Friday, 11 October 2013

தியாகம்....!!

வாழ்கையென்பது-
மெழுகுவர்த்தியென்றால்!

தியாகம்-
இங்கே-
தீபமாகிறது!
---------------
தியாகமெனும்-
கிளையின்-
வழியில்தான்-
வெற்றியெனும்-
கனிகள்-
காய்க்கிறது!
---------------

Thursday, 10 October 2013

திருவோடு.....!!

உச்சந்தலையில்-
தொடங்கி!

நெஞ்சுகுழிவரை-
இறங்கி!

இன்னும் கிடைக்கும் -
இடமெல்லாம்-
"செதுக்கி"!

உள்ளங்கால்வரை-
உள்ளடக்கி!

வெட்டி-
சிதைத்து!

சின்னாபின்னமாக்கி-
வைத்து!

அனாதை-
பிணமாக்குவார்கள்!

பிணமாவதால்-
பலர்-
அனாதையாவார்கள்!

தடுத்திருக்கலாம்!

வேடிக்கையே -
பார்க்கிறது-
"அதிகாரங்கலெல்லாம்"!

திருவோடை வைத்து-
பிச்சை எடுப்போரை-
பார்த்திருப்போம்!

திருவோடு கிடைத்ததால்-
பிச்சை எடுப்போரை-
கண்டிருப்போம்!?

இங்கே-
ஒட்டு பிச்சைக்கு-
பிணங்களை-
பயன்படுத்துகிறார்கள்!

பிச்சையெடுக்கவும்-
பிணங்கள் -
விழ செய்கிறார்கள்!



Wednesday, 9 October 2013

நையாண்டி....!!

விளம்பரத்திலும்-
நடிக்கிறாங்க!

"நடிக்கிரவங்களும்"-
விளம்பரத்துக்கு-
போறாங்க!

"நடிச்சது-"
பிரபலமாக-
சர்ச்சையை-
உருவாக்குறாங்க!

இதை-
வாய்கிழிய-
ஊடகங்கள்-
கத்துறாங்க!

நம் தேசமக்கள்-
இடுப்பு வேட்டி-
நழுவுவதை-
மறந்துட்டான்!

தொப்புள்-
தெரிஞ்சதாம்-
கர்மம்-
பதறுகிறான்!

அவங்க-
நையாண்டி-(கேலி)
பண்ணுறாங்க!

நீங்க-
பொழப்ப-
பாருங்க!

Tuesday, 8 October 2013

உ -பி .முசாபர் நகர்!

கூவுவதற்குள்-
குரல் வளையை-
அறுக்கப்பட்ட-
குயில்கள்!

பறக்க-
முனைகையில்-
சிறகுகள்-
பிச்சி எறியப்பட்ட-
பட்டாம்பூசிகள்!

மணம் வீசுவதற்குள்-
மண்ணில் புதையுண்ட-
மாங்கனிகள்!

தலை துண்டித்து-
துடிக்கும்-
தும்பிகள்!

கழுகுகூட்டதில்-
சிக்கி கொண்ட-
மைனாக்கள்!

இவர்களென்ன!?-
வேடந்தாங்கல் வந்த-
வெளிநாட்டு பறவைகளா!?

விபத்துக்குள்ளாகி-
கரைசேர்ந்த-
படகுகளா!?

இல்லை!
இல்லை!

இப்பாரதத்தை-
சேர்ந்தவர்கள்!

தேசகாற்றை-
சுவாசித்தவர்கள்!

மற்ற நாட்டிலிருந்து-
வந்தால்-
அகதிகள்-
என்கிறோம்!

இங்கோ-
சொந்த மக்களையே-
அகதியாக்குவதை-
வேடிக்கை-
பார்க்கிறோம்!

கடல் காற்றில்-
உப்பு கலந்திருக்கும்!

இன்று-
கண்ணீரின் உப்பு-
கரிக்கிறது-
சுவாசிக்கும்-
காற்றிலெல்லாம்!!



Monday, 7 October 2013

கிடங்கு..!

மனிதன்தான்-
அள்ளனுமாம்-
"மல கிடங்கை!"

"அக்கிடங்கை"விட-
நாற்றம்-
சொல்பவன்-
"உள்ளகிடங்கு"!

Sunday, 6 October 2013

கண்ணீர் பூக்கள்.!!!

தண்ணீர் தெளித்த-
பூக்களை-
கண்டிருப்பீர்கள்!

கண்ணீரில்-
மூழ்கும்-
பூக்கள்-
நாங்கள்!

மல்லிகை பூக்கள்-
மன்னவனை-
நினைவூட்டும்!

எங்கள்-
கண்ணீரால்-
தலையணை-
நனைந்திடும்!

தண்ணீரின்-
உயரத்திற்கு-
அல்லி உயரும்!

அல்லிக்கும்-
எங்கள் நிலையறிந்தால்-
தண்ணீரிலேயே-
அழுகிடும்!

பத்து மணி பூக்கள்-
பத்து மணிக்கு-
பூக்கும்!

எங்களது-
வாழ்வில்-
வசந்த பூக்கள்-
பூக்கும்!?

வண்ண வண்ண பூவெல்லாம்-
பூமாலையில்-
சேரலாம்!

பூசூடியவுடன்-
"போனவன்"-
திரும்புவானா!?-
கேள்வியே-
மிஞ்சும்!

பிள்ளை முகம்-
காணாத-
தந்தைகள்!

மகனை-
காணாமல்-
இறந்த-
தாய்மார்கள்!

இப்படியாக-
அனாதையாக்கப்பட்ட-
பூங்கவனங்கள்-
நாங்கள்!

இன்னும்-
பாடையில்-
ஏற்றபடாத-
உயிருள்ள பிணங்கள்-
நாங்கள்!

யார் இவர்கள்!?
மதகலவரங்களில்-
கணவனை -
இழந்தவர்கள்!

சாதீய சண்டையில்-
சம்பாதிப்பவர்களை-
இழந்தவர்கள்!

சிறைபட்ட-
அப்பாவிகளின்-
அபலைகள்!

துடைக்கப்படுமா!?-
இவர்களது-
கண்ணீர்கள்!?

Saturday, 5 October 2013

நம்புங்க பாஸ்!

எப்போதும்-
"படம்-"
பார்ப்பார்கள்!

அன்றைக்கு-
சட்டமன்றத்தில்-
பார்த்து விட்டார்கள்!

ஊழல் -என
ஊளையிடுவார்கள் !

பிணபெட்டியிலேயே-
ஊழல் பண்ணினார்கள்!

தீவிரவாதம்-என
தீவிர பிரச்சாரம்!

தன் ஆட்சியிலேயே-
நாடாளுமன்ற தாக்குதல்-
அரங்கேற்றம்!

வெடிகுண்டு கலாசாரம்-என
கத்துவார்கள்!

அவர்கள்-
அலுவலகத்தில்-
அவர்களே -
வைப்பார்கள்!

கதற கதற-
கலவரத்தின்போது-
கற்பழிப்பார்கள்!

ஆனால்-
பெண்கள் பாதுகாப்பு-
பேசுவார்கள்!

இரவு நேர விடுதியில்-
பெண்களை -
அடிப்பார்கள்!

ஆனால்-
இவர்கள்-
பெண்ணின் நிர்வாண நடனம்-
பார்ப்பார்கள்!

நம்புங்க பாஸ்!
இவர்கள்தான்!

கலாசார காவலர்கள்!
தேச பக்தர்கள்!

நாட்டு பற்றாளர்கள்!
நிறைய பெயர்களை-
இவர்களே-
சூட்டி கொள்வார்கள்!

பி.ஜே .பி யை-
வைத்து-
காங்கிரஸ் பயங்காட்டுது!

காங்கிரஸ் மேலுள்ள-
கோபத்தை -
பி.ஜே.பி -
பயன்படுத்த பார்க்குது!

இவ்விரு கட்சிகளால்-
என்ன நாட்டின் வளர்ச்சி!?

தெரிகிறது-
அவர்களின்-
கட்சியினரின்-
வளர்ச்சி!

தேவை-
நாட்டை ஆள-
மாற்று அரசியல்!

அதற்கு-
பயன்படுமா-
வரும்-
நாடாளு மன்ற தேர்தல்...!!,