Monday 20 May 2013

பெண்ணினம்..!(23)

இனி-
மும்பை-
சிகப்பு விளக்கு-
பற்றியது!

படித்தால்-
கொதிக்கும்-
உங்கள் -
மனமானது!

"கம்யுனிச காம்பாக்ட்டில்"-
வெளிவந்தது-
சிகப்பு விளக்கின்-
ஆய்வு!

"அப்பெண்களில்"-
சிலரை சந்திக்க-
சமூக ஆர்வலரில்-
சிலர் முடிவு!

அப்பெண்கள்-
சொன்ன -
காரணங்கள்!

ஆறாத-
ஆற்ற முடியாத-
ரணங்கள்!

எங்கள் -
பசியை-
தாங்கி கொள்வோம்!

எங்கள்-
குழந்தைகளின்-
பசியை எப்படி-
போக்குவோம்!?

அவர்களின்-
கணவர்கள்-
உறவுகள்-
என்ன-
ஆனார்கள்!?

இப்படியாக-
நம்மில்-
எழும் பல-
கேள்விகள்!

ஆம்-
"அவர்களின்"-
உறவுகள்-
சேர்ந்துவிட்டார்கள்!

இல்லையென்றால்-
"சேர்க்கபட்டார்கள்"!

உயிர் இழந்தவர்களாக-
கலவரத்தால்!

இதில்-
யாரை குற்றம்-
சொல்ல!?-
அபலைகளையா!?

இல்லை-
வேடிக்கை பார்க்கும்-
நம்மையா!?

ஓ!
மதவெறியர்களே!
சாதி வெறியர்களே!

இன வெறியர்களே!
உங்கள் வெறியூட்டும்-
பேச்சுகளால் -
அழிந்தது-
எத்தனை பேர்களோ!?

இப்பாவம்தான்-
உங்களை விட்டு-
நீங்குமா!?

பவ தொழிலுக்கு-
தள்ளிய
உங்களைதான்-
கண்ணீர்கள் -
கலங்கடிக்காமல்-
விட்டுடுமா!?

(தொடரும்...)

// கம்யுனிச காம்பாக்ட்-ஒரு ஆங்கில இதழ். இதன் தகவலை உரையாடலின்போது வழக்கறிஞர்
மூலம் செவி வழி அறிந்தது//







5 comments:

  1. நல்ல கேள்விகள்... உணருவார்களா...?

    தொடருங்கள்...

    ReplyDelete
  2. பெண்கள் பற்றி சிந்திக்க வேண்டிய பல செய்திகளை சொல்லி வருவது நன்று.

    ReplyDelete
  3. அரசியல்வியாதிகளின் கோர நாக்கில் தீ கங்கைதான் வைக்க வேண்டும்.

    ReplyDelete
  4. மிகவும் சிறப்பான பெண்ணீய ஆர்வலர்போலும் உண்மையில் பாராட்டுகள் எத்தனயோ தொழில் உள்ளது ...சித்தாள் வேலைக்கு இன்று
    சிறு நகரங்களை எடுத்துக் கொண்டால் கூட 200- 300 கிடைக்கும் எதற்கும் முயலுவதில்லை இடுகைக்கு பாராட்டுகள்

    ReplyDelete
  5. கொடுமையான செய்திதான்! தொடருங்கள்! நன்றி!

    ReplyDelete