Wednesday, 17 April 2013

நினைவெல்லாம் ரத்தம்! சுவாசமெல்லாம் நாற்றம்!!(12)

நாம்-
இந்தியர்கள்-
தேசத்தால்!

இத்தேசம்-
சிதைகிறது-
மதவாதத்தால்!

சாதியத்தால்!

அதிகாரவர்கத்தால்!

ஆட்சியாளர்களின்-
பொடுபோக்குதனத்தால்!

எப்படியெல்லாம்-
குளிப்பாட்டபடுகிறது-
ரத்தத்தால் !

சொல்லிடவுள்ளது-
அநியாயங்கள்-
கடல் நுரை அளவு!

சொல்லியதோ-
ஒரு நுரை குமிழியில்-(குஜராத் கலவரம்)
ஒரு துளி அளவு!

நம் விவசாயிகள்-
கழுத்தை நெரித்த-
தூக்கு கயிறுகள்-
எத்தனை!?

ஆண்டு தோறும்-
பட்டினியில்-
சாகும் குழந்தைகள்-
எத்தனை!?

பிரசவகாலத்தில்-
இறக்கும் சகோதரிகள்-
எத்தனை!?

இதில் -அக்கறைகொண்டவர்கள்தான்-
எத்தனை!?

எத்தனை-
எத்தனை-
இல்லாமைகள்!
கல்லாமைகள் !

இதற்காக-
சுதந்திர போராட்ட தியாகிகள்-
தன்னையவே-
நாட்டுக்காக-
"சிதைத்தார்கள்"!

"அமாவாசைகளும்"-
"அப்துல் காதர்களும்"-
"அந்தோனிகளும்"-
சுபிட்சமா வாழனும்!

பசியிலிருந்தும்-
பயத்திலிருந்தும்-
பாதுகாக்கபடனும்!

தேசத்தில்-
அமைதி-
நீதி-
தென்றாலாக-
தழுவனும்!

அதற்கு-
நாம்-
என்ன -
செய்யணும்..!!?

(தொடரும்...






8 comments:

  1. /// எத்தனை-
    இல்லாமைகள்!
    கல்லாமைகள் ! ///

    தொடர்கிறேன்...

    ReplyDelete
  2. இத்தேசம்-
    சிதைகிறது-
    மதவாதத்தால்!

    உண்மை வரிகள்.

    ReplyDelete
  3. This comment has been removed by the author.

    ReplyDelete
  4. இவ்வளவு நாள் உங்களை கவனிக்காமல் விட்டு விட்டேன். கவிதைகள் அழகு முத்துச்சரம்/

    ReplyDelete
  5. அருமை தோழரே...


    // நம் விவசாயிகள்-
    கழுத்தை நெரித்த-
    தூக்கு கயிறுகள்-
    எத்தனை!?

    ReplyDelete
  6. மதவாதம் இது நம்மை பிடித்துள்ள பிடிவாதம்! தவிர்த்தால் வரும் சுப நாதம்! அருமையான படைப்பு! தொடர்கிறேன்!

    ReplyDelete
  7. நிறைய உண்மைகளை கவிதை மூலம் பொட்டில் அடித்தாற்போல சிறப்பாகச் சொல்லியுள்ளீர்கள்! தொடருங்கள்!!

    ReplyDelete