Saturday 28 September 2013

பார்வையற்ற பட்டதாரிகள்..!

இவர்களென்ன!?-
சட்டமன்றத்தில்-
நீல படம் பார்த்த -
கலாசார காவலர்களா!?

தேசத்தை துண்டாடிவிட்டு-
தேசபக்தர்களென-
சொல்லி கொள்பவர்கள!?

அங்கங்களை காட்டி-
ஆடிடும்-
ஆபாச நடனமணிகளா!?

வட்டியால்-
வயிறு வளர்க்கும்-
வஞ்சகர்களா!?

மக்களை-
"தெளியாமல்"வைத்திருக்கும்-
மது விற்பனையாளர்களா!?

காதலென பேரை சொல்லி-
காமகளியாட்டம்-
ஆடுபவர்களா!?

பெற்றெடுத்த-
பெற்றோர்களை-
முதியோர் இல்லத்தில்-
தள்ளியவர்களா!?

நல்லாட்சி மலரும் -என
சொல்லி சொல்லியே-
"மாற்றாத-"
"நல்லவர்களா!?"

இப்படிப்பட்டவர்கள்-
கூட!

சமூகத்தில்-
அந்தஸ்துகளோட!

ஆனால்-
பார்வையற்ற பட்டதாரிகள்!?

அவர்கள்-
கேட்கவில்லை-
யாசகங்கள்!

வழிகளை-
கேட்கிறார்கள்!

தலை நிமிர்ந்து-
பவனி வர-
விரும்புகிறார்கள்!

அவர்களின்-
ஆசையில் -
என்ன தவறு-
இருக்கிறது!?

அம்மக்களுக்கு-
நல் வழிகாட்டணும்-
திறந்த மனதோடு!

உலகில்-
எத்தனையோ பேர்கள்-
கண்களிருந்தும்-
பார்க்கமறுக்கிறார்கள் !

இவர்களோ-
நம்பிக்கை ஒளியால்-
நடக்கிறார்கள்!


4 comments:

  1. பார்வை உள்ளவர்களே பட்டம் பெற தடுமாறிக் கொண்டிருக்கையில் கடும் உழைப்பினால் பட்டம் பார்வை பெற்றவர்களுக்கு வேலை வாய்ப்பு வழங்குவது அரசின் கடமை. மாற்றுத் திறனாளி களின் வேலை வாய்ப்படி உறுதி செய்த சட்டம் கூட இயற்றலாம்.
    நல்ல கவிதை

    ReplyDelete
  2. உலகில்-
    எத்தனையோ பேர்கள்-
    கண்களிருந்தும்-
    பார்க்கமறுக்கிறார்கள் ! சிந்திக்க வைத்த வரிகள்.

    ReplyDelete
  3. அருமை..... வாழ்த்துகள்.

    ReplyDelete