Monday, 30 September 2013

பெண்ணே...மறவாதே...!!

பெண்ணே-
உன்னை-
மலர் என்பார்கள்!

மருவிட-
முனைவார்கள்!

உன்னுள்-
முள்ளை-
வைத்திருக்கவும்-
மறவாதே!

உன்னை-
மென்மை-
என்பார்கள்!

தன்மையானவள்-
என்பார்கள்!

வன்மையாக-
இருக்கவும்-
மறவாதே!

படிதாண்டாதே-
என்பார்கள்!

அடுப்படியில்-
அடக்கிட-
முனைவார்கள்!

அறிவாலும்-
பெறும் பட்டத்தாலும் -
பாரினை -
ஆளபிறந்தவள்-
நீ-என்பதை
மறவாதே!

பெண் சுதந்திரம்-
சுதந்திரம்-என
பிதற்றுவார்கள்!

ஆடை குறைப்பே-
சுதந்திரம்-
என்பார்கள்!

ஆடை குறைப்பு-
அவமானம்-என்பதை
மறவாதே!

"கட்டி கொடுக்கவேண்டியதற்கு-"
படிப்பெதெற்கு-
என்பார்கள்!

சமூக கட்டமைப்பே-
பெண்கல்வியால்தான்-
என்பதை-
மறவாதே!

பெண் முன்னேற்றம்-
கூடாது-
இது-
அறிவீனர்கள்!

பெண்முன்னேற்றமும்-
அவசியம்-
அதுதான்-
அறிஞர்கள்!

Sunday, 29 September 2013

ஏங்க மோடி ஜி ...!!

உத்ரகாண்ட் -
உருண்டது!

நல்லுள்ளமெல்லாம்-
உறைந்தது!

நற்செய்தி-
ஒன்று-
கிடைத்தது!

நம்பும்படியாகவா-
இருந்தது!?

"சூப்பர் ஹீரோ"-
வந்தாரு!

பதினைந்தாயிரம் -
மக்களை-
காப்பாற்றினாரு!

உண்மை-
வெளியில்-
வந்தது!

பொய்யென-
உறுதியானது!

அடுத்தாதாக!-
அஜீத் புகழ்ந்தாருனு!

செய்தி வந்தது-
சமூகதளத்தில் (டுவிட்டரில்)-
கணக்கே (அக்கவுண்ட்)-
இல்லையென்றார்னு!

அடுத்து-
அமிர்தாப்-
புகழ்ந்தார்-
என!

அவரும்-
மறுத்தார்-
அது-
போலியென!

இஸ்லாமிய மக்கள்-
கூட்டம் கூடுது-
"படங்கள் -"
காட்டியது!

பிறகு-
"பத்தாயிரம் பர்தா"-
வாங்கியது-
வெளிவந்தது!

ரஜினி காந்த்-
பூங்கொத்து கொடுத்ததாக-
சுவரொட்டி ஒட்டுனாக!

எங்களுக்கு-
சம்மந்தம் இல்லை-என
லதா ரஜினி-
மறுத்ததாக!

ஏங்க-
மோடி ஜி!

காமெடி பண்ணுறாங்களா -
உங்கள வச்சி...!!!!?


Saturday, 28 September 2013

பார்வையற்ற பட்டதாரிகள்..!

இவர்களென்ன!?-
சட்டமன்றத்தில்-
நீல படம் பார்த்த -
கலாசார காவலர்களா!?

தேசத்தை துண்டாடிவிட்டு-
தேசபக்தர்களென-
சொல்லி கொள்பவர்கள!?

அங்கங்களை காட்டி-
ஆடிடும்-
ஆபாச நடனமணிகளா!?

வட்டியால்-
வயிறு வளர்க்கும்-
வஞ்சகர்களா!?

மக்களை-
"தெளியாமல்"வைத்திருக்கும்-
மது விற்பனையாளர்களா!?

காதலென பேரை சொல்லி-
காமகளியாட்டம்-
ஆடுபவர்களா!?

பெற்றெடுத்த-
பெற்றோர்களை-
முதியோர் இல்லத்தில்-
தள்ளியவர்களா!?

நல்லாட்சி மலரும் -என
சொல்லி சொல்லியே-
"மாற்றாத-"
"நல்லவர்களா!?"

இப்படிப்பட்டவர்கள்-
கூட!

சமூகத்தில்-
அந்தஸ்துகளோட!

ஆனால்-
பார்வையற்ற பட்டதாரிகள்!?

அவர்கள்-
கேட்கவில்லை-
யாசகங்கள்!

வழிகளை-
கேட்கிறார்கள்!

தலை நிமிர்ந்து-
பவனி வர-
விரும்புகிறார்கள்!

அவர்களின்-
ஆசையில் -
என்ன தவறு-
இருக்கிறது!?

அம்மக்களுக்கு-
நல் வழிகாட்டணும்-
திறந்த மனதோடு!

உலகில்-
எத்தனையோ பேர்கள்-
கண்களிருந்தும்-
பார்க்கமறுக்கிறார்கள் !

இவர்களோ-
நம்பிக்கை ஒளியால்-
நடக்கிறார்கள்!


Friday, 27 September 2013

செவ்விதழாள்.....!!

"செவ்விதழாள்"-என
வர்ணிக்கபட்டார்கள்-
கவிதைகளால்!

இனி அது-
"தீஞ்ச இதழுடையாள்"-என
மாற்றம்பெறும்-
"புகைப்பதால்"!

Thursday, 26 September 2013

ஒரு பார்வையிலே....

உன் -
ஒத்த விழி-
பார்வை!

எனக்கானது-
ஒரு வழி பாதை!

பார்வையின்-
தாக்கத்தை-
தடுக்கவும்-
முடியவில்லை!

போன வழியிலிருந்து-
திரும்பவும்-
முடியவில்லை!

Wednesday, 25 September 2013

விதை....!!

புதையுண்டது-
கற்பாறையிலா!?

களிமண்ணிலா!?

விதைகள்-
மலைப்பதில்லை!

மயங்குவதில்லை!

"உணர்வற்றவைகள்"-
மக்கி மண்ணாகிறது!

"வீரியம்" கொண்டவைகள்-
முக்கி வெளிவந்து-
மரமாகிறது!

அதுபோலவே-
மனிதன்!

சோதனையின்போது-
சோம்பிடுபவன்-
சமாதியாகிறான்!

சிலுத்து கொண்டு-
பயணிப்பவன்-
சரித்திரமாகிறான்!

Tuesday, 24 September 2013

குட்டை பாவாடை..!!

மானம்-
காக்கவா!?

சந்தி-
சிரிக்கவா!?

தீர்மானிப்பது -
காற்று!