Saturday, 9 November 2013

பேரழகுதான்!

ஆடை குறைப்புதான்-
அழகென்றால்..!!?

ஒவ்வொரு-
விலங்குகளும்-
பேரழகுதான்!

Friday, 8 November 2013

அறியாத நிலை....!!

இரவு நேரத்தில்-
வாகன விளக்கின் -
வெளிச்சத்தில்!

தன்னை மறந்து-
நிற்கும்-
பிராணிகள்-
நடு சாலையில்!

தன்மேல்-
ஏறிடவருகிறது-
என்பதனை-
அறியாத நிலையில்!

என்னவளே!
அந்நிலையே-
எந்நிலை!


Thursday, 7 November 2013

மணியனும்-வை.கோ வும்.!

இலங்கையில்-
காமன் வெல்த் மாநாடு!

தமிழகத்தில்-
ஆர்பாட்டங்கள்-
உணர்வுகளின்-
வெளிபாடு!

இவ்விவகாரத்தில்-
காங்கிரசும் -பா ஜ க வும்-
ஒரே நிலைப்பாடு!

இதில்-
காங்கிரசிற்கு-
மாற்றாக பா ஜ வை-
மணியனும்-வை.கோ வும் சொல்வது-
உச்சபட்ச வெட்க கேடு!

நேசனல் விமென்ஸ் ப்ரண்ட்! (NWF)

நேசனல் விமென்ஸ் சகோதரிகளே!

வாழ்வே -
ஒரு -
போராட்டம்!

போராட்டத்தில்தான்-
ஆரம்பிக்கிறது-
சூரிய உதயம்!

போராட்டம் எனும்-
பெயரில்-
கூட்டத்தோடு-
சிலர்-
கூச்சலிடுகிறார்கள்!

எதிர்க்க கூடிய-
விஷயங்களிலோ-
மூச்சற்று கிடக்கிறார்கள்!

இலைகள் -
வாடுவதை எண்ணி-
கதறுகிறார்கள்!

ஆணி வேரில்-
ஊற்றப்படும்-
எரி அமிலத்தை-
காணாததுபோல்-
இருக்கிறார்கள்!

கண்ணில் தூசியால்-
சிலர் கலங்குகிறார்கள்!

கடப்பாரை-
எதிர் வருவதை பற்றி-
கவலை கொள்ளாதிருக்கிறார்கள்!

பாசாங்கான-
போராட்டங்களும்-
சிலர்-
நடத்துகிறார்கள்!

"பச்சாதாபம்" படக்கூடிய-
மக்களுக்காக-
நேசனல் விமென்ஸ் -
களம் காண்கிறீர்கள்!

தேசமே-
அலறியது-
"பேருந்து"-
விசயத்திற்கு!

ஆனால்-
நிசப்தம் ஆனது-
டெல்லி சிறுமி-
விசயத்திற்கு!

தமிழ்நாடுக்கூட-
ஓங்கி பேச மறந்தது-
வினோதினி-
"அமில "வீச்சிற்கு!

நீங்கள்-
குரல் கொடுத்தீர்கள்-
அந்த அப்பாவிகளுக்கு!

ஆடை குறைப்பு-
பெண்ணுரிமை-என
சொல்கிறார்கள்-
போலி பெண்ணியங்கள்!

ஆபாசங்களை-
எதிர்த்து-
நீங்கள்-
செயல்படுகிறீர்கள்!

வரதட்சணை-
வாங்குவதும்-
கொடுப்பதும்-
பெருமையாக -
எண்ணுகிறது-
இவ்வுலகம்!

வரதட்சணை-
ஒரு அவமானம்-
கேவலம்-என்பதே
உங்களது-
வாதம்!

இசை பிரியாவின்-
கதறல்-
கொடூரத்தின்-
உச்ச கட்டம்!

அதனை -
உணர்த்திட-
நடக்கவிருக்கிறது-
உங்களது-
ஆர்பாட்டம்!

உங்கள் பணி-
சிறக்கட்டும்!

பெண்களுக்கெதிரான-
பிணி-
நீங்கட்டும்!

// தகவல்கள் தந்து உதவிய சகோதரி ஆலியா அவர்களுக்கு மிக்க நன்றி//





இசை ப்ரியா!

வஞ்சகம் இல்லாமல்-
வந்து-
விழுந்தது-
குண்டுகள்!

இரக்கமின்றி-
எரித்தது-
ஏவுகணைகள்!

சீறி சென்றது-
துப்பாக்கி-
தோட்டாக்கள்!

எங்கும்-
ரத்தக்களம்!

எங்கெங்கும்-
மரண ஓலம்!

முட்கள் குதிடாத-
கால்கள்-
உண்டோ!?

சடலத்தை மிதித்து -
நடக்காத கால்களும்-
"அன்று"-
உண்டோ!?

சிதறி கிடந்த-
சதை துண்டுகள்!

அதனுடன்-
ஒட்டி இருந்த-
எலும்புகள்!

ரத்தமாக-
காட்சி தந்த-
தண்ணீர் தடாகங்கள்!

ரத்த சகதியான-
நிலங்கள்!

எங்கும்-
முக்கல்கள் -
முணங்கல்கள்!

அவர்களின்மேல் -
ஏறிய-
பீரங்கி வாகனங்கள்!

என் நிலை-
இவைகளுக்கும்-
மேலாக!

கிடந்தேன்-
கண்ணீர் கடலில்-
தத்தளித்தவளாக!

மாட்டினேன்-
ஓநாய்களிடம்-
வெள்ளாடாக!

துடித்தேன்-
பாலையில்-
விழுந்த-
மீனாக!

தவித்தேன்-
மானம் இழந்தும் -
மரிக்காத-
கவரி மானாக!

என் கதறல்கள்-
இருந்திருக்கிறது-
காம வெறி நாய்களுக்கு-
கிளர்ச்சி ஊட்டுபவைகளாக!

மானம்-
மறைக்க-
ஆடைகள்-
தைத்தோம்!

ஆடைகளை-
காக்கவே-
ஆயுதங்கள்-
தரித்தோம்!

என்னை-
எச்சை படுத்தியது-
வெறி நாய்கள்!

எச்சையிலும்-
இச்சை கொண்டது-
சொறி நாய்கள்!

என் கதறல்கள்-
வேட்டை நாய்களின்-
கொக்கரிப்பில்-
கரைந்தது!

உள் நாட்டு விவகாரம் என-
உலகமும்-
மௌனித்தது!

மூச்சை நிறுத்தியவர்கள்-
மூக்கில் பஞ்சை-
வைக்கிறார்கள்!

"எனக்கென்ன "!?-என
வாழ்பவர்கள் -
காதில் பஞ்சை-
வைத்து கொள்கிறார்கள்!

ஓ!
உறவுகளே!
துடித்த-
 என் இதயம்-
துடிப்பதை-
நிறுத்தி விட்டது!

எனக்கான-
நிலைக்கு-
உங்கள் இதயங்கள்-
துடிக்க வேண்டியுள்ளது!

Wednesday, 6 November 2013

தோற்றவள் நீயடி...!!

அழகான-
ஆடை பூண்டிருந்தாய்!

அழகு ஒப்பனையை-
கூட்டி இருந்தாய்!

நம் பிரிவு-
உன்னை-
வாட்டவில்லை-என்பதை
உணர்த்திட வந்தாய்!

ஆனாலும்-
நீ தோற்றாயடி!

கண்ணீர் கரைதிருந்த-
உன் கண் மையை-
கவனிக்க மறந்திருந்தாயடி!

Tuesday, 5 November 2013

மொழி!

கடலலைகளின்-
மொழி!

ஆழ்கடலில்-
மௌன மொழி!

பனிகால -
இரவின்-
நிசப்த மொழி!

மழைக்கு முன் வரும்-
ஈரப்பசை-
காற்றின் மொழி!

மலைத்தொடர்களில்-
சல சலக்கும்-
இலைகளின் மொழி!

குழந்தைகளின் -
கோப பார்வையின் மொழி!

இத்தனையும்-
தெரியாத மொழி!

ஆனாலும்-
அதில்-
குறைகிறது -
மனதின் வலி!

தெரிந்த மொழியைகொண்டு-
நஞ்சுக்களும்-
பாய்ச்சபடுகிறது-
வார்த்தைகளின் வழி!