Saturday 26 May 2012

கல்யாணம்!



விசேசமானது!
இல்லாதவர்களுக்கு-
விஷமானது!

'புரிந்து'வாழ்ந்தால்-
வம்சம்-
விருட்சமாகும்!

'பிரிந்து 'வாழ்ந்தால்-
தலை முறை-
விரயமாகும்!
-------------------------

மங்களகரமானது!

'மங்கலங்கள்'-
'கரை'ஏற-
'லகரங்கள்-
'செலவாகுது!
----------------------------
ஆட்டம்-
பாட்டம்!

குடி!
கூத்து!

அலங்கோலம்!
கேவலம்!
கல்யாணம்!

நல்ல காரியம்-
கல்யாணங்கள் !

நடை முறை -
என்னவென்றால்-
நடந்தேறும் -
அவலங்கள்!

-------------------------
மனங்களின்-
சங்கம ஒப்பந்தம் -
கல்யாண முறை!

'கறி-
'சின்னதானதால்-
'பங்கம் 'விளைவிக்கும்-
உறவின் முறை!
--------------------------------------
உயிருக்கு உயிரான-
காதல் என்பான்!

ஊரு விட்டு-
ஊரு போய்-
கல்யாணம்-
செய்வான்!

சமாதானம் ஆகி-
வீட்டில்' சேர்த்தால்'-
கைக்கூலி கேட்டு-
நச்சரிக்கிறான்!
---------------------------
வில்லை ஒடித்து-
கரம் பிடித்தான்-
புராணம்!

மாமனார் குறுக்கை-
வரதட்சணையால்-
ஒடிப்பது-
கலிகாலம்!
------------------------
கல்யாண வீட்டுக்காரனுக்கு-
பெரும் செலவு!

அதில்-
மது கடைக்கே-
பெரும்பங்கு!

இதுவா!?
நாட்டுக்காக -
உயிரை கொடுத்தவர்களின்-
கனவு!?
-----------------------




17 comments:

  1. வார்த்தை விளையாட்டுக்கள்...அருமையான கவிதை நண்பரே...உங்க முந்தைய கவிதைகளையும் படிக்க தூண்டுகிறது..இணைந்திருப்போம்.

    ReplyDelete
    Replies
    1. satheesh! ungal muthal varavukkum karuthukkum mikka nantri!

      Delete
  2. //'புரிந்து'வாழ்ந்தால்-
    வம்சம் விருட்சமாகும்!//

    அருமை ;)))))

    ReplyDelete
  3. /////////மங்களகரமானது!

    'மங்கலங்கள்'-
    'கரை'ஏற-
    'லகரங்கள்-
    'செலவாகுது!/////

    நான் ரசித்த வரிகள் ..!

    ReplyDelete
    Replies
    1. suvadikal!

      neenga vanthathu-
      enakku sirappukal!

      Delete
  4. //'புரிந்து'வாழ்ந்தால் வம்சம் விருட்சமாகும்!
    'பிரிந்து 'வாழ்ந்தால் தலை முறை விரயமாகும்!//
    இதைப் புரிந்துகொள்ளாததால்தானே இன்று விவகாரத்து வழக்குகள் நீதிமன்றத்தில் குவிந்து கிடக்கின்றன.
    சீனி.. உங்களைக் குடும்ப நல நீதிமன்றத்தில் நீதிபதியாக நியமித்தால் கவிதை சொல்லியே பல விவகாரங்களை சுலபமாக தீர்த்துவிடுவீர்கள் என நினைக்கிறேன். நீண்ட காலமாக கிடப்பில் கிடக்கும் பல வழக்குகள் முடிவுக்கு வந்துவிடும்.. என்ன சரியா?

    ReplyDelete
    Replies
    1. asarath!

      appadiyaa!?

      maasha alla!

      mikka nantri!
      ungal varavukkum karuthukkum!

      Delete
  5. இரு மனங்கள் சேரும்
    திருமணம் பற்றிய உங்கள்
    கவிதை மிகவும் அருமை நண்பரே...

    திருமணம் என்கிற பெயரில்
    நடக்கும் கூத்துகளை
    நெற்றியில் உளி அடித்தாற்போல்
    சொல்லியிருக்கும் விதம் அழகு..

    ReplyDelete
  6. விட்டுக்கொடுக்க மனமில்லாதவர்கள் விட்டுவிலக சம்மதப்படுகிரார்கள் . அருமை .

    ReplyDelete
    Replies
    1. SASIKALA!

      ungal varavukkum karuthukkum mikka nantri!

      Delete
  7. வலைச்சரம் வாங்க
    http://blogintamil.blogspot.com/2012/05/blog-post_27.html

    ReplyDelete
  8. கல்யாணம் என்கிற பேர்ல நடக்கிற கூத்து...கவிதை !

    ReplyDelete
  9. உண்மை உருவங்கள்
    கவிதையில் நடமாடுகிறது.

    ReplyDelete