Tuesday, 29 April 2014

கண் பேச்சு..!!

காதல் பேச வேண்டிய
கண்களும்!

கைப்பேசியோடுதான்
பேசுகிறது!

  

வீரனின் பயம்.!!

வீரர்களுக்கும்
ஓர் பயமுள்ளது!

அது
மரணிக்கும்போது
பயந்திட கூடாதே என்பது!

   

எது முக்கியம்...!?

வெல்வோமா..!?
வீழ்வோமா..!?
என்பதல்ல
முக்கியம்!

முயல்கிறோமா..!?
அது தான் முக்கியம்!


Monday, 28 April 2014

தோப்பு...!!

சர சரக்குது
தென்னங்கீத்து!

ஏதோ ஒரு மூலயில
பனங்கா விழுற சத்தம்!

தத்தி தத்தி நடக்குது
மைனா கூட்டம்!

வாலால மண்ண தட்டிட்டு
அணில்பிள்ள எடுக்குது
ஓட்டம்!

ஆழக்கெணத்துல சலப் சலப் னு
தண்ணி மோதுது!

பம்பு செட்டு அறயில
கீச் கீச் னு
குருவி குஞ்சுக சத்தம் எழுப்புது!

கெடக்குறேன்!
கயித்து கட்டல்ல நானும்!

பார்வயிக்கு நேரா வானம்!

என்ன சுத்தி
இத்தன சத்தம்!

எஞ்செவியில கேட்குது
ஒரே சத்தம்!

சல சலன்னு
அவ பேசிப்போன வார்த்த!

உரிச்சி எடுக்குது
எம்மனச!

கண்கள மூடிக்கிறேன்!

எச்சில விழுங்குறேன்!

அந்த நெனவு
கொல்லுதா..!?

என்னை தழுவுதா..!?

எனக்கு மட்டுமே தெரியும்!

என்னை தழுவிப்போவும் காத்துக்கும் புரியும்!

     

விவசாயம்!

நன்றிக்கெட்ட
ஜென்மங்கள் நாம்!

சோறு போடும்
விவசாயிகள்
வாழ்விலும் வாயிலும்
மண்ணள்ளி போடுகிறோம்!

     

நல்ல நேரம்!


காலம்
யாருக்காகவும்
நிற்பதில்லை!

நல்ல நேரம்
பார்த்தே
காலத்தை வீணாக்குகிறது
மனித ஜென்மங்கள்!

     

Sunday, 27 April 2014

வாப்பா..!


பிள்ளைகள் பலர்
புரட்டி படிக்காத
புத்தகங்கள்!

வாப்பாமார்கள்! (தந்தைமார்கள்)