Tuesday, 8 October 2013

உ -பி .முசாபர் நகர்!

கூவுவதற்குள்-
குரல் வளையை-
அறுக்கப்பட்ட-
குயில்கள்!

பறக்க-
முனைகையில்-
சிறகுகள்-
பிச்சி எறியப்பட்ட-
பட்டாம்பூசிகள்!

மணம் வீசுவதற்குள்-
மண்ணில் புதையுண்ட-
மாங்கனிகள்!

தலை துண்டித்து-
துடிக்கும்-
தும்பிகள்!

கழுகுகூட்டதில்-
சிக்கி கொண்ட-
மைனாக்கள்!

இவர்களென்ன!?-
வேடந்தாங்கல் வந்த-
வெளிநாட்டு பறவைகளா!?

விபத்துக்குள்ளாகி-
கரைசேர்ந்த-
படகுகளா!?

இல்லை!
இல்லை!

இப்பாரதத்தை-
சேர்ந்தவர்கள்!

தேசகாற்றை-
சுவாசித்தவர்கள்!

மற்ற நாட்டிலிருந்து-
வந்தால்-
அகதிகள்-
என்கிறோம்!

இங்கோ-
சொந்த மக்களையே-
அகதியாக்குவதை-
வேடிக்கை-
பார்க்கிறோம்!

கடல் காற்றில்-
உப்பு கலந்திருக்கும்!

இன்று-
கண்ணீரின் உப்பு-
கரிக்கிறது-
சுவாசிக்கும்-
காற்றிலெல்லாம்!!



2 comments:

  1. சொந்த மக்களை அகதிகளாக்கும் கொடுமை! வேதனை!

    ReplyDelete
  2. உங்கள் கவிதைகளில் ஆரம்பம் முதல் இறுதி வரை பாதை மாறாமல் சரியாக அமைந்த கவிதைகளில் இதுவும் ஒன்று ....வாழ்த்துக்கள் சகோ..

    ReplyDelete