Saturday, 19 January 2019

வீடு.!

சென்னையில் ஒரு வீடு
மதுரையில் ஒரு வீடு
இராமநாதபுரத்தில் ஒரு வீடு
பாவம்
தாய் தகப்பபனை இருக்க வைக்கத்தான்
ஒரு அறை இல்லாமல் போய் விட்டது
இன்றைய மகன்களுக்கு ..!

Sunday, 30 December 2018

காயம்.!

நீ ஏற்படுத்திய 
காயத்திலிருந்தே கசிகிறது

உனக்கான கவிதைகள்.!

Wednesday, 19 December 2018

கடல் நீர்.!

உலகத்தின் கண்ணீரால்
கடல் உப்பு கரித்து விட்டது
நீயும் அழுது நீர்மட்டத்தை

உயர்த்தி விடாதே..!

Saturday, 8 December 2018

பூக்கடை..!

பூக்கடையை கடந்து செல்லும் போதெல்லாம்
நீ என்னுள் தோன்றி மறைகிறாய்.!

Friday, 7 December 2018

மௌனம்..!

ஏன் என் மௌனத்தை கலைத்திட 
இவ்வளவு பிடிவாதம் கொள்கிறாய்.!?

என் மௌனம்
உனக்கு கோழைத்தனமாகவோ
வீரத்தனமாகவோ
முதிர்ச்சித்தனமாகவோ
முட்டாள்தனமாகவோ
அமைதியாகவோ
அதிர்ச்சியாகவோ
அடக்கமாவோ
அடாவடியாவோ
இப்படியாக ஏதோ ஒன்றாக
உன் விருப்பப்படி என்னைப் பற்றி
பிம்பத்தை வரைந்துக் கொள் 
அதைப்பற்றி நான் கவலைப்பட 
போவதில்லை.

என் மௌனத்தை மட்டும் 
கலைத்திட விரும்பாதே

ஒருவேளை என் 
மௌனம் உடைப்படும் தருணம்
உன் கண்ணில் சில கண்ணீர்த்துளிகள்
விரயமாகலாம்.!





Saturday, 6 October 2018

கவிஞன்.!

காசு பணம் இருக்க வேண்டும் என்று
எந்த கட்டாயமும் இல்லை
கொஞ்சம் கவிஞனாக இருந்தாலே போதும்
நிலவின் மடியிலும் கொஞ்சம் தலை சாய்த்திட..!


Wednesday, 26 September 2018

சொர்க்கம்.!

காலம் நம் தலையில்
வெள்ளை அடித்தால் என்ன .!?
நாம் சொர்க்கத்தில் இளமையாகத்தானே
சந்திக்கப் போகிறோம்..!