Wednesday, 23 October 2013

தியாகி கோபி!

குருதி தானம்-
செய்திட-
சென்றவன்!

திரும்பி வருகையில்-
விபத்துக்கு உள்ளானான்!

குருதியில்-
நனைந்தவன்!

மூளைச்சாவு -
அடைந்தான்!

அதிர்ந்தார்கள்-
அவனது-
பெற்றோர்கள்!

ஆனாலும்-
அனுமதித்தார்கள்-
செய்திட-
உறுப்பு தானங்கள்!

எப்படியெல்லாம்-
அப்பெற்றோர்கள்-
வளர்த்திருப்பார்கள் !?

எத்தனை-
கனவுகள்-
கண்டிருப்பார்கள்!

நினைத்தாலே!
உள்ளம் கலங்குகிறது!

கண்களும்-
அதன் பங்கிற்கு-
கலங்குகிறது!

கோபி-
இருபது வயது-
கல்லூரி மாணவன்!

அவன் செயலால்-
அவன்தான் -
மனிதன்!

பிறருக்கு-
"இருக்கும்போது"-
உதவினான்!

இறந்தபிறகும்-
உதவி இருக்கிறான்!

பிறரை கொன்று-
தன்னை வளர்க்கும்-
மனித மிருகங்கள்-
எங்கே!?

மற்ற மனிதர்களுக்கும்-
உழைக்கும்-
உத்தமர்கள்-
எங்கே..!!?

(நன்றி-தகவல் பகிர்ந்த "உங்களுக்கு தெரியுமா.!?""முகநூல் பக்கத்திற்கு)

5 comments:

  1. இப்படியும் ஒரு சில நல்ல செய்திகளாவது
    தொடர்ந்து கேட்டால் தான்
    நம் சமூகத்தின் எதிர்காலம்
    குறித்த அச்சம் கொஞ்சமாவது விலகும்
    என நினைக்கிறேன்
    பகிர்வுக்கு மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்

    ReplyDelete
  2. சிறப்பான மனிதன்......

    கொட்டிக்கிடக்கும் அவல செய்திகளுக்கு இடையே நல்ல செயல் பற்றிய செய்தி.....

    ReplyDelete
  3. உண்மையில் நெகிழ்ந்தேன்....
    கோபி சிறந்த மனிதர்......

    ReplyDelete
  4. உண்மையில் மிகவும் போற்றப்பட வேண்டிய விசயம்! பகிர்வுக்கு நன்றி!

    ReplyDelete