Monday, 30 July 2012

யார் பிணங்கள்....!?



கும்பகோணத்தில்-
கொடூர சம்பவம்-
நடந்தேறியது!

ஒரு "பூவின்" மீது-
பேருந்து-
ஏறி இறங்கியது!

"தீர்ப்பு" சொன்னதுக்கு-
கல்லூரி மாணவிகள்-
எரிப்பு!

"கருத்து கணிப்பு"-
வெளியிட்டதுக்கு-
ஊழியர்களோட-
எரிப்பு!

இத்தகைய தொண்டர்கள்-
கொண்ட கட்சிகள் -
மாறி மாறி ஆளும்-
அரசியல் நடப்பு!

"ரத்த யாத்திரை"-
புகழ்!

"ரத்த காட்டேரி"-
புகழ்!

"இதுகளுக்கு"-
நாட்டை ஆளும்-
ஆசைகள்!

கணிக்கலாம்-
இவ்வாறு-
யாரால் நடந்தது-
அதிக கொலைகள்!

அவருக்கே கொடுக்கலாம்-
"சீட்டுகள்"!

யாரோ செய்த பாவத்திற்கு-
யாரையோ கொல்லும்-
பாவிகள்!

ஆயிரக்கணக்கில்-
கொலைகள் "பார்த்தும்"-
பதவி ஆசைகொண்ட-
படுபாவிகள்!

எத்தனை-
போலி தாக்குதல்கள்!

உயிர் போன பிறகே-
விசாரணைகள்!

இருந்தது-
முள்ளி வாய்க்காலாய்!

மாறியது-
கொலைகளின் கால்வாயாய்!

காஷ்மீரத்து மக்கள்-
காட்டு மிராண்டி-
அடக்குமுறைகள்!

ஆண் பெண்-
நட்பை பயன்படுத்தி-
"நாசம்"செய்யும்-
நாய்கள்!

பெண்களின் அங்கங்களை-
படம் பிடித்து-
பகிர்ந்து கொள்ளும்-
கொடூரர்கள்!

உலகில் -
பசி தெரியாமல் -
சில நூறு பேர்கள்!

உணவே -
தெரியாதவர்களோ-
பல கோடிகள்!

அகிலத்தில்-
அறிவியல் வளர்ச்சிக்கு-
பஞ்சமில்லை!

அன்புக்குத்தான்-
இடமில்லை!

அணு குண்டுகளுக்கோ-
குறைவில்லை!

இத்தனையவும் பார்த்து -
உணர்வற்று இருப்பவர்கள்-
உயிருள்ளவர்களா!?

உணர்ச்சியற்று-
உணர்வற்று கிடக்கும்-
நாங்கள் பிணங்களா!?

இப்படியெல்லாம்-
கேட்பவர்கள்!

மயான காட்டில்-
அநியாயமாக கொல்லப்பட்டு-
"அடக்கப்பட்டவர்கள்!"



Sunday, 29 July 2012

யார் கொடுப்பது...!?



இருக்கும் ஒரு மிடறு-
தண்ணீரை அடுத்தவருக்கும்-
பகிர்ந்து அருந்துபவனுக்கு!

நதி நீரை-
கடலில் விட்டாலும்-
அண்டை மாநிலத்துக்கு-
கொடுக்க மறுக்கும்-
அழிச்சாட்டிய காரர்களுக்கு!

சில பல காரணங்களால்-
பேசாமல் இருந்தும்-
மனதார நேசிப்பவர்களுக்கும்!

வாய் கிழிய வாழ்த்தி விட்டு-
மனதுக்குள்-
புழுங்குபவர்களுக்கு!

அட்டூழியங்கள் செய்து கொண்டு-
ஆட்சி கட்டிலில்-
அலங்கரிப்பவர்களுக்கு!

அநீதி இழைக்கபட்டவன்-
நீதி கிடைக்காமலே-
இறப்பவர்களுக்கு!

அநாதை சொத்தை ஆட்டையவும்-
அவர்கள் சோத்தில் மண்ணள்ளி-
போட்டவர்களுக்கும்!

அனாதைகளிடம்-
ஆதரவாக நடந்தவர்களுக்கும்!

கோள் மூட்டி-
பல உறவுகளை-
பிரித்தவர்களுக்கு!

பிறர் மீது தவறிருந்தும்-
உறவுகள் பிரிந்திட கூடாதுன்னு-
"அதை"தாங்கி கொண்டவர்களுக்கு!

கடன் கேட்கும்போது-
அலையா அலைந்து-
கேட்க போனவனை-
அடிக்க முயல்பவனுக்கு!

வாங்கிய கடனை-
கட்ட முடியலையே-
மனம் குமுறுபவர்களுக்கு!

கட்டியவளை-
கண்ணியத்துடன்-
நடத்துபவர்களுக்கு!

கண்ணியம் எதற்கு-
கட்டியவளுக்கு-என
நடப்பவர்களுக்கு!?

நியாயவான்களுக்கு-
நியாயமும்-
அநியாயகாரனுக்கு-
தண்டனையும்-
கொடுக்க அதிகாரம்-
உலகில் யாருக்கு-
இருக்கு!?

நிச்சயமாக-
சத்தியமாக-
ஒரு நாள்-
படைத்தவனிடம்-
நியாயமான -
தீர்ப்பு இருக்கு!





Saturday, 28 July 2012

பக்கத்து வீடு...



உற்றத்தாரும் ,சுற்றத்தாரும்
இருக்கலாம்-
ஊரளவு!

பரிதவிப்பின்போது-
ஓடி வருவது-
பக்கத்து வீடு-
உறவு!

"மூத்தவர்கள்"-
முக சாயலை வைத்து-
சொல்லி விடுவார்கள்-
இன்னாரென்று!

இளையர்கள்-
பக்கத்து வீட்டுக்காரன் -
பெயர் கூட தெரியாமல்-
இருக்கிறார்கள்-
இன்று!

கண்டம் விட்டு-
கண்டம்-
நேசம் கொள்கிறார்கள்!

அண்டை வீட்டுக்காரனுடன்-
சண்டை செய்கிறார்கள்!

எண்களை அழுத்தினால்-
பல மையிலுக்கு அப்பாலும்-
உடனடி தொடர்பு!

பக்கத்துல இருப்பவர்களிடம்-
பல வருட துண்டித்து போன-
உறவு!

அன்றைக்கு -
அக்கம் பக்கமே-
அன்புக்கு பிரதானமானது!

இன்றைக்கு -
"நிழல்" உறவுகளுக்கு-(சீரியல்)
எந்நேரமும் கண்ணீர்வடிப்பது!

தகப்பனுக்கு-
ஒன்னு!

தாயிக்கு-
ஒன்னு!

பிள்ளைக்கு-
ஒன்னு!

ஆளுக்கொரு-
தொலை காட்சி!

உறவுகளோ-
பாழா போச்சி!

இதுல எங்கே-
இவர்கள் வாழ-
பக்கத்துக்கு வீட்டாரையும்-
நினைச்சி!?

அன்று-
விசேசமா சமைத்தாலும்-
பக்கத்துக்கு வீட்டுக்கும்-
சேர்த்து சமைப்பார்கள்!

இன்று-
அற்ப விசயங்களுக்கும்-
பேசாமல் இருக்கிறார்கள்!

அண்டை நாடுகளுடன்-
பிரச்னை-
ஆயுத குவியலுக்கு-
உதவும்!

அண்டை வீட்டாருடன்-
சண்டை-
"வறட்டு" எண்ணங்களுக்கு-
வழி வகுக்கும்!

"அண்டை வீட்டாருக்கு-
காற்று வராதபடி-
சுவர்களை எழுப்பாதீர்கள்!

அண்டை வீட்டார்-
பசியோடு இருக்கையில்-
தான் மட்டும் வயிறு முட்ட-
தின்பவன்-என்னை சார்ந்தவன்
அல்ல-"
நபிகளார் சொன்னது!

இன்ன மதம்-
இன்ன இனம்-என
சொல்லிடாதது!

ஆதலால்-
இனம் ,மதம்,
மொழி கடந்து-
பக்கத்துக்கு வீட்டாருடன்-
பரிவோடு நடப்பது-
நன்மை பயக்கவல்லது!



Thursday, 26 July 2012

வெட்டனும்......"



தேடல்-
தொடங்கியது!

சில-
கிராமங்கள்-
அடங்கியது!

சிலர்-
முறைத்தனர்!

பலர்-
வரவேற்றனர்!

பெயர்கள்-
கேட்கப்பட்டது!

உடல் அளவுகள்-
எடுக்கப்பட்டது!

தேதிகள்-
குறிக்கப்பட்டது!

அந்நாளும்-
நெருங்கியது!

"ஆட்களை"-
வாகனம்-
இறக்கியது!

புது ஆடைகள்-
அணிந்தனர்!

முகங்கள்-
மலர்ந்தனர்!

காணப்பட்டனர்-
ஒட்டிய தேகத்துடன்!
அதிக வாட்டத்துடன்!

ஆம்-
அவர்கள்-
ஏழைகள்!

"அழைத்தவர்களும்"-
இல்லை-
செல்வமிக்கவர்கள்!

பசியை அறியாதவன் அதன் -
பரிதவிப்பை அறியமாட்டான்!

வஞ்சகம் கொண்ட நெஞ்சன்-
வாஞ்சையுடன் நடக்க மாட்டான்!

தொடங்கியது-
ஊர்வலம்!

முடிவுற்றத்கு-
பள்ளிவளாகம்!

ஒவ்வொரு பெயராக-
வாசிக்கப்பட்டது!

வந்த சிறவர்கள் மனம்-
சந்தோஷ பட்டது!

பெயருள்ள சிறுவன்-
அழைத்து செல்லப்பட்டான்!

அழுது கொண்டே-
திரும்பி வந்தான்!

காரணம்-
விருத்தசேனம்(சுன்னத்)-
செய்யபட்டான்!

வந்தவர்கள்!
அழைத்தவர்கள்!
உள்ளூர் சொந்தங்கள்!

அன்போட பகிர்ந்து கொண்டு-
அரவணைப்பாக-
விருந்துண்டார்கள்!

நேரம்-
கடந்தது!

வாகனம்-
வந்தது!

சிரித்து வந்த-
பாலகன்கள் அழுது கொண்டு!

தாயோட ஒட்டி கொண்டு!

தகப்பன்மார்கள்-
வந்த கண்ணீரை -
மறைக்க முடியாமல்!

நானும் நண்பர்களோட-
வந்து சென்ற உறவுகளை-
மறக்க முடியாமல்!

பிறப்பதற்கு முன்-
தந்தையை இழந்தார்!

பிறந்து பின்னாட்களில்-
தாயை இழந்தார்!

"மறைவதற்கு" முன்-
உலகம் மறையுவரை-
மனித மனங்களை-
வென்றார்!

ஏழையாக-
வாழ்ந்தார்!

எழைகளுடனேயே-
வாழ்ந்தார்!

அவர் அரியணைகளில்-
அமர்ந்திடவில்லை!

அமர்ந்த இடங்களெல்லாம்-
அரியணையாகியது!
முஹம்மது மேத்தா(கவிஞர் மு.மேத்தா)
சொன்னார்!

அவர்தான்-
மலையளவு பகை கொண்டவர்களிடையே-
மனிதத்தை வளர்த்த-
நபிகள் பெருமானார்!

என்னருமை!
சொந்தங்களே!

ஏழைகளும்-
நம் மனித உறவுகளே!

குறைந்த பட்சம்-
ஒரு ஏழைக்காவது-
உதவுங்களேன்....!




Tuesday, 24 July 2012

நோன்பு கஞ்சி.....



வரிசையாக வைக்கப்பட்ட-
நான்கு அடுப்புகள்!

கழுவி கொவுத்தி-
வைத்திருக்கும்-
சட்டிகள்!

ஒரு பக்கம்-
தேங்காய் திருக-
ஒரு கூட்டம்!

பூண்டை தோல் -
உரிக்க ஒரு-
கூட்டம்!

அரிசியை ஓட்டை-
போட்டு -எடுத்து செல்லும்
எலி கூட்டம்!

சிறு உதவிகளுடன்-
அன்றைக்கு உதவும்-
இளையர்கள்!

டேய் !-
மாப்ள!-
மருமகனே!-என
உறவு முறையுடன்-
கூப்பிடும்-
பெரியவர்கள்!

தெரிந்து செய்த-
தப்புகளுக்கு-
கிடைக்கும் பெரியவங்க-
திட்டுகள்!

அதே வயது ஒத்தவர்-
"ஏன்பா!? சின்ன பசங்கள-
திட்டுறே"!என கிடைக்கும்
ஆதரவுகள்!

திட்டுகள் நமக்கு-
ஒன்றும்-
புதிதில்ல!

அதைபற்றியெல்லாம்-
கவலை பட்டதே-
இல்லை!

ஆதரவா சொன்ன-
வார்த்தையாலே!

எங்கோ உரைக்கிறது-
பட்ட மிளகாய்-
கடித்தது போல!


உதிரும் இலைகள்-
முளைப்பதுண்டு-
கிளைகளிலே!

"உதிர்ந்த "உறவுகள்-
திரும்புவதில்லை!-
இவ்வுலகிலே!

"மறைந்த "உறவுகளை-
நினைக்கையிலே!

கண்களோ குளிக்கிறது-
கண்ணீரிலே!

இரண்டு சட்டி கஞ்சி-
ஊரில் வாங்கிட -
வருபவர்களுக்கு!

மற்ற இரண்டும்-
பள்ளியில் நோன்பு-
திறப்பவர்களுக்கு!

மாலை நேர-
வேலை-
தூக்கு சட்டியுடன்-
குழந்தைகள்!

தூக்கு சட்டிய தூக்கியவர்களை-
தூக்கி கொண்டுவரும்-
"வாப்பாக்கள்"!

அந்தி பொழுதும்-
வந்தது!

வரிசையாக வைக்க பட்ட-
நோன்பு கஞ்சிகளுடன்-
குண்டாளங்கள்!

அதன் அருகில்-
வைத்திருக்கும்-
பேரீத்தம் பழங்கள்!

பிரயாணத்தில்-
இருந்தவர்கள்!

வியாபாரம் செய்ய-
வந்தவர்கள்!

பெரிவர்கள்!
சின்னவர்கள்!

அவர்களுக்கு பிடித்த-
இடங்களில் அமர்ந்தார்கள்!

யாரையும் "ஒதுங்கிட"-
சொல்லவில்லை!

அந்த உரிமை-
எவருக்கும் இல்லை!

இறைவா!
உன்னுடைய உணவை கொண்டே-
என்னுட நோன்பை திறக்கிறேன்-
என்னிடம் இருந்து ஏற்றுகொள்வாயாக!
என்பதை அரபியில்-
சொல்லப்பட்டது!

அதனை அனைத்து-
வாய்களும் சொல்லியது!

பேரீத்தம் பழங்களை-
தின்றார்கள்!

கஞ்சிய -
குடித்தார்கள்!

எனக்கோ தோன்றிய-
சில எண்ணங்கள்!

பார பட்சம்-
காண கூடாதுன்னு-
பள்ளி சீருடை!

பாகு பாடு இல்லாம-
நோன்பை திறக்கவா!?-
நோன்பு கஞ்சி முறை...!!!?

கஞ்சி இதமான-
சூட்டுடன்-
தொண்டையில்-
இறங்கியது!

எல்லோர் பசியை போக்க-
கஞ்சி காய்ச்ச உதவியதை-
எண்ணுகையில்-
மனதின் ஓரத்தில்-
இனித்தது....!!



Monday, 23 July 2012

நோன்பு காலங்களில்...$


ஊரு உலகமெல்லாம்-
சுற்றி வருவேன்!

உறங்க மட்டுமே-
வீடு வருவேன்!

மழையில் நனைந்த-
கோழியை போல-
"குன்னி" கொண்டு-
உறக்கம் கொள்வேன்!

தாயே-
பனி பெய்யும் காலத்திலும்-
கோழி ஆனமும்-
கொத்து பரோட்டாவும்-
வாங்கி வருவாள்!

"எந்திரிச்சி "வந்தால்-
என்ன !?-
கேட்டவர்கள் எத்தனையோ!

"எந்திரிச்சி" போடா-என
இதுவரை சொல்லாதவள்-
என்தாயே!

மற்றவர்களுக்கு-
நான் "எப்படியோ"-
தெரிகிறேன்!

பெற்ற தாயிக்கோ-
இன்னும் குழந்தையாகவே-
நான் தெரிகிறேன்!

தாயே-
உன் பாசத்துக்கு-
ஈடு கெட்ட என்னால்-
முடியுமா!?-
தெரியல!

உன்னை மனம்-
நோகாமல் வைத்து கொள்ள-
முடியுமான்னு-
எனக்கு தெரியல...!!!
---------------------------
சரிவர கட்டாத-
கைலியுடன்-
வரும் பாலகன்!

நச்சரிப்பு தாளாமல்-
சில்லறை எடுத்து கொடுக்கும்-
அப்பன்!

வாங்கிய காசை-
விறு விறு என போய்-
யாசகரிடம்-
கொடுக்கிறது-
பிஞ்சு கைகள்!

கண்டும் காணாமலும்-
கடந்து போனவர்கள்-
எத்தனையோ பேர்கள்-
மத்தியில்!

"பொடி பயல்"-என
நான் நினைத்தவன்!

என்னையவும்-
வெட்கித்து-
தலை குனியவைத்தவன்!

ஆம்-
கடந்து போனவர்களில்-
நானும் ஒருவன்!



Sunday, 22 July 2012

முடிந்தளவாவது.....



தின்ன முடியாமல்-
திணறுபவர்கள்-
ஒரு பக்கம்!

பசியால்-
பரிதவிப்பவர்கள்-
மறுபக்கம்!

ஆயிரம் கழிவறை கொண்ட-
மாடி உள்ள-பங்களா
சொந்தம் ஒருவனுக்கு!

ஆயிரம் பேருக்கு -
ஒரு கழிவறை வீதம்-
இல்லை-
பலபேருக்கு!

உடலில் உள்ள கொழுப்புதனை-
தின்னு கொள்ளும்-
பசியால் உடம்புகள்!

உயிரையே பசியினால்-
இழக்கும் -
எத்தனையோ உடல்கள்!

உலகமெல்லாம் காண-
முடிகிறது -
பிறந்த மண்ணை விட்டு-
விரண்டோடிய மக்களை!

ஆனாலும்-
நாகரிக உலகம் என-
சொல்லிட நமக்கும்-
வெட்கம் இல்லை!

எல்லா "சத்தும் " கூடி-
மாத்திரை போடும்-
ஒரு கூட்டம்!

எந்த ஊட்ட சத்தும்-
இல்லாமல்-
மடியும் இன்னொரு கூட்டம்!

மானம் மறைக்க -
ஆடை வாங்க -
பணம் இல்லாமல்-
எத்தனையோ-
பெண்கள்!

பணத்துக்காக ஆடை-
களையும்-
எத்தனையோ-
"கேவலங்கள்"!

விலங்குகளை-
காப்பாற்ற எத்தனை-
விழிப்புணர்வுகள்!?

மனிதனையும் -
காப்பாற்ற நம்மால் ஆனா-
உதவிகளை செய்யுங்கள்!

பெருமானார் மொழி-
படைப்புகளை நேசிக்காதவனை-
படைத்தவன் நேசிப்பதில்லை!

"இருந்ததையெல்லாம்"-
தானம் செய்தார்கள்-
நம் முன்னோர்கள்!

"முடிந்தளவாவது"-
தானம் செய்யலாமே-
இன்று-
பூமியில் "இருப்பவர்கள்!"