Thursday, 18 April 2013

நினைவெல்லாம் ரத்தம்! சுவாசமெல்லாம் நாற்றம்!!(13)

அதிகாரம் -
அதிகம் கொண்ட-
இடம்!

அரசியல் -
தளம்!

அரசியலா!?-என
முகம் சுளிப்போர்-
உண்டு!


"அதனால்-"
ஆகாத-
காரியமும்-
உண்டு!!?

அரசியலை-
ஒதுக்கி!
ஒதுங்கி!

இன்றோ-
இருக்கிறது-
சாக்கடை-என்ற
சொல்லில்-
அடங்கி!

நாம்-
சாக்கடை-
எங்கோ-
ஓடுது-
என்றிருக்க!

இன்றோ-
நம் வீடு நோக்கி-
வந்திருக்க!

எவ்வளவு-
காலம்தான்-
மூக்கை பொத்தி-
வாழ்ந்திருக்க!?

அரசியலில்-
அசிங்கங்களை-
பேசுகிறோம்!

கொள்கை சிங்கங்களை-
ஏன் -
மறக்கிறோம்!?

அரசியல்வாதிகளெல்லாம் -
நம் மனதில்-
நிற்கிறார்களா!?

அய்யா -காமராசரும்!
அத்தா-காயித மில்லத் இஸ்மாயிலும்!
அண்ணா-பேரறிஞர் அண்ணாதுரையும் -
மறக்க கூடியவர்களா!?

நடுநிலையாளர்களே!
சமூக நலன்  விரும்பிகளே!
இன்னும் நீங்கள்-
ஒதுங்கலாகுமா!?

தேசம்தான்-
தானாக-
மாறுமா!?

(தொடரும்...)







4 comments:

  1. இன்றைய சூழலில் தேவையான
    ஒதுங்கிச் செல்லும் நல்லவர்களையும்
    நடு நிலையாளர்களையும் சிந்திக்கத் தூண்டும்
    அருமையான பதிவு
    தொடர வாழ்த்துக்கள்

    ReplyDelete
  2. நல்ல கேள்வி....

    அரசியலை வெறுக்கும் பலரைப் பார்த்துக் கேட்ட நல்ல கேள்வி...

    ReplyDelete
  3. சரியான கேள்வி...

    தொடருங்கள்...

    ReplyDelete
  4. மாற்றம் ஒன்றே மாறாதது! காத்திருப்போம்! நன்றி!

    ReplyDelete