Wednesday 20 February 2013

அய்யா !கலைஞர் அவர்களே...!

 அய்யா -
கலைஞர் அவர்களே!
இது -
உங்கள் உடன்பிறப்பின்-
குமுறலே!

உலகில் உள்ளவர்கள்-
அனைவரும்-
ஒரு ஆண் பெண்ணிலிருந்து-
வந்தவர்களே!

முழுவதும்-
நம்புகிறேன்-
நான் -
இப்போதனைகளே!

அய்யா-
உங்கள் அரசியல்-
நிலைபாட்டிலே!

தலை நிமிர்ந்து-
பார்த்தும்-
இருக்கிறேன்!

தலை கவிழ்ந்தும்-
போய் இருக்கிறேன்!

முதுகில்-
தட்டி கொடுப்பதாகவும்-
உணர்ந்திருக்கிறேன்!

குத்தி கிழிப்பதாகவும்-
வலி தாங்கி இருக்கிறேன்!

கைதட்டியும்-
ரசித்திருக்கிறேன்!

கைக்கட்டியும்-
மௌனித்திருக்கிறேன்!

எழுதலாம்-
இப்படியாக!

கவிதை -
வளர்ந்திடும்-
நீளமாக!

அய்யா!-
சமீபத்திய -
சங்கடம்!

நீங்கள் -
செய்த -
"விஸ்வரூபம்"!

சமூகத்தலைவர்கள்-
போராடியது-
உணர்வுபூர்வமானது!

உங்களால்-
அது-
அரசியலானது!

அந்நேரத்தில்-
வலைப்பூவில்-
படித்தது!

உலகிலேயே-
திரைபடத்திற்கு-
அறிக்கை விட்ட-
முதல்வர் -
நீங்களாகத்தான்-
இருப்பீர்கள்-
என்றது!

சில நாட்களிலே-
உங்களுக்கே எதிராக-
வந்தது-
"அட்டை பட செய்தி"-
விஷமாக!

இதை எடுத்துகொள்ள-
முடியாது-
கருத்துசுதந்திரமாக!

இதற்கு-
எதிர்ப்பு-
தெரிவிக்கலாம்-
ஜனநாயகரீதியாக!

நானும்-
"அச்செய்திக்கு"-
பதிகிறேன்-
எதிர்ப்பாக!

ஏனென்றால்-
அப்பத்திரிக்கை-
இழிவுபடுத்தியது-
இருப்பதோ-
முதுமையையும்-
பெண்மையுமாக...!

(ஜெயலலிதா அவர்களை கேவலமான முறையில் கேலிசித்திரம் வரைந்த இலங்கை ஓவியருக்கு எதிர்ப்பாக எழுதிய கவிதை இது.
படித்து பாருங்கள்!
தலைப்பு-
அதற்காக....! )

8 comments:

  1. என்ன செய்வது எல்லாம் ஐயாவுக்கு அரசியல் !

    ReplyDelete
    Replies
    1. thani maram!

      mikka nantri sako...!
      varavirkku..!

      Delete
  2. நல்ல கவிதை! ஆனால் தமிழக அரசியலில் இதெல்லாம் சகஜமாகிவிட்டது!

    ReplyDelete
    Replies
    1. suresh sako...!

      varavurkku mikka nantri sako..!

      Delete
  3. இதற்க்கு அல்ல இதற்கு.
    ற், ட் -க்கு பின் புள்ளி எழுத்து வராது.

    ReplyDelete
    Replies
    1. fahim sako...!

      muthal varavirkkum thappai sutti kaattiyamaikku mikka nantri!

      avasaraththil ezhuthiduvathaal thappu nadanthu vittathu...

      Delete