Thursday 26 April 2012

இது கவிதை அல்ல..(1 )

மயான-
அமைதியானது!

மரணங்களால்-
ஏற்பட்டது!

புகையும்-
டயர்கள்!-
ரோட்டில்!

எரியும்-
வயிறுகள்-
வீட்டில்!

சிதறி கிடக்கும்-
செருப்புகள்!

அதற்க்கு சாயம்-
குருதிகள்!

மிரட்சியான-
பார்வைகள்!

மிரட்டும்-
துப்பாக்கிகள்!

துடிக்க துடிக்க-
இறந்த உடல்கள்!

சொல்லப்பட்டது-
"கட்டு"படுத்த-
நடவடிக்கைகள்!

"அது"-
நடக்கும் வரை-
பிரியத்துக்குரியவர்கள்!

நடந்த பிறகோ-
பிரிவினைவாதிகள்!

நடந்தது-
களேபரம்!

வெறிச்சோடியது-
நகரம்!

ஆள் நடமாட்டம்-
இல்லாமல் ஆனது-
நரகம்!

ஊரு அடங்கியது-
கலவரத்தாலா!?

"அடக்க" சொல்லி -
வந்த உத்தரவாலா!?

காலம் தள்ள முடியாமல்-
கிடக்கிறார்கள்-
தள்ளு வண்டிக்காரர்கள்!

அடுத்த வேலை உணவுக்கே-
அரசு உதவியை-
எதிர்பார்க்கும்-
அடுக்கு மாடிகள்!

விடு முறை என்றாலே-
குதூகலிக்கும்-
குழந்தைகள்!

வீடே ஆகிவிட்டது-
சிறைகள்!

பிரசவ பெண்கள்!
அதை விட வலியில்-
அப்பெண்களின்-
தாய்மார்கள்!

ஏன் இந்த -
அவல காட்சி!

நாற்றம் அடிக்கும்-
ரத்த கவுச்சி!

காரணம்-
சில துண்டு-
இறைச்சி!

-(தொடரும்.....)

14 comments:

  1. அன்புள்ள சீனி.. அருமையான பதிவு. இன்று உலகில் இதுதானே நடக்கிறது?
    உலகம் முழுதும் கலகம். நிலவரம் முழுதும் கலவரம்.
    வரலாற்று நெடுகிலும் இந்த கன்றாவிகளைக் கண்டு கண்ணீர் வடித்துக்கொண்டுதானே இருக்கிறோம்.
    அப்பப்பா.. எத்தனை அடக்கு முறைகள்! எத்தனை அழிவுகள்?
    முதல் உலகப் போரில் கொல்லப்பட்டவர்கள் ஒரு கோடியே அறுபது லட்சம் பேர். காயம்பட்டவர்கள் இரண்டு கோடியே பத்து லட்சம். இரண்டாம் உலகப் போரில் இன்னும் அதிகமாம். ஆறு கோடி பேர் கொல்லப்பட்டுள்ளனர். செங்கிஸ்கானில் தொடங்கி மங்கோலியர்களால் கொல்லப்பட்டவர்கள் ஒரு கோடி. செங்கிஸ்கான் மட்டுமே 25 லட்சம் பேரை சாகடித்திருக்கிறார். குழந்தைகள்,முதியோர்,நோயாளிகள் உள்பட 60 லட்சம் உயிர்களைக் கொன்றவர் ஹிட்லர். கம்போடியாவின் போல்பாட் என்ற சர்வாதிகாரி 10 லட்சம் பேரைக் கொன்றிருக்கிறார். ஈராக்கில் ஆப்கானிஸ்தானில் சோமாலியாவில் பாலஸ்தீனில் அமெரிக்கா போன்ற பயங்கரவாத நாடுகள் செய்யும் அட்டூழியங்களால் அனுதினமும் பலியாகும் அப்பாவிகளின் உயிர்கள் எண்ணிக்கையில் அடங்காதவை. (அப்பப்பா.. பட்டியலிட முடியவில்லை. மூச்சு வாங்குகிறது.)

    ReplyDelete
    Replies
    1. asarath!

      oru varalaare ezhuthitteenga!

      ungaludaya aalosanaikkum-
      anpukkum-
      aravanaippukkum-
      allah nanmai aakki vaippaanaaka!

      Delete
  2. ஒரு அவல்க காட்சியை கண் முன்னால் கொண்டு வந்து
    நிறுத்திப் போகிறது தங்கள் படைப்பு
    தொடர வாழ்த்துக்கள்

    ReplyDelete
    Replies
    1. ramani ayya!

      ungal varavukkum-
      karuthukkum mikka nantri!

      Delete
  3. மனிதாபிமானமே இல்லாத அவலக்காட்சிகளாக அடுக்கி விட்டீர்களே!
    நினைத்தாலே நெஞ்சு பதறுகிறது.

    ReplyDelete
    Replies
    1. ayya!
      ungal varavaal-
      en nenju nirainthathu!

      Delete
  4. கவிதையின் ஒவ்வொரு வரியிலும் அவலங்கள் படம்பிடித்து காட்டப்பட்டுள்ளன. அவலங்களை நீக்க முயற்சிக்கும் தங்களது உள்ளத்திற்கு பாராட்டுக்கள்.

    ReplyDelete
    Replies
    1. maniyan!

      ungal varavukkum-
      karuthukkum mikka nantri!

      Delete
  5. விடு முறை என்றாலே-
    குதூகலிக்கும்-
    குழந்தைகள்!

    வீடே ஆகிவிட்டது-
    சிறைகள்!// உண்மை நிலை உணர்த்தும் வரிகள் . அருமை

    ReplyDelete
    Replies
    1. sasikala;
      ungal varavukku-
      mikka nantri!

      Delete
  6. தொடருமா சீனி.மீண்டும் ஈழப்போரும் தோளில் சாய்ந்த மரணங்களும் கண்ணுக்குள் வந்து போகும் !

    ReplyDelete
    Replies
    1. hemaa!

      ungal varavukku-
      mikka nantri!

      ungal kavalaiyai kilari irunthaal-
      ennai mannikkavum!

      Delete
  7. என்னவோ சொல்ல வாரீக.... தொடருங்கள்

    ReplyDelete
    Replies
    1. mana saatchi!

      neenga vanthathu-
      makizhchi!

      Delete