Monday, 30 May 2011

கண்டதுண்டா!

கருவறையின் காரிருள்
கண்டதுண்டா-அதுவே
அவளின் கூந்தல்!

கருப்பாக இளம்பிறையை
கண்டதுண்டா!-அதுவே
அவளின் புருவம்!

அமாவாசையும் ,பௌர்ணமியும்
சங்கமிப்பதையும் கண்டதுண்டா!-
கருப்பும் வெள்ளையுமாய்
அவளது கண்கள்!

பூக்கள் பூக்கும் சப்தம்
கேட்டதுண்டா!-கேட்கலாம்
அவளது சிரிப்பில்!

நிலவின் முதுகை
கண்டதுண்டா!-அதுவே
அவளது முகம்!

ஆடை மறைத்து கொண்டது
மிச்சத்தை!

பார்த்தல் எழுதுவேன்
சொச்சத்தை!

அவள் பொன்னான
படைப்பு!

யாரும் கண்டிராதவற்றின்
கூட்டமைப்பு!

எண்ணியதை எழுதிவிட்டேன்
எழுத்தில்!

நேரில் சொல்லிவிட
துணிவில்லை மனதில்!

இன்னுமா புரியவில்லை!

வாசனை இல்லாத-
மல்லிகையா!?

அன்பே!
மல்லிகை உனக்கு -என்ன
தோழியா!?

அது பூத்து சிரிப்பது கூட-
நீ !
சொல்லியா!?

அன்பிற்கு உரியவளே!-

மலரின் மொழி-
அறிந்த உனக்கு ,!

என் மனதின் வலி -மட்டும்
தெரியவில்லையா!!?

வெற்றி நிச்சயம்..!

முத்து வேண்டுமானால்-
கடல் அலையை-
எதிர்கொள்!

தேன் வேண்டுமானால்
தேனீக்கள் கொட்டுவதை-
தாங்கி கொள்!

பூக்கள் வேண்டுமானால்-
பூச்சிக்கள் கடியை-
தாங்கிகொள்!

வெற்றி வேண்டுமானால்-
விடா முயற்சியை-
மேற்கொள்!

அதற்கு முன்னால்-
உனது தாழ்வு மனப்பான்மையை-
கொல்!

சத்தியம்!
வெற்றி நிச்சயம்!!

ஏன்!?

வான் மழையை-
பூமி மறுப்பதில்லை!

வண்டுகளின் வருகையை-
பூக்கள் தவிர்ப்பதில்லை!

நிலவினை மேகம்-
துரத்துவதில்லை!

நதி நீரை-
கடல் கடிந்து கொள்வதில்லை!

உயிரே!நீ
உடலான என்னை
வெறுப்பதேன்!?

பொருந்துமா!

விட்டு கொடுப்பவர்கள்
கெட்டு போவதில்லை --
என்றான் அவன்!
சரி என்று ,
விட்டு கொடுத்ததினால்
கெட்டு போனாள்--
அவள்!!

தெரியுமா!?

மேகத்திற்குள்-
மழை!

மின்னலுக்குள்-
மின்சாரம்!

மலருக்குள்-
தேன்!

எல்லோரும் அறிந்த-
ஒன்று!

எத்தனை பேருக்கு -
தெரியும் !

என்னுள்தான்-
நீ என்று!?

கருப்பு நிலாக்கள!

கருத்த வானிலோ-
ஒரு வெள்ளை நிலா!

என்னவளின் -
வெளுத்த முகத்திலோ -
இரு கருப்பு நிலாக்கள்!!-

 அதுதான்-
இரு கரு விழிகள்!