Tuesday, 30 April 2013

பெண்ணினம்...!(4)

கருவில் இருப்பதை-
"அறிந்து"-
கலைத்தார்கள்!

பிறந்த குழந்தை-
வாயில -
நெல்லை போட்டு-
சாகடித்தார்கள்!

கள்ளி பாலும்-
கொடுத்தும்-
கொன்றார்கள்!

அதன்பிறகே-
கருவை -
சொல்ல -
தடை-
சட்டம்!

ஆனால்-
நம் நாட்டின்-
சட்டம்!!?

தூக்கு கைதியை-
"தூக்கு"வதற்கு-முன்
குடும்பத்திற்கு-
தெரியபடுத்தனும்!

மேல் முறையீடுக்கு-
வழி வகுக்கனும்!

இந்த முறை-
வீரப்பன் கூட்டாளிகள்-
விசயத்தில் நடந்தது!

அப்சல்-
விசயத்தில்-
ஏன்-
மறுத்தது!?

இதில் கொடுமை-
அக்குடும்பம்-
தொலைக்காட்சி பார்த்தே-
அறிந்தது!

"இவர்களையும்"-
தூக்கில் போடணும்-என
சொல்ல வரவில்லை!

ஏன் சட்டம் கூட-
இரட்டை நிலை!!?

கள்ளி பாலென்றால்-
சொல்லப்பட்டது-
உசிலம்பட்டி!

இப்படியே-
அறிந்தது-
பட்டி தொட்டி!

மூன்று-
நான்கு-
வருடத்திற்கு-
முன்னால்!

ஒரு செய்தி-
அறிய முடிந்தது-
வார இதழால்!

அது......!!-
சொல்கிறேன்-
கொஞ்சம்-
பொறுங்கள்!

கோபப்படாமல்-
பின் தொடருங்கள்!

(தொடரும்....)



2 comments:

  1. சிந்திக்க வைத்த கேள்விகள்...

    தொடர்கிறேன்...

    நேரம் கிடைப்பின் வாசிக்க அன்புடன் அழைக்கிறேன்...

    http://dindiguldhanabalan.blogspot.com/2013/05/Pain-Gain.html

    ReplyDelete
  2. பெண் மகவு என்று தெரிந்து கருவிலேயோ, அல்லது பிறந்து பின்னரோ அழிக்கும் கொடுமை.... என்று இதற்கு விடிவுகாலம்....

    நல்ல கேள்விகள்....

    ReplyDelete