Tuesday, 25 September 2012

அதுவா!? இதுவா!?

 மழை துளிக்காக-
சிப்பி திறந்திருக்கா!?

சிப்பி திறந்திருப்பதால்-
மழை துளி-
அதில் விழுகிறதா!?

உடலுக்காக-
உயிரா!?

உயிருக்காக-
உடலா!?

மலர் என்றாலே-
அழகா!?

அழகேன்றால்தான்-
மலரா!?

நீதிவான்களை-
கண்டறியவே-
அநியாயங்கள்-
நடக்கிறதா!?

அநீதிகள் நடப்பதால்தான்-
நியாயவான்கள்-
உருவாகிறார்களா!?

பூமிக்காக-
மழையா!?

மழைக்காக-
நீர் ஆவியா!?

துன்பங்கள்-
இன்பத்தை-
அடையாள படுத்தவா!?

இன்பத்தின் இனிமையை-
ருசிக்க செய்வது தான்-
துன்பமா!?

பசிக்காக-
உணவா!?

உணவுக்காக-
பசிக்கிறதா!?

வாழ்வுக்காக-
தேடலா!?

தேடும் வரைதான்-
வாழ்வா!?

சிந்தனையால்-
எழுத்தா!?

எழுதுவதால்-
சிந்தனையா!?

அதுவா!?
இதுவா!?

சொல்ல முடியல-
எதுவா!?

இரண்டுக்கும்-
உறவுண்டு!

பார்க்க முடியா-
பிணைப்பு உண்டு!

அதுபோல்தான்-
நம் வாழ்வுக்கும்-
முடிவுண்டு!

"முடிவுக்கு"பின்-
நம் செயலுக்கு-
"கூலி" உண்டு!!



Sunday, 23 September 2012

அறிவது என்னவென்றால்...

தேனீக்கள்-
தேனை சேகரிப்பது!

மேகங்கள்-
தண்ணீரை சுமப்பது!

பட்டு பூச்சிகள்-
பட்டு நூற்கள்-
தருவது!

மரங்கள்-
கனிகளை-
தருவது!

செடிகள்-
பூக்கள் -
தருவது!

இறப்பு நிச்சயம்-என
தெரிந்தும்-
ராணி தேனீ இடம்-
"உறவில்"ஆண் தேனீ-
ஈடுபடுவது!

தன்னுள்-
கடல்-
உணவுகளை-
வைத்திருப்பது!

இன்னும் எல்லை-
மீறாமல்-
"பொறுமை"காப்பது!

பூமி நம்மை-
சுமப்பது!

வேதனை என-
தெரிந்தே -தாய்
கருவை சுமப்பது!

பிராண வாயுவை-
மரங்கள் தருவது!

இன்னும்-
எத்தனையோ-
உள்ளது!

அதை அடுக்கிட-
எவராலும்-
முடியாது!

தனக்கு -
உபயோகம் இல்லாததை-
"இவைகள்"ஏன்-
செய்கிறது!

அவையெல்லாம்-
மனிதர்களுக்கு-
பிரயோஜனம் ஆகிறது!

"அறிவுடையோருக்கு-
எத்தனையோ-
அத்தாட்சிகள் உள்ளது"-
இறை வாக்கு!

அத்தாட்சிகளை-
அறிய கூடிய-பார்வைதான்
இல்லையோ-நமக்கு!?

படைப்புகளின்-
"தன்மையை-"
 அறிய முயல்வது-
விஞ்ஞானம் !

படைத்தவனின்-
வல்லமையை -அறிவதே
மெய்ஞானம் !




Friday, 21 September 2012

அறிவுக்கு பொருந்தும்....!!?

வயது வேகத்தில்-
"வாழ்ந்தார்கள்"!

"வாழ்ந்ததால்-"
பிறந்தவர்கள்!

வயசான -
பெற்றவர்களை-
கவனிக்கணுமா!?

"மாங்கு ,மாங்கு"-என
படித்தவர்கள்!

மனைகளைஎல்லாம்-
விற்று மருத்துவர் ஆனவர்கள்!

நோய் என வருபவர்களிடம்-
நியாயமா நடக்கணுமா!?

அரை மணி நேரம்-
தாமதமானாலும்-
அரைநாள் சம்பளம்-
அம்போவென ஆகும்போது!

அடிபட்டு கிடப்பவரை-
ஆஸ்பத்திரியில்-
சேர்க்கனுமா!?

சத்தான உணவை-
உண்டு-!
"கெத்தா " ரத்தம்-
சேர்த்ததை!
யாருக்கோ!?-
ரத்தம் தானம்-
செய்யனுமா!?

எங்கோ-
 இயற்கை சீற்றம்!
இங்கே நாம்-
உணவு பொருட்கள்-
அனுப்பனுமா!?

கஷ்டப்பட்டு தான்-
உழைச்ச காசை-
கஷ்டபடுபவர்களுக்கு-
கொடுக்கனுமா!?

கோடி கணக்குல-
செலவுபண்ணிய-
அணு உலையை-
மூடியே போடணுமா!?

அறிவுபூர்வமான-
பதில்-
தேவை இல்லாதது!

அன்புபூர்வமான-
பதில்-
தேவையானது!

அறிவுக்கு மட்டும்-
இடம் கொடுத்து-
பதில் தேடுவது-
அபத்தம்!

அறிவோடு அன்பு-
கலந்த தேடலே-
பொருத்தம்!

அறிவியல்-
உலகம் இது!

அன்பா!?-
அப்படின்னா!?-என
கேட்கும் -காலம்
இது!

அதன் விளைவே-
உலகம் சுடுகாடாகுது!


ஏழைக்கு உதவுங்கள்-என
கையை நீட்டினார்-
ஒருவர்!

நீட்டிய கையில்-
எச்சியை துப்பினார்-
எதிர் இருந்தவர் !

இது எனக்கு-
மறுகையை நீட்டி-
கேட்டார்-
ஏழைக்கு!?

வெட்கி தலை குனிந்தார்-
தவறு செய்ததற்கு!

கை நீட்டி-
உதவி கேட்டவர்-
அன்னை தெரசா!

எந்த தீர்வுக்கும்-
அறிவுடன் அன்பும்-
இருக்கணும்-
முழுசா!!

"அளவற்ற அருளாளன்-
நிகரற்ற அன்புடையோன்"-
படைத்த இறைவன்!

அன்பு கலந்த-
நெஞ்சம் உள்ளவன்தான்-
மனிதன்!





Wednesday, 19 September 2012

காதலெனும் தேர்வில்...(4)

திரும்பி-
 திரும்பி-
பார்த்தவளை!

தீர்மானித்து விட்டேன்-
திரும்ப -
பார்க்கவே -
கூடாது-
அவளை!

"கொடூரம்" நடக்காமல்-
போனதால்!

நடமாட -
அவளை விட்டதால்!

பிரிந்த காரணத்தை-
அறியலாம்-
ஒரு நாள்!

அவளின்-
நியாயத்தையோ!

எனது-
தவறையோ!?

நாடாளு மன்ற-
கூட்ட தொடரை-
நடக்க விடாமல்-
தடுத்தது-
எதிர் கட்சி!

அதனால்-
லாபம் அடைந்தது-
ஆளும் கட்சி!

எதிர் கட்சிக்கு-
ஆளும் கட்சி-
பதில் சொல்லவில்லை!

எதிர் கட்சியை-
எதிர் கேள்வி கேட்கவும்-
ஆளும் கட்சிக்கு-
வாய்ப்பில்லை!

இவர்களை நம்பி-
ஏமாறும் மக்களின்-
நிலையோ-
கேவலப்பட்ட நிலை!

கோட்டை நீயும்-
தாண்ட கூடாது-
நானும் தாண்ட-
மாட்டேன்-
பேச்சி பேச்சாத்தான்-
இருக்கணும்-வடிவேலு
காமெடி!

நீயும் பேசகூடாது-
நானும் பேசமாட்டேன்-
இரண்டு கட்சியுமே-
தப்பிக்கலாம்-இது
அரசியலின் "அசிங்க-"
நெடி!

நான்-
அப்பேதையை-
கொன்று இருந்தால்!

என் கோபத்தை-
தீர்க்க அதுவே-
வழி என-
வாதிட்டிருந்தால்!

இது-
தனி மனித உரிமை-என
உலகம் போற்றுமா!?

அவள்-
 உறவுகள்தான்-
வேடிக்கை -
பார்க்குமா!?

அது போலதான்-
உயிரினும் மேலாக-
நேசிப்பவரை-
உபயோகமில்லாமல்-
அசிங்கபடுத்தி விட்டு!

கோடானு கோடி-
உள்ளங்களை-
ரணமாக்கி விட்டு!

இது-
கருத்து சுதந்திரம்-என்பது
முறையா!?

இதுதான்-
நாகரீகத்தின்-
நெறியா!?

எவ்வளவு முடியுமோ-
அவ்வளவு இழிவுபடுத்தி விட்டு-
"சுதந்திரம்" என்பது-
முறையா!?

ஆரோக்கியமான-
விமர்சனங்களும்-
விவாதங்களும்!-
வரவேற்கத்தக்கது!

அறிவுக்கும்-
மனித மாண்புக்கும்-
பொருத்தமானது!

மாபாதக செயலின்-
எல்லைக்கு சென்றேன்!

நல்ல வேளை-
திரும்பி வந்தேன்!

என்னை -
தடுத்தது-
குட்டி நாய்-
பால் குடிக்க-
முயன்றது!

"போக "வேண்டிய-
வழியை காட்டியது-
பிஞ்சு குழந்தை-
கபடமில்லாமல்-
சிரித்தது!

பேருந்தில் -
சன்னலோரத்தில்-
இருந்தபடி!

சில்லென்ற காற்றை-
ரசித்தபடி!

இனியாவது-
மனிதனாக -
வாழனும் -என
நினைத்தபடி!

"காதல் தேர்வில்"-
தோல்வி கண்டேன்!

வாழ்க்கை பாதையை-
தெரிந்து கொண்டேன்....!!

(முற்றும்)

(குறிப்பு-கொலை முயற்சி கதைக்காக கற்பனையே-
முன்னேயே குறிப்பிட்டு இருந்தால் சுவராஸ்யம் குறைந்திடும் என்பதால்-
கடைசியில் எழுதி விட்டேன்)



Tuesday, 18 September 2012

காதலெனும் தேர்வில்..(3)

 வந்து விட்டது-
பேருந்து நிலையம்!

கொஞ்ச தூர-
நடை பயணம்!

தேநீர் கடை-
அருகில் அமர்வு!

"விருந்து"நடத்திட-
அவ்விடமே தேர்வு!

அவ்விடம்-
ஒரு முச்சந்தி!

தப்பிக்கலாம்-
"பிரிச்சி மேஞ்சி!"

ஒரு வேளை-
மாட்டிகொண்டால்!?

புழல்-
சிறைதான்!

வாழ்வோ -
சாவோ-ஒருவனுடனே-
போய் விடுமே!

ஒரு சமூகத்தின் மேல்-
பழி போட-"இஸ்மாயில் "என-
பச்சை குத்தி-
காந்தியை கொன்ற -
நாதுராம் கோட்சே-
நானில்லையே!

மக்கள்-
சுதாரித்து-
விட்டால்!?

நம்ம நாடு-
என்னைக்கோ-
ஏமாற்றுபவர்கள் கையில்-
இருந்து -உருப்பட்டு இருக்குமே!-
அவர்கள் சுதாரித்து-
இருந்தால்!

ஆழ்கடலில் தோன்றும்-
அலைகள் -கரையில்-
வெளியேறுவது போல!

மனதில் கேள்வியும்-
பதிலும் -மாறி மாறி-
தோன்றியது-
அது போல!

ஒரு தேநீரும்-
இரண்டு போண்டாவும்-
காலை பசியை-
போக்க!

நடத்த வேண்டிய-
"ரத்த களரி"-
என் கோபத்தை-
போக்க!

சாலையோரம்-
செத்து கிடந்தது-
தாய் நாய்!

அது இறந்தது-
தெரியாமல்-பால்
குடிக்க முயலும்-
குட்டி நாய்!

அச்சோகத்தை-
பார்த்து கொண்டு-நான்
தேநீர் அருந்தியவனாய்!

நேரம் நெருங்கியது-
அவள் என் முதுகுபுறமாக-
வந்து- காய் கறி-
வாங்க போகிற-
இடம் அது!

தூரத்தில் அவள்-
கூட்டத்தினூடே-
வருவது-
தெரிந்தது!

அவள் நெருங்குவதை-
உணர்த்தியது-யாருடனோ-
பேசிகொண்டுவருவது!

நான் ஏதுவாக-
திரும்பி தயாராவதுதான்-
நல்லது என-
மனதிற்கு பட்டது!

"அடச்சே"-என
அவளின் சப்தம்!

ஒரே நிசப்தம்!

திரும்பி பார்க்கிறேன்-
சாணியை மிதித்து விட்டாள்!

அவளின் கணவன்-
தண்ணீர் ஊற்றினான்-
கழுவிட-
காலில்!

ஆனால்-
ஆனால்-
அவளுக்கு குழந்தை-
இருக்கிறது!

அச்சு அசலாக-
அவளை போன்றே-
இருக்கிறது!

திரும்பிய என்னை-
பார்த்து-பால் புட்டியை-
காட்டி வேணுமா!?-என
சைகை காட்டி-
சிரிக்கிறது!

பாறைக்குள்ளும்-
ஒளிந்திருக்கும்-
நீர் வெளிவருவது-
போல்!

நீண்ட இடைவெளிக்கு பின்-
என் கல் மனசில்-
ஈரம் கசிந்திட செய்தது-
அக்குழந்தையின் -
சிரிப்பு போல!

என் திட்டத்தை-
செயல்படுத்த முடியாமல்-
திகைத்து நின்றேன்!

என்னை "அவர்கள்"-
கடந்து போனதை-
பார்த்து கொண்டிருந்தேன்!

மெல்லியவளாக-
இருந்தவள்!

சற்று பருத்து -
இருக்கிறாள்!

என்னை அவளுக்கு-
அடையாளம்-
தெரியவில்லை -
போலும்!

கொஞ்ச தூரம்-
போனவள்-
திரும்பி என்னை-
பார்த்தால்-உள்ளுணர்வு
தட்டிருக்கும் போலும்!

எனது-
நிலையோ...!?

படிக்க-
 பொறுங்க-
அடுத்த பதிவை!

(தொடரும்....)




Monday, 17 September 2012

காதலெனும் தேர்வில்...(2 )

கத்தி எடுப்பவனா!?-
நானெல்லாம்!

காரணம் அறிய-
படியுங்கள் -
பின்வருபவைகள்-
எல்லாம் !

எப்பொழுது போலவே-
பொழுது புலர்ந்தது-
அன்று!

எனக்கு தெரியவில்லை-
என் சந்தோசத்திற்கு-
கடைசி நாள்-
அதுவென்று!

வழக்கமான-
பணி இடம்!

ஏதோ மாற்றம்-
கண்டேன்-
என்னவளிடம்!

மேலும் பதற்றத்துடன்-
வந்தாள்-
சிநேகிதி ஒருத்தி!

அவள் காதோரம்-
சொன்னாள்-
செய்தி!

கலக்கமடைந்த-
முகத்தில் தெரிந்தது-
அதிர்ச்சி!

என்னருகில் -
வந்தாள்!-சொன்னாள்!
போயிட்டு வந்து விடுகிறேன்-
என்று!

"போனவள் -"
வரவில்லை-
ஒரு வேளை மறந்துபோனாளோ-
அன்று!

அணையாமல்-
இருந்த -
அலைபேசி!

அவளுக்கு -
அழைத்து அழைத்து-
தொடர்பில்லாமல்-
அலுத்து போச்சி!

இனி -
அவளினை-
தொடர்பு கொள்ள-
வாய்ப்பில்லை!

அவளின்-
நண்பியும்-
அன்றோடு பணிக்கு-
திரும்ப வில்லை!

அணு அணுவா-
கொல்லும்-
அணு உலை!

அதற்க்கு -
எவ்வளவோ-
பரவாயில்லை-
கடல் அலை!

கூடன்குள மக்கள்-
இந்நிலைக்கு-
தள்ளப்பட்டது-
அவல நிலை!

போராடவும்-
அவர்களுக்கு-
தடை!

சாகவும்-
தடை!

அந்நிலையே-
என் நிலை!

நினைக்கவும்-
முடியலை!

மறக்கவும்-
முடியலை!

அவளில்லாமல்-
ஒவ்வொரு நொடியும்-
நகர மறுத்தது!


அவள் மேல்-
கோபமோ -
விசமாக -
ஏறியது!

காலம்-
கடந்து கொண்டிருந்தது!

என் தலையணை-
கண்ணீரில் -
நனைத்து கொண்டிருந்ததுj


என் அலைபேசி-
அலறியது!

எதிர்முனையில்-
என் நண்பன்-
குரல்!

பிரயோசனம்-
ஆனது -என்
தேடல்!

நண்பன்-
தந்தது-
அவளின் முழு-
தகவல்!

திருமணம்-
ஆகிவிட்டதாம்!

குடும்பமாக-
ஒரு ஊரில்-
இருக்கிறாளாம்!

கூடாது-
"விடவே "கூடாது-
என்றது-
மனம்!

பழிவாங்க-
ஆயுதத்துடன்-
பேருந்தில்-
பயணம் !

சன்னலோர இருக்கை-
தந்தது-
சில்லென்ற காற்றை!

மனம் கனன்று -
கொண்டிருந்தது-
கொல்லென்று-
அவளை!

(தொடரும்)

Saturday, 15 September 2012

காதலெனும் தேர்வில்.....(1)

 சுடும் சூரியனையே-
சுட்டிடும்-
விழி கொண்டவள்!

மிதிபட்ட களிமண்-
என்னை-
மண் பானையாக்கி-
பிரயோசனம் செய்தவள்!

சென்றவள்-
சிரித்து விட்டு!

எனக்கு "புரை"-
ஏற்றிவிட்டு!

உஞ்சந்தலையில்-
உள்ளங்கையால்-
தட்டிடுவாள்!

உள்ளங்கை சூட்டை-
நெஞ்சு குழி வரை-
செலுத்துவாள்!

தொண்டை குழியில்-
சுடு சோறாய்-
இறங்கியவள்!

வயிற்றில் பரவும்-
காலை நேர-
தேநீரும் அவள்!

கோடைகால -
மழையும் அவள்!

மழைக்காலத்தில்-
வெயிலும் அவள்!

நிழலை விட-
நெருக்கமானவள்!

தூக்கத்தை விட-
நிசப்தமானவள்!

பேசியே-
சிறைபிடித்தவள்!

பேசாமல் இருந்து-
சிதற வைத்தவள்!

சிரித்தே-
சில்லிட வைத்தவள்!

சிரித்து பேசி-
சில்லு சில்லாய்-
ஆக்கியவள்!

"பொத்து "போன-
என் கால்களுக்கு-
பூக்கள் போல்-
இதம் தந்தவள்!

சட்டையின் -
மேல் பித்தானை-
மாட்டிவிட்டவள்!

ஒரு நெடிய-
பிரிவுக்கு பின்-
அவளை தேடி-
போகிறேன்!

கண்டவுடனே-
"தொலைத்து" கட்டபோகிறேன்!

ஆம்-
மனதில் -
கொலை வெறி!

இடுப்பில்-
கூரிய கத்தி.!

(தொடரும்....)