Friday, 10 May 2013

பெண்ணினம்...!(14)

"ஹாய்"!

"ஹாய்"!

நீங்க-
நலமா!?

ம்ம்..!
நீங்க-
சுகமா!?

"தளங்களில்-"
தொடரும்-
விசாரிப்புகள்!(chat )

உங்களை-
காணாமல்-
எப்படி-
சுகமாகும்..!!-
வீசுகிறான்-
தூண்டில்!

என்னை-
"கண்டால்"-
சுகம்கொல்லுமா-!?
மனசு-
மங்கை-
தொடர்ந்தாள்!

இவன்-
நெஞ்சம்-
படபடப்பு!

ஆனாலும்-
"சிக்கனும்"-என
அங்கலாய்ப்பு!

எழுதி-
அனுப்பினான்-
அழகே-
உன்னை காண்பது-
தவறாகுமா!?

அவளுக்கோ-
யோசனை-
பதில்-
அனுப்பனுமா!?

விரல்கள்-
தட்டியது-
என்னை-
பார்க்க-
வேணுமா!?

ஆமாம்-
அன்பே!-
அந்த முனை!

சரி-
அன்பே-
இந்த முனை!

உம்ம்ம்......

உம்ம்ம்....

நேரத்திற்கு-
இடத்திற்கு-
அவன்-
வந்தான்!

அவளை-
கண்டிடும்-
ஆவலில்-
பரிதவித்தான்!

கையில்-
ஒரு-
மலரெடுத்தான்!

மல மலவென-
அவ்வறையை-
நோக்கி நடந்தான்!

பக்!
பக்!

திக்!
திக்!

பார்க்கவரும்!-
இவனுக்கும்!

காத்திருக்கும்-
அவளுக்கும்!

கதவை-
தள்ளினான்!

விக்கித்து-
தவித்தான்!

ஆம்-
அதிர்ச்சி!
அதிர்ச்சி!

பேரதிர்ச்சி!

உள்ளே-
அவன்-
உடன்பிறந்த-
தங்கச்சி!

வேறொரு-
படத்துடன்-
பெயருடன்-
தளங்களில்-
"உலாவியதால்"-
இவ்வம்பாச்சி!

இது-
நான் கண்ட-
குறும்படம்!(short film )

இனி-
சுடும்-
உண்மைகளும்-
வரும்!

(தொடரும்...)



3 comments:

  1. இத்தகவலை கேள்விப்பட்டிருக்கிறேன்! பகிர்விற்கு நன்றி!

    ReplyDelete
  2. உண்மைகளை அறிய தொடர்கிறேன்...

    ReplyDelete
  3. உண்மைகள் சுடத்தான் செய்யும்! அருமையான தொடர்கவிதை! நன்றி!

    ReplyDelete