Saturday 23 June 2012

தப்பிசிட்டேனோ ....!?



சுண்டு விரல்கள்-
பிடித்து!

சாலையோரம்-
நடந்து!

உள்ளங்கையில்-
முகம் புதைத்து!

உச்சி வரை-
கத கதப்பை-
உணர்ந்து!

மயிலிறகால்-
முதுகு தண்டை-
துழாவுவதாக-
நினைத்து!

என் நிலையை-
நானே மறந்து!

உன் கூந்தலெனும்-
காட்டில் தொலைந்து!

வெளியேற -
வழி தெரியாமல்-
அலைந்து!

நறுமணம் வரும்-
திசை நோக்கி -
பயணித்து!

நாசி துவாரத்தை-
வந்தடைந்து!

பூந்தோட்டதிற்கு-
சென்றோம்-நாம்
இருவரும் இணைந்து!

மலர்களை பார்க்க-
மறந்தேன்-
உன் முகம்-
பார்த்து!

துவண்டிடும்போதேல்லாம்-
தோள் சாய்ந்து!

கோதி விட்ட-
கை ரேகை பார்த்தே-
கண்ணயர்ந்து!

ஊரும் உலகமும்-
தூங்கி விட்டது!

இமைகளுக்கிடையே -
உன் நினைவுகள்-
இருந்து!

மூடிட தடை செய்தது-
வழிதனை-
மறைத்து !

இத்தனை-
ஆசையும் அவஸ்தையும்-
எனக்கு ஏன்-?
நடக்கிறது!

ஒரே கணம்தான்-
என்னை நீ-
ஓர பார்வை பார்த்து!
கடந்து சென்றது!

உன் ஒத்த பார்வையிலேயே-
இருக்கிறேன்-
"பித்து" பிடித்து!

நாம் ஒன்றாக-
வழ்ந்திருப்போமேயானால்-
இணைந்து......!!!!?



22 comments:

  1. கிரேட் எஸ்கேப்பா

    ReplyDelete
  2. ஒத்த பார்வை கொடுத்த பித்தும்
    அது கொடுத்த கவிதையும் மிக மிக அருமை
    மனம் கவர்ந்த பதிவு
    தொடர வாழ்த்துக்கள்

    ReplyDelete
  3. நிஜ வாழ்க்கை ஒருநாள் அலுத்துப்போகும்.

    எஸ்கேப் ஆனாலும் இதுபோன்ற நீங்காத நினைவுகள் என்றும் பசுமையாக மனதில் தங்கி நிரந்தரமாக மகிழ்ச்சியினைத் தந்து கொண்டே இருக்கும்.

    /மலர்களை பார்க்க-
    மறந்தேன்-
    உன் முகம்-
    பார்த்து!/

    த்ப்பிக்கவே முடியாத அழகான நினைவலைகள். பாராட்டுக்கள்.

    ReplyDelete
  4. Replies
    1. thanapaalan!

      ungal varavukku mikka
      nantri!

      Delete
  5. தப்பிச்சிட்டீங்க நண்பரே....
    அதற்காக வாழ்த்துக்கள்.

    (கிடைத்திருந்தால் இப்படியான கவிதைகள்
    பிறந்திருக்காதுன்னு நினைக்கிறேன்.)

    ReplyDelete
    Replies
    1. arounaa!

      oo!
      athu veraya!?

      ungal varavukku mikka nantri!

      Delete
  6. சூப்பர் சீனி.
    உங்கள் கவிதைகளில் சிலவற்றில்
    சீரழிவைப் பார்த்து சீறும்
    வீர உணர்வும் உண்டு
    சிலவற்றில்
    காதலியைக் கண்டு உருகும்
    ஈர உணர்வும் உண்டு.
    உங்கள் கவிதைகளில் சில
    தித்திக்கும் அமுதம்;
    இன்னும் சில
    சுட்டெரிக்கும் அமிலம்.
    மொத்தத்தில்
    பன்முகப் பார்வை கொண்ட
    பல்சுவைக் கவிஞர் நீங்கள்.

    ReplyDelete
    Replies
    1. asarath!

      appudiyaa....?

      alhamthulillaah!

      Delete
  7. ஐயா......ராசா.....நீயா இப்பிடி எழுதுற..

    நான் எங்க இருக்கிறேன் இப்ப...

    நல்ல படைப்பு நண்பா...தொடருங்கள் ஓரப்பார்வையை

    ReplyDelete
  8. Sadhak Maslahi அவர்களின் கூற்றை அப்படியே வழிமொழிகிறேன்...

    ReplyDelete