Wednesday, 31 October 2012

நூலும்-நானும்!


நூற்கள்-
கடல்கள்-
குட்டி குட்டி-
தீவுகள்!

தேடி தேடி-
படித்ததுண்டு!

புத்தகத்திலேயே-
தொலைந்ததுண்டு!

புத்தகமே-
உனக்கும்-
எனக்கும்-
என்ன -
உறவிருக்கு!?

ஆமாம்ல-
ஒரே -
"எண்ண"-
உறவிருக்கு!

புத்தகங்களும்-
பிடித்தவங்களும்-
வடிவம் -
வேறு!

செயல்-
வடிவம்-
ஒன்று!

பிடித்தமானவர்கள்-
அருகே இருந்தால்-
சண்டை பிடிப்பார்கள்!

விலகி கொண்டால்-
வருந்துவார்கள்!

புத்தகம்-
படிக்கும்போது-
தூக்கம்-
வருது!

தூங்க சென்றால்-
படிக்க சொல்லி-
தூண்டுகிறது!

கலவரத்தில்-
கிழிக்கப்படும்-
மனிதர்கள்!

படிக்கும் போது-
உணரபடுது-
கிழிப்பது-
மனித மிருகங்கள்!

வாசிப்பது-
நேசிப்பது-
தேவைபடுது!

வாழும் காலம்-
முழுவதும்!





Tuesday, 30 October 2012

மறைக்க தெரியல...

விரும்புகிறேன்-
கவலையின் போது-
மழையில்-
நனைந்து விட!

வழி தெரியவில்லை-
என் கண்ணீரை-
மறைக்க-
அதை விட!

Monday, 29 October 2012

வீட்டு பூங்கா....

கணக்கில்-
எத்தனையோ-
பூங்காக்கள்-
உலகெங்கிலும்!

மொத்த-
பூங்காக்களையும்-
ஒத்த உருவமாக-
பெண் குழந்தைகளை-
இறைவன் -
அமைக்கிறான்-
ஒவ்வொரு-
வீட்டிலும்!

Sunday, 28 October 2012

சிணுங்கி.....

 ஏதாவது -
பட்டால்தான்-
சுருங்கிடும்-
"தொட்டால் சிணுங்கி!"

என்னை-
வதைக்கிறாயடி-
நீ!
சிணுங்கி!

Friday, 26 October 2012

நான் என்ன செய்வேன்...!!? (12)

"கயல் விழி!

இது-
இனியவனின்-
மொழி!

அன்புள்ள!
பாசமுள்ள!-என
ஆரம்பிக்கவில்ல!

காரணம்-
ஒரு வார்த்தையில்-
உன்னை அடக்கிட-
எனக்கு-
விருப்பமில்ல!

எனக்கு-
தெரிந்து-
என்னை நேசித்த-
ஒரு உயிர்-
என் தாய்!

எனக்கு-
தெரியாமல்-
நேசித்தவள்-
நீயாகத்தான்-
இருந்தாய்!

என் தாய்-
கண்ணீருக்கு-
சொந்தகாரி!

நீயோ-
சிரித்த-
முகத்துக்காரி!

"குடியால்-"
கெட்டது-
எத்தனையோ-
குடும்பங்கள்!

அதில்-
என்னைப்போல்-
எத்தனையோ-
இளைஞர்களின் -
எதிர்காலங்கள்!

"இருக்கிறவன்"-
குடித்தால்-
"அலுப்பு"-
என்கிறான்!

"இல்லாதவன்-"
குடித்தால்-
"கொழுப்பு"-
என்கிறான்!

எவன்-
"குடித்தாலும்-
அது-
மலம்தான்!

இதை-
ஏன்-
மறந்தான்!

"நான் என்ன-
செய்வேன்..!!?"

ஏன்-
கேவல சொற்களுக்கு-
நான்-
உள்ளானேன்!

என்னை-
பார்த்து-
திரும்பியவர்கள்!

ஒரு நாள்-
என்னை-
"அண்ணாந்து"-
பார்ப்பார்கள்!

சார்லி சாப்ளின்-
உலகையே-
சிரிக்கவைக்கவில்லையா!?

"என்னை -
அழவைத்த-
உலகை -
சிரிக்கவைக்காமல்-
விடமாட்டேன்-என
அவர் -
சொன்னவரில்லையா!?

இன்றைய -
தலைமுறைக்கு-
இலவச கல்வி-
கொடுத்தவர்-
காமராசர்-
இல்லையா!?

அவர்-
"படிக்காத-"
மேதையில்லையா!?

நம் தேசத்திற்கு-
உமருடைய ஆட்சி-
வேண்டும்-என்று
காந்தி -
சொன்னாரில்லையா!?

அந்த-
உமர்(ரலி..)அவர்கள்-
தந்தையால்-
"ஆடு மேய்க்க கூட-
லாயக்கில்லாதவன்-"என
திட்டுவாங்கியவரில்லையா!?

வையகம்-
சாக்கடைகளையும்-
கண்டதுண்டு!

சாதித்தவர்களையும்-
சுமந்ததுண்டு!

ஒரு-
நாள் நானும்-
வாழ்ந்து காட்டுவேன்-என
நம்பிக்கை -
எனக்குண்டு!

வரும் காலம்-
எந்தாய்-
கண்ணீர் துடைப்பேன்!

முடியுமான -
அளவு-
மற்றவர்களின்-
துயர் துடைப்பேன்!

காலம்-
கனிந்தால்-
உன் கரம்-
பிடிப்பேன்!

காலமெல்லாம்-
காத்திரு -என்று
சொல்லமாட்டேன்!

வேறொருவருடன்-
மணவாழ்க்கை-என்றாலும்
மனமார-
வாழ்த்துவேன்!

எனது -
பயணம்-
வெகு தூரம்!

எனக்காக-
நீ!
"வாடினால்"-
அது-
பெரும்பாவம்..!!

இவண்-
இனியவன்!

ஏனோ-
அவளை பற்றிய-
எழுத்தில்-
ஈரம்!

இவளது-
கண்ணீரால்-
மேலும்-
ஈரமானது-
கடிதம்!

-----முற்றும்---------------

(குறிப்பு-இக்கவிதை தொடர் பன்னிரெண்டும்-
மதுவின் தீமைகளை சொல்லும்-
மனித உரிமை ஆர்வலர்களுக்கு-
அர்ப்பணம்/
உங்களுக்கு பிடித்து இருந்தால்-
சமூக தளங்களில் இணைத்து கொள்ளுங்கள்)




Thursday, 25 October 2012

நான் என்ன செய்வேன்...!!? (11)

 சல சலத்து-
செல்லும்-
கண்மாய் -
தண்ணி!

"சிலு சிலுத்து"-
செல்கிறது-
பூவையர்கள்-
குளிப்பதை-
எண்ணி!

பெண்ணானவள்-
பனி கட்டி-
போன்றவள்!

உண்மை-
பாசமென்றால்-
உள்ளங்கையிலும்-
உருகிடுவாள்!

பாசம் -
வேஷம் என்றால்-
உயிரையும்-
உறைய-
 செய்திடுவாள்!

"தம் " பிடித்து-
முக்குளிக்க-
துணிவு உள்ளவர்கள்-
முத்தை -
அடைகிறான்!

புல்லின் நுனி-
பனியிலும்-
பிடித்தமானவளின்-
ஈர முடியில்-
வடியும்-
துளி நீரும்-
காதல் பித்து-
பிடித்தவன்-
முத்தை-
காண்கிறான்!

"பொழுது அடைஞ்சா"-
கோழிகள்-
வீடு திரும்புது!

குளிச்சி விட்ட-
பைங்கிளிகள்-
"கூடு" திரும்புது!

ஒரு கிளி மட்டும்-
சந்து வழி-
வந்தது!

அக்கிளி-
நம்-
கயல் விழி!

குளித்து-
விட்டு-
பனியில்-
நனைந்து கொண்டு-
வருது-
ரோசா!

வருவதை-
எதிர்பார்த்து-
காத்து கொண்டுஇருக்கிறான்-
நம்ம-
ராசா!

எதிர்-
எதிர்-
வருகை!

தூரம்-
அடைந்தது-
குறைவை!

சிரித்து-
கொண்டு-
அவன்-
வந்தான்!

பயந்து-
கொண்டு-
அவள்-
வந்தாள்!

நெருங்கி-
விட்டார்கள்!

வெட்கத்தில்-
"கனன்று-"
விட்டார்கள்!

அவன்-
கையில்-
கொண்டுவந்த-
கடிதத்தை!

யாரும்-
பார்க்கவில்லை-
அவள் கையில்-
திணித்ததை!

பட படத்து-
போனாள்-
அவள்!

சர சர-என
போனான்-
அவன்!

அவளை-
சுற்றி-
குடும்பத்தார்-
படித்திட-
முடியவில்லை-
அக்கடிதத்தை!

அவன்-
வீட்டில்-
பெத்தவளின்-
கண்களில்-
கண்டான்-
கண்ணீரை!

தத்தளித்து-
கொண்டிருந்தாள்-
"அதை"-
பிரித்து-
படித்து விட!

அவன்-
வீட்டை விட்டு-
வெளியேறினான்-
தாய் கண்ணீரால்-
விடை-
பெற்றிட!

அவளுக்கு-
சமயம் கிடைத்து-
பிரித்தாள்-
கடிதத்தை!

அவன்-
அவசரமாக-
அடைந்தான்-
வாகனத்தை!

ஆயிரம் கிளைகள்-
இருந்தாலும்-
தாங்கும்-
ஆணி வேர்-
போல!

ஆயிரம்-
வேலைகள் -
உடல் செய்தாலும்-
உயிர் -
ஒன்று போல!

அண்ட சராசரங்களை-
அடக்கி ஆளும்-
ஒருவனை-
போல!

அத்தனைக்கும்-
விடை இருக்குது-
அக்கடிதத்தின்-
உள்ளே!

(தொடரும்...)


Tuesday, 23 October 2012

நான் என்ன செய்வேன்....!!? (10)

"பட்டை"-
சரக்குக்கு-
தடை -
இங்கே!

"பாட்டில்"-
சரக்குக்கு-
தாராளம்-
இங்கே!

"பட்டை-"
உடலுக்கு-
நோயை -
தரும்!

"பாட்டில்"-
என்ன -
வலிமையா-
தரும்!!?


பாலும்-
பழமும்-
சாப்பிடுபவனுக்கே -
பல நோய்-
வருதுங்க...!!

பாழ போன-
"நாத்தத்தை-
குடிச்சா !?--
உடலுக்கு-
உறுதியாங்க..!!??

 மது தீமைகளின்-
தாய்-
நபி மொழி!

குடிச்சே -
தனக்கு தானே-
தோண்டி கொள்கிறார்கள்-
மரண குழி!

படுத்த படுக்கை-
ஆனான்!
பாவி-
மகன்!

அவன்தாங்க-
இனியவன்!
அப்பன்!

"நடமாட்டம்"-
இருந்தாலே-
இவன் குடும்பத்தை-
நாய் கூட-
நாடாது!

இனி-
எறும்பு கூட-
எட்டி பார்க்காது!

முதலிலாவது-
பழைய சோறு-
கிடைத்தது!

இப்போ-
அதுலயும்-
மண்ணு -
விழுந்து-
விட்டது!

யார் கூப்பிட்டது-
"குடிக்க "-என
சொல்லலாம்-
விற்பவர்கள்!

இவர்கள்-
பசியில் இருப்பவன் -
முன்-
ஊறுகாய் திறந்து காட்டி-
எச்சில் ஊற கூடாதுன்னு-
சொல்கிறவர்கள்!

ஒவ்வொருவருக்குள்ளும்-
இச்சைகள் எனும்-
மிருகம் -
இருக்கும்!

அது ஒவ்வொரு-
வினாடியும்-
"ருசி "பார்க்க-
காத்து கொண்டிருக்கும்!

"எல்லா பூனையும்-
சைவ பூனைதான்-
அதற்க்கு-
எலி கிடைக்கும் வரை!"-
இது-
நான் படித்ததில்
பிடித்த ஒன்று!

அதை பகிர்ந்துள்ளேன்-
இவ்வாததிற்கு-
பொருந்தும் என்று!

இனியவனுக்கு-
விழுந்த-
முதல் அடி!

படிப்பில்-
விழுந்தது-
இடி!

வாயிற்றுபாட்டுக்கே-
வழி இல்ல!

இளமை காலம்-
வந்ததோ-
இவனை-
இம்சித்து கொல்ல!

எதை-
தொட!

எதை-
விட!

வாழ்கை-
தாரமா!?

வாழ்வாதாரமா!?

(தொடரும்....)