Friday, 12 April 2013

நினைவெல்லாம் ரத்தம்! சுவாசமெல்லாம் நாற்றம்!! (8)

"ப்யுஷர் அகர்வால்"-என்ற
பல்கலை கழக-
மாணவன்!

"அவர்களின்"-
"சித்தாந்தத்தை"-
ஆய்வு செய்ய-
குஜராத்-
சென்றான்!

உச்சி முகர்ந்து-
வரவேற்றார்கள்!

உன்னை போல-
இளைஞர்கள்தான் -
தேவை-
என்றார்கள்!

ஒன்றாக-
கலந்தார்கள்!

இரண்டற-
இருந்தார்கள்!

மாணவனின்-
ஆய்வுகளும்-
தொடர்ந்தது!

ஆறு மாதங்களும்-
ஆனது!

பிரமுகருடன்-
மாணவனும்-
வாகனத்தில்-
செல்லுகையில்!

பிரமுகர்-
எடுத்து பேசினார்-
கை பேசி-
அலறுகையில்!

பேசினார்!
வைத்தார்!

மாணவனை-
பார்த்தார்!

பிறகு-
சொன்னார்!

"எவனோ-
டெல்லியில் இருந்து-
வாரானாம்!

ரகசிய கேமரா மூலம்-
படம் எடுத்து-
கலவரத்தை-
வெளியிட போறானாம்!

பேசியதை-
சொல்லி முடித்தார்-
பிரமுகர்!

கேட்டு கொண்டார்-
மாணவர்!

கலவர சூத்திரதாரிகளை-
அலைவரிசைகள்-
சொன்னது!

பத்திரிகைகள்-
சொன்னது!

ஆனால்-
நீதி ஏன்-
இன்னும் தாமதமாகுது!?

ஆம்-
மாணவனாக-
சென்றது-
நிருபர்தான்!

அவர்தான்-
தெகல்கா பத்திரிகை-
ஆசிஷ் கேதான்!

அவர்-
பிடித்த -
ரகசிய கேமரா-
சொல்லியது-
கயவர்களின்-
ரகசியங்களைதான்...!!

(தொடரும்....)



4 comments:

  1. சுவாரஸ்யம்... ரகசியத்தை தொடர்கிறேன்...

    ReplyDelete
  2. ஓ... அப்புறம்?.. தொடருங்கள் சகோ...

    ReplyDelete
  3. அருமையாக செல்கிறது தொடர்கவிதை! தொடர்கிறேன்! இனிய தமிழ்புத்தாண்டு வாழ்த்துக்கள்! நன்றி!

    ReplyDelete
  4. சுவார்ஸமாக இருக்கிறது

    ReplyDelete