Monday 18 June 2012

வேலையும்/கடமையும்!



பாறையினுள்ளேதான்-
சிற்பம்-தேவை இல்லாததை
ஒதுக்குவதே-
சிற்பியின் வேலை!

மாணவனுக்குள் தான்-
மாண்புகள்-
மேருகேற்றுவதுதான்-
ஆசிரியர் வேலை!

தன் பிள்ளையினுள்ளேதான்-
சிறந்த தலைவன்!-
சிறப்புகளை-
சீர் செய்வதுதான்-
பெற்றோர்களின் வேலை!

தன் மனைவி தான்-
தேவதை-
மனையாளை உண்மையாய்-
நேசிப்பதுதான்-
கணவனின் வேலை!

சிதிலமடைந்த சமூகத்தை-
சீரமைப்பதுதான்-
சீர்திருத்தவாதிகளின்-
வேலை!

வெளங்காத -
நாட்டு மக்களையும்-
துலங்கும் மக்களாக்குவதுதான்-
நாட்டு தலைவர்களின் -
வேலை!

வேலையை கடைமையேன-
செய்திட வேண்டும்!

கடமையை-
கண்ணின் இமையாய்-
பாதுகாக்க வேண்டும்!

வேலையை-
வேண்டா வெறுப்புடன்-
செய்பவன்-
"இருக்கும் வரை"-
நினைவில் இருக்கிறான்!

வேலையை கடமையாக-
செய்பவன்-
"இல்லாதபோதும்"-
நம் நினைவோடு -
இருக்கிறான்!

22 comments:

  1. கடமையை வேலையாகச் செய்பவனும்
    வேலையைக் கடமையாகச் செய்பவனுக்குமான
    வித்தியாசத்தை விளக்கியவிதம்
    அருமையிலும் அருமை
    தொடர வாழ்த்துக்கள்

    ReplyDelete
    Replies
    1. ayya ungal muthal varavukkum-
      karuthukkum mikka nantri!

      Delete
  2. அப்ப ஒருத்தரும் அவரவர் வேலையை சரியாய் செய்வதில்லை என்று சொல்லுங்கள்.!

    ReplyDelete
    Replies
    1. suvaduka!
      ungal karuthukku mikka nantri!

      Delete
  3. நண்பா சரியா சொல்லியிருக்கிற்ங்க....நாட்டுல வேலையில்லாதவங்க தொகை ஜாஸ்த்திதான்...:(

    ReplyDelete
  4. //பாறையினுள்ளேதான்-
    சிற்பம்-தேவை இல்லாததை
    ஒதுக்குவதே-
    சிற்பியின் வேலை!//
    superb

    ReplyDelete
  5. நண்பா தெளிவா சொல்லீடீங்க.. சபாஷ்
    நிறைய வேலை அற்ற பிடாரிகள் நாட்டுல உலவுது

    ReplyDelete
    Replies
    1. manasaatchi!

      ungal varavaal-
      mikka makizhchi!

      Delete
  6. செய்வதை கடமைக்கெனச் செய்யாமல் ஈடுபாட்டுடன் வேலை செய்தால் எதுவும் சிறக்கும். வேலை, கடமை இரண்டுக்கும் உள்ள வித்தியாசத்தையும் உயர்வையும் அழகா விளக்கிட்டீங்க சீனி. மிக ரசித்தேன் இந்தக் கவிதையை. பிரமாதம்.

    ReplyDelete
    Replies
    1. ganesh!

      ungal
      varavukkum karuthukkum mikka nantri!

      Delete
  7. வேலையை-
    வேண்டா வெறுப்புடன்-
    செய்பவன்-
    "இருக்கும் வரை"-
    நினைவில் இருக்கிறான்!

    வேலையை கடமையாக-
    செய்பவன்-
    "இல்லாதபோதும்"-
    நம் நினைவோடு -
    இருக்கிறான்!

    அற்புதமான வரிகள்.

    ReplyDelete
  8. வேலையை-
    வேண்டா வெறுப்புடன்-
    செய்பவன்-
    "இருக்கும் வரை"-
    நினைவில் இருக்கிறான்!

    வேலையை கடமையாக-
    செய்பவன்-
    "இல்லாதபோதும்"-
    நம் நினைவோடு -
    இருக்கிறான்!
    /////
    அருமையா சொல்லி இருக்கீங்க அண்ணா! அனைத்தும் நிதர்சனம்! கிடைத்த பிடிக்காத வேலை, கிடைக்காத பிடித்தமான வேலை, தகுதிக்கு ஏற்ப கிடைக்காத வேலை, தேவையை தீர்க்காத வேலை என்று அவரவர்களுக்கு அவரவர்கள் கவலை வேலையில் தெரிகிறது! கடமையையும் கடனென செய்கிறார்கள்!

    ReplyDelete
    Replies
    1. yuvaraani!

      ungaludaya virivaana pinnoottathirkku-
      mikka nantri!

      Delete
  9. உண்மை
    அதை ரெம்ப தெளிவா சொன்னீர்கள் சகோ

    ReplyDelete
    Replies
    1. seythali!

      ungal karuthukku mikka nantri!

      Delete
  10. பேஷ். பேஷ்.. ரொம்ப 'நன்னா' இருக்கு;
    தொடர்ந்து எழுதுங்க. வாழ்த்துக்கள்!

    ReplyDelete