Sunday 3 February 2013

ஹபீப்-குர்சியத்(5)

பள்ளிகூடங்கள்!
எதிர் எதிராக-
இரு கட்டிடங்கள்!

சுற்றி-
கட்டு கம்பிகளால்-
மட்டைகள் கட்டப்பட்ட-
வேலிகள்!

வெளிக்குள்-
இரு பனைமரங்கள்!

எப்போதாவது-
விழும்-
பணங்காய்கள்!

எப்போதும்-
தரும்-
தலையில் விழுந்திடுமோ-என்ற
பயங்கள்!

இரு-
வேப்பமரங்கள்!

கொட்டிடும்-
வேப்பிலைகள்!

பாகுபாடில்லாமல்-
கடித்திடும்-
"ஸ்சுவை" எறும்புகள்!

தண்ணீர் தொட்டி-
ஒன்னு!

சமையல்கட்டு-
ஒன்னு!

பார்க்கும்போதெல்லாம்-
சந்தோசபடலாம்-
நாம படித்த -
பள்ளிகூடம்னு!

கோடுகள்-
கிழிப்பார்கள்!

வரிசையில்-
நிற்ப்பார்கள்!

தமிழ்த்தாய் வாழ்த்து-
பாடுவார்கள்!

உறுதி மொழி-
எடுப்பார்கள்!

வரிசையாக-
மாணவர்கள்-
வகுப்பறை-
செல்வார்கள்!

பின் தொடர்வார்கள்-
ஆசிரியர்கள்!

தலைமை ஆசிரியர்-
இக்னேசியஸ் செல்வராஜ் அவர்கள்!
ஆசிரியர்-
டேவிட் அவர்கள்!

ஆசிரியைகள்-
ஆபிதா அவர்கள்!
மாரீஸ்வரி அவர்கள்!
பேபி அவர்கள்!

அசரத்-
அகக்கண் திறந்தார்கள்!

ஆசிரியர்கள்-
அறிவுக்கண் திறந்தார்கள்!

அகக்கண்ணை-
குருடாக்கிவிட்டு-
அறிவு அறிவுனு-
அலைவதால்தான்-
உலகில்இன்று-
எத்தனை எத்தனை-
சீர்கேடுகள்!

சிறுவர்கள்-
காக்கி நிற-
அரைக்கால் சட்டை!
வெள்ளை நிற-
மேல் சட்டை!

சிறுமிகள்-
முக்கால் கால்-
நீல நிற பாவாடை!
வெள்ளை நிற-
மேல் சட்டை!

பள்ளி பாடங்கள்-
படிக்க சென்றோம்!

கடைசி வரை-
எத்தனைபேர் சென்றோம்!?

(நினைவுகள் சுழலும்.....)

//ஸ்சுவை எறும்பு-
கட்டெறும்பை  விட சிறியது!
சித்தெறும்பை விட பெரியது!////


5 comments:

  1. இதை படித்ததும் அப்படியே மீண்டும் எங்கள் பள்ளிக்கு போய்ட்டு வந்தது போல் இருந்தது.....உங்கள் பகிர்வுக்கு மிக்க நன்றி.....

    நன்றி,
    மலர்
    http//www.ezedcal.com/ta(வலைப்பூ உரிமையாளர்களுக்கான தலையங்க அட்டவணை உருவாக்க உதவும் வலைதாளம் பயன்படுத்தி பயன்பெறுங்கள்)

    ReplyDelete
  2. நினைவுகள் ரசிக்க வைத்தன! தொடருங்கள்! நன்றி!

    ReplyDelete
  3. ////ஸ்சுவை எறும்பு-// இது என்னவென்று கேட்க நினைத்தேன்... நீங்களே சொல்லி விட்டீர்கள்....

    தொடரட்டும் நினைவுகள்....

    ReplyDelete