Tuesday, 30 April 2013

பெண்ணினம்...!(4)

கருவில் இருப்பதை-
"அறிந்து"-
கலைத்தார்கள்!

பிறந்த குழந்தை-
வாயில -
நெல்லை போட்டு-
சாகடித்தார்கள்!

கள்ளி பாலும்-
கொடுத்தும்-
கொன்றார்கள்!

அதன்பிறகே-
கருவை -
சொல்ல -
தடை-
சட்டம்!

ஆனால்-
நம் நாட்டின்-
சட்டம்!!?

தூக்கு கைதியை-
"தூக்கு"வதற்கு-முன்
குடும்பத்திற்கு-
தெரியபடுத்தனும்!

மேல் முறையீடுக்கு-
வழி வகுக்கனும்!

இந்த முறை-
வீரப்பன் கூட்டாளிகள்-
விசயத்தில் நடந்தது!

அப்சல்-
விசயத்தில்-
ஏன்-
மறுத்தது!?

இதில் கொடுமை-
அக்குடும்பம்-
தொலைக்காட்சி பார்த்தே-
அறிந்தது!

"இவர்களையும்"-
தூக்கில் போடணும்-என
சொல்ல வரவில்லை!

ஏன் சட்டம் கூட-
இரட்டை நிலை!!?

கள்ளி பாலென்றால்-
சொல்லப்பட்டது-
உசிலம்பட்டி!

இப்படியே-
அறிந்தது-
பட்டி தொட்டி!

மூன்று-
நான்கு-
வருடத்திற்கு-
முன்னால்!

ஒரு செய்தி-
அறிய முடிந்தது-
வார இதழால்!

அது......!!-
சொல்கிறேன்-
கொஞ்சம்-
பொறுங்கள்!

கோபப்படாமல்-
பின் தொடருங்கள்!

(தொடரும்....)



Monday, 29 April 2013

பெண்ணினம்...! (3)

திகைத்தேன்-
விக்கித்தவனாக!

செய்தி தாளில்-
படித்த-
செய்தியோ-
சுடும் தீயாக!

பெற்ற தாயே-
பெண் குழந்தையை-
கழுத்தை நெறித்து-
கொன்றதாக!

வறுமையே-
காரணம்-என
ஏழைத்தாய்-
சொன்னதாக!

நீங்களும்-
நானும்-
பிறக்கும்போதும்!

இன்னும் -
ஏனைய உயிகள்-
உலகிற்கு வரும்போதும்!

கொண்டு வந்தோமா!?-
கொண்டு வந்ததுவா!?-
பணத்தையும்-
சொத்து பத்திரத்தையும்!?

சொல்லுங்கள்-
சொந்தங்களே!

உணருங்கள்-
உறவுகளே!

"வறுமைக்கு-
பயந்து -
உங்கள் குழந்தைகளை-
கொல்லாதீர்கள்-
உங்களுக்கும் -
அவர்களுக்கும்-
நாமே(இறைவன்)-
உணவளிக்கிறோம்-
இறை மறை!

ஏன் விலக-
மறுக்கிறது-
நம் மன-
திரை!

ஒரு வட்டத்திற்குள்தான்-
"படைக்கபட்டவனின்"-
சிந்தனைகள்!

அதற்கும்-
மேலானது-
"படைப்பாளனின்"-
அற்புதங்கள்!

முதியோர்கள்-
அதிகரிப்பதாக-
இளையோர்கள் -
குறைவதாக-
சீனா கவலை-என
ஒரு தகவல்!

இனி-
கள்ளிபாலால்-
கொள்ளி வைத்த-
தமிழக-
தகவல்..!!

(தொடரும்....)



Sunday, 28 April 2013

பெண்ணினம்...!(2)

பெண்மையின்-
சிறப்பு-
தாய்மை!

தாய்மைக்காக-
ஏங்கும்-
திருமணமான-
பெண்களின் நிலைமை!?

காலம் -
தள்ளி -
போனால்!

எப்படியெல்லாம்-
குத்தி கிழிக்கபடுகிறாள்-
சொற்களால்!

"தாமதத்திற்கு"-
ஆணும்-
பெண்ணும்-
பரிசோதிக்க-
உள்ளாகனும்!

ஆனால்-
பெண்ணைத்தானே-
முதலில் கை நீட்டுது-
உலகம்!

எத்தனை-
தம்பதிகள்!

குழந்தை-
பாக்கியத்திற்காக-
பரிதவிக்கிறார்கள்!

எவ்வளவு-
லட்சங்கள்-
செலவுகள்!

குழந்தைக்காக-
ஏங்கும் -
உறவுகளுக்காக-
என்றும் நீடிக்கும்-
என்-
பிரார்தனைகள்!

இப்படியாகவும்-
உள்ளார்கள்!

வேறு ஒரு-
நிலையை-
 பாருங்கள்!

கருவுற்றவுடன்-
கலங்குபவர்கள்-
எத்தனை பேர்கள்!?

முதல் -
குழந்தை-
பெண்ணென்றால்-
எவ்வளவோ-
நிந்தனைகள்!

பிரசவ வலியை-
விட!

எத்தனை-
மன வலிகள்-
அதை விட!?

வயிற்றில்-
உள்ளது -
ஆணா!?
பெண்ணா!?

பிறப்பது-
தூளியில் ஆடவா!?
கள்ளி பால் ஊற்றவா!?

(தொடரும்....!)


       

Saturday, 27 April 2013

பெண்ணினம்..!(1)

பெண்!
தாயானவள்!
தாதியானவள்!

மழலைக்கு-
முதல் மடி -
அவள்!

வாழ்வின்-
பகுதி அவள்!

வாழ்வே-
அவளானவள்!

உயிரை-
பணயம் வைத்து-
உயிரை-
பெற்றெடுப்பவள்!

உயிருள்ளவரை-
பெத்தபிள்ளைகளை-
எண்ணுபவள்!

இன்னும்-
எவ்வளவோ-
சொல்ல தகுதியானவள்!

இன்றைக்கு-
பார்க்கவேண்டியது-
அவர்களது-
நிலைகள்!

மனிதர்களின்-
பெண்கள்-
ஓர் அங்கம்!

வியாபாரமாகி-
விட்டது-
பெண்களின்-
அங்கம்!

பழங்களைத்தான்-(இளம் பெண்கள்)
பாழாக்கினார்கள்!

பூக்களையும்-(சிறுமிகள்)
பிச்சி எறிகிறார்கள்!

பெண்ணென்பவள்-
சாபமா!?

வரமா!?

(தொடரும்....)





Friday, 26 April 2013

பேனா...!

யாரிடமும்-
சொல்லாதே-என
நான்-
சொன்னதையெல்லாம்!

யாருக்கும்-
தெரியாமல்-
எழுதி -
உலகத்திற்கே-
சொல்லிடுது-
"அது"-
"கேட்டதையெல்லாம்!"

பொல்லாத-
பேனா!

ஆனாலும்-
என் தனிமைக்கு-
இனிமை சேர்க்குது-
அப்பேனா..!!

பேனாவை-
நான்-
எறியணுமா!?

மேலும்-
தனியாக-
புலம்பனுமா!?



சாதா புரோட்டா....!

சாதா புரோட்டா-
எல்லாம்-
எனக்கு-
 சாதாரணம்!

உன் -
நினைவோ -
செய்யுதடி-
"சதா ரணம்!"

தலையணை..!

தலைக்கு-
மட்டுமல்ல!

கண்ணீர்களை-
பிறரிடம்-
"அது"-
சொல்வதில்ல!