தை-
அகிம்சை-
பூமி-
என்றது!

இல்லை-
இனி-
அடாவடி பூமி-என
இச்செயல்-
சொல்லி சென்றது!

"மாட்டிறைச்சி -
சாப்பிடுவதை-
நிறுத்தி விடு-
இம்மக்கள் -
மாடுகளை-
புனிதமாக-
கருதுகிறார்கள்-என
தனயன்-
ஹுமாயுனுக்கு-
அறிவுறுத்திய-
பாபரே!

புனிதமாக-
மதிப்பதை கூட-
தவிர்க்க சொன்ன-
நீயா!!

அம்மக்கள்-
உயிராக
மதிக்க கூடிய-
வழிபாட்டு தளத்தை-
இடித்திருப்பாயா!?

அதில்-
வேறொரு -
வழிபாட்டு தளத்தை-
எழுப்பிருப்பாயா!!?

சந்தேகம்-
இல்லாமலில்லை!

உண்மை-
உறங்கியே-
கிடைப்பதில்லை!

விழுந்த-
கடப்பாரை-
இறை இல்லத்தில்-
மட்டும்-
இல்லை!

இறையாண்மையின்-
இதயத்திலும்-
விழுந்த இடி-என்பதை
மறுப்பதற்கில்லை!

(குமுறல்கள் தொடரும்....)



Tuesday, 4 December 2012

"வெளிச்சங்கள்"! (8)

உறவென்று-
சொல்ல -
யாருமில்லை!

பெற்றவர்கள்-
தவறியதால்-
இந்த-
நிலை!

மாமன் என-
ஒருவரிடம்-
தஞ்சம்!

அவரிடமோ-
பாசத்துக்கு-
பஞ்சம்!

வேறு-
 வழியுமில்லை!

ஏச்சும் பேச்சும்-
அவரிடமிருந்து-
கொஞ்சமில்லை!

பிரிந்திடும்-
நேரம்-
வந்தது!

பசியால்-
பரிதவிக்கிற-
நிலை -
அவனுக்கு-
ஏற்பட்டது!

வாழ வழி-
தெரியவில்லை-
இவனுக்கு!

ஒரு-
கை நீண்டது-
இவனை-
தாங்குவதற்கு!

அன்று முதல் -
இவனை படிக்கவைக்க-
அந்த கைகள்-
சுமைகளை-
சுமந்தது!

இன்று-
அவனை-
பட்டதாரியாக்கியது!

படித்தவன்-
மேடையில்!

படிக்க வைத்தவன்-
வருகிறான்-
மேடை நோக்கிய-
பாதையில்!

கைதட்டலில்-
அதிர்ந்தது-
அரங்கமே!

ஒரு இஸ்லாமிய-
சகோதரனுக்கு-
உதவியது-
இந்து சகோதரனின்-
மனமே!

தன் கதையை-
மேடையில்-
சொன்னான்-
பட்டதாரி!

"அரங்கதிலுள்ளவர்கள் "-
கண்களிலோ-
கண்ணீர் துளி!

காணொளி கண்ட -
என் கண்களிலும்-
அதே துளி!

இரு சமூகங்களின் -
ஒற்றுமை-
சுதந்திர கனவை-
நனவாக்கியது!

"அடிமைபடுத்தியவன்-"
"அடித்துகொள்ளட்டும்"-என
வாரலாற்றை-
திரித்து-
எழுதியது!

வரலாற்று-
திரிபுகள்-
வெடிக்காத-
அணு குண்டுகள்-
ஹிட்லர் சொன்னது!

அத்திரிபுகள்-
இன்றும்-
திரியாக-
கலவரதீயை-
அணையாமல்-
வளர்த்து கொண்டிருக்கிறது!

உண்மையான-
வரலாறை-
நாம் என்றைக்கு-
விளங்குவது!?

நம் தேசம்-
திருந்துவது!?

(குமுறல்கள் தொடரும்....)





Monday, 3 December 2012

வெளிச்சங்கள்"! (7)

காலங்காலமா-
தொடரும்-
கொடுமை!

நம் மண்ணை-
ரத்த சகதியாக்குது-
தீண்டாமை!

எத்தனையோ-
சட்டங்கள்-
போட்டாச்சி!

அதெல்லாம்-
கிணத்துல-
போட்ட -
கல்லாச்சி!

"ஒரு காதல்"-
சேர்ந்திருச்சி!

பல வீடுகள்-
எரிஞ்சிருச்சி!

அந்தோ-
பரிதாபம்-
மனிதர்களா-
கொல்லபட்டார்கள்!?

இல்லை-
மனிதங்களையல்லவா-
கொல்கிறார்கள்!?

பிரச்சனையில்லாத-
உலகில்லைதான்!

"பிறப்பை"-
வைத்து-
ஏன் இந்த-
கொடுமை நிலை!?

உணவுக்காக-
"பிராணிகளை"-
கொல்வதை-
எதிர்க்கிறாங்க!

உயிரோட மக்கள்-
எரியும்போது-
மௌனிக்கிறாங்க!

பெரும்பான்மை-
ஓட்டு வாங்கினால்தான்-
ஆட்சியை -
பிடிக்கலாம்ங்க!

பெரும்பான்மையான-
சமூகம்-
இங்கே-
தாழ்ந்தவனாங்க!?

நிறங்கள்-
உருவங்கள்-
மனிதர்கள்-
அடையாளம்-
கண்டுகொள்ளவே!

இதை வைத்து-
சில மிருகங்கள்-
கொல்லுதே!

ஏன் ஒரே-
சமூகமாக-
இறைவன் படைக்கவில்லை-
சிலரின்-
கூப்பாடு!

இங்குதான்-
பயன்படனும்-
நம் பகுத்தறிவின்-
செயல்பாடு!

தண்ணீரை-
வாயினுள்-
செலுத்தினாலும்!

மூக்கினுள்-
செலுத்தினாலும்!

சேரும் இடம்-
வயிறுதான்!

இதுபோலவே-
நல்லதையும்-
கெட்டதையும்-
படைத்துள்ளான்-
இறைவன்!

இதுல-
வியாக்கியானங்கள்-
கொண்டு அலைகிறான்-
மனிதன்!

தெளிந்தவன்-
அறிஞன்!

தெளிவில்லாதவன்-
மூடன்!

பிறப்பால்-
குலத்தால்-
யாரையும்-
உயர்ந்தவன் -என்று
சொல்லவில்லை-
படைத்தவனே!

நமக்கென்னடா!-
உரிமை இருக்கு-
"அற்ப துளியில்-"
பிறந்தவனே!

(குமுறல்கள் தொடரும்.....)

Sunday, 2 December 2012

வெளிச்சங்கள்!" (6)

வள்ளுவரை-
"அய்யன்"-
என்கிறோம்!

காந்தியை-
தாத்தா-
என்கிறோம்!

நேருவை-
மாமா-
என்கிறோம்!

பெரியாரை-
தந்தை-
என்கிறோம்!

அண்ணாதுரையை-
"அண்ணா"-
என்கிறோம்!

இவர்கள்-
நமக்கென்ன-
உறவின் முறை!?

மனித குலத்திற்கு-
ஏதோ ஒரு வகையில்-
அறிவுரை தந்திருக்கிறது-
அவர்களின்-
வாழ்வின் முறை!

உறவை சொல்லி-
அழைப்பதில்-
பிழை இல்லை!

முத்துராமலிங்க தேவர்!

ஆமினா-எனும்
தாயிடம்-
பால் குடித்து-
வளர்த்தவர்!

தேவரிடம்-
"நீதான்யா-
அதிகமா -
பால் குடிச்சேன்னு-
கேலியாக பேசுவாராம்-
நாகூர் கனி-
அத்தாயின் மகனார்!

முன்பெல்லாம்-
மாமன் ,மச்சான்-என
அழைத்து கொள்ளும் முறை-
அனைத்து சமூக-
மக்களிடமும்-
இருந்தது!

இன்றோ-
அப்பாச-
 அழைப்புகள்-
அணைந்து-
 போனது!

இதற்கு-
யாரை-
காரணம்-
சொல்ல!?

சாதியை சொல்லியும்-
மதவெறியை ஊட்டியும்-
ஓட்டுக்கு அலையும்-
அரசியலையா!?

எத்தனை முறை-
பட்டாலும்-
திருந்த மறுக்கும்-
மக்களையா!?

    

Saturday, 1 December 2012

வெளிச்சங்கள்"! (5)

"என் தேசம்-
பூங்காவை போன்றது-
பல வண்ண-
மலர்கள் இருப்பது போல்-
பல சாதி மதங்கள்-
கொண்டது-என
நேரு சொன்னார்கள்!

இன்றைய-
மக்களின் நிலையை-
காண்பாரேயானால்-
நொந்தே மடிந்திருப்பார்கள்!

பெரும்பகுதி-
மலர்கள்-
கருகி விட்டது!

ஒரு-
பகுதி வளர்ச்சி-
சாதனையாக-
காட்டபடுது!

சுதந்திரம்-
வாங்கி-
அறுபது ஆண்டுகளுக்கு-
மேலாகி விட்டது!

இன்னும்-
வறுமை -
மாறவில்லை!

பட்டினி-
சாவுகள் -
குறையவில்லை!

தமிழ் நாட்டில்-
மின்சாரமே-
 இல்லை!

இதுக்கா-
நம் சுதந்திர போராட்ட-
தியாகிகள்-
மடிந்தார்கள்!?

மண்ணில்-
புதைந்தார்கள்!!

சிலர்-
பணக்கார பட்டியலில்-
இடம் பிடித்து-
விட்டால்!

ஏழைகள்-
வயிறுகள்-
நிறைப்பிடுமா-
அச்சாதனை-
பட்டியல்!?

ஒவ்வொரு-
முறையும்-
வறுமையை-
ஒழிப்போம்!
ஊழலை-
ஒழிப்போம்-என
சொல்றாங்க!

கேட்டு கேட்டு-
நம் காதுகளே-
"புளிச்சி"-
போச்சிங்க!

எதிர் கட்சி-
போன முறை-
நாடாளு மன்றத்தை-
நடத்த விடவில்லை!
காரணம்-
ஊழல்னு-
சொன்னாங்க!

இவங்க-
சவ பெட்டியிலேயே-
"ஆட்டைய-"
போட்டவங்க!

இந்த முறையும்-
முடக்குவோம்னு-
சொல்றாங்க!
காரணம்-
சில்லறை வணிகத்தில்-
அந்நிய முதலீடுனு-
சொல்றாங்க!

இவங்கதான்-
போன முறை-
ஆளும்போது-
அடித்தளம்-
இட்டவங்க!

இது-
எப்படி -
இருக்குங்க!?

எது-
எப்படியோ-
மக்கள் வரிபணங்கள்-
"மண்ணா போச்சிங்க!"

மக்களோ-
நடுதெருவுல-
நிக்குறாங்க!!

(குமுறல்கள் தொடரும்....)