Monday, 27 June 2011

கண் திருஷ்டியா..!

தங்க கொழுசுகள் -
தங்க நிற -
கால்களுக்கு!

கண்ணாடி -
வளையல்கள் -
கண்ணாடி போன்ற -
கைகளுக்கு!

கருத்த பொட்டு -
எதற்கு -!?
உன்-
கன்னத்திற்கு!?

கண் திருஷ்டி கழிய-
கண் மையா!?

ஏற்று கொள்வாயா -!?
என்னை!

காரணம் -
கருப்பு பொட்டை விட -நான்
கருப்பு!

எது வரை!

தொந்தரவே இல்லை -
தொட்டிலில்-
  இருக்கும் வரை!

பின்-
கஷ்டத்தை தவிர -
ஒன்றும் இல்லை-
கல்லறை -
செல்லும் வரை!

நல்ல வேளையாக..!

எப்போதோ -நான்
இறந்திருக்க வேண்டும்!
நான் கவரி மான் ஜாதியாக
இருந்திருந்தால்!

நல்ல வேளை-நான்
எப்படி வெட்டினாலும் -
பல்லை காட்டும் -வெள்ளரிக்காய்
ஜாதி!

அதனால்தான் என்னவோ-
நீ திட்டும் போதெல்லாம் -
பல் இழித்து கொண்டே செல்கிறேன்!

உதறி விடு!


அழகே!
"கொடுத்து" வைத்தது -
உன் துவாளை!

அதை தானே -
இறுக்கி கொள்கிறது-
உன் ஈர தலை!

என் முன்னால்-
நீ!-
குளிக்க வேணாம்!

அந்த தண்ணீ மீது -
நான் -
பொறாமை படவும் -
வேணாம்!

உதறி விடு -
உன் துவாளையை-
நான் -
உன் வீட்டை-
கடக்கும் போது!

துளிர் விடும் -
என் உயிர்-
சில்லென்று ஈரம் -
என் மீது படும் போது!

யார்!?

திட்டுகிறான் இயற்கையை -
மழை தண்ணி -வீட்டுக்குள்
வந்ததென்று !

வீடு கட்டிய இடம் -
கண்மாயாக இருந்த இடம் -
என்பதை மறந்து விட்டு!

எல்லை மீறியது
மழை தண்ணி அல்ல -
மனிதா நீ!!

மனைவியானவள்...!

அழகிய கோலமாக்கினால்-
கோடுகளால் இணைத்து -
அலங்கோலமாக சிதறி கிடந்த
புள்ளிகள் என்னை!

நிலை கொள்ள செய்தாள்-
நாடு கடலிலும் நங்கூரமாக -
அலை கடலில் அலைக்கழிக்க பட்ட -
கப்பலான என்னை!

பொருந்தி கொண்டாள்-
வாழ்க்கையில் !
பொறுமை எனும் சொல்லை -
படிக்க கூட பொறுமை -
இல்லாத என்னை!

இருக்க முடியும் -ஒரு தாயிக்கு
இரு குழந்தைகள் !

இருக்க முடியாது-ஒரு பிள்ளைக்கு
இரு தாயிக்கள் !

எத்தனையோ பேர்களுக்கு -
எத்தனையோ தாய்மார்கள்!

அதெப்படி என கேள்வி வரும் -
இப்படி!

என்னை குழந்தையாக -
பெற்ற தாய்!
எனக்கு குழந்தையாக -
பிறந்த தாய்!

ஒதுக்கினார்கள் -என்னை
தராதரம் இல்லையென்று!

உண்டாக்கினாள்-தராதானமான
வாழ்கை ஒன்று!
என் தாரமானவள் இன்று!

இல்லை சந்தோசம் -வீட்டு
மனைகளினால்!
குறையாத சந்தோசம் -வீட்டில்
உள்ள மனைவிகளால்!

நேசியுங்கள் மனைவியை-
மனைவி ஆக்க திட்டமிட்டவர்களையே
நேசியுங்கள்!

விரயமான வாழ்வு!

குறி பார்க்க தெரியாதவனுக்கு-
துப்பாக்கி தோட்டாக்கள்-
விரயம்!

திசை தெரியாத மாலுமிக்கு-
கடல் பயணம் விரயம்!

துப்பில்லாத படகு -
நீரில் மிதப்பதால் -நதிக்கு
விரயம்!

முயற்சி இல்லாதவன் -
மூச்சு விடுவதும் விரயம்!

லட்சங்களை மட்டும்
சேர்த்து விட்டு-
லட்சியம் இல்லாதவன்-
வாழ்வதும் விரயம்!