Tuesday, 7 May 2013

பெண்ணினம்...! (11)

பேதை-
வந்தாள்-
தந்தையிடம்-
தயங்கியபடி!

வந்து-
நின்றாள் -
தகப்பனை-
நெருங்கியபடி!

தகப்பன்-
பார்த்தார்-
மகளை-
ஏறெடுத்து !

அவள்-
நின்றாள்-
தரை-
பார்த்து!

வார்த்தை-
வந்தது-
அவளிடமிருந்து-
தட்டு தடுமாறி!

கேட்க -
கேட்க-
அவர் கண்கள்-
நிறம் கொண்டது-
நெருப்பு மாதிரி!

அவள்-
சொன்னது-
காதல் விவகாரம்!

ஏற்கவில்லை -
அவரின்-
மனம்!

விரட்டபட்டாள்-
வீட்டை விட்டு!

புறப்பட்டாள்-
காதலன் மேல்-
நம்பிக்கை கொண்டு!

வீட்டில்-
அவனில்லை!

அவன்-
பெற்றோர்கள்-
இவளை ஏற்கவில்லை!

சொன்னார்கள்-
அவனுக்கு-
கல்யாணம்-
வேறு பெண்ணுடன்!

இனி வராதே-
அவன்-
எண்ணத்துடன்!

இவளுக்கோ-
தலை சுற்றியது!

குமட்டி கொண்டு-
வந்தது!

வந்த-
வாந்தி!

இல்லை-
"பித்த வாந்தி"!

ஆம்-
அது-
கர்ப்ப வாந்தி...!!!

பசி மயக்கம்-
ஒரு பக்கம்!

பொறுத்திருந்தாள்-
இருட்டும் வரைக்கும்!

(தொடரும்.....)



6 comments:

  1. அடடா......

    தொடர்கிறேன் நானும்....

    ReplyDelete
  2. மீதியையும் படித்துவிட வேண்டும்...
    தொடருங்கள். நானும் தொடருகிறேன்.

    ReplyDelete
  3. அந்த தந்தையின் உள்ளம்..
    எவ்வளவு வேதனையை அனுபவித்திருக்கும்..
    நினைக்கவே சிரமமாக இருக்கிறது...

    ReplyDelete
  4. பரிதாபம்! தொடர்கிறேன்! மீதி க(வி)தையை அறிந்து கொள்ள! நன்றி!

    ReplyDelete
  5. வாந்தி வர அளவுக்கா? சரியானவன யார் தேர்ந்தெடுக்கறாங்க!

    ReplyDelete