Sunday 24 February 2013

பெண்ணினமா.......!?

பெண்ணினமா!?
இம்சிக்கவே-
பிறந்த இனமா!?
ஒவ்வொன்றாக-
சொல்லனுமா!?

காதலுன்னு-
சொல்லி-
"கசக்கி"-
எறிவதையா!?

நட்பு-என
"நாசம்"-
செய்வதையா!?

ஆன்மிகம்-என
"அசிங்கபடுத்துவதையா"!?

மதகலவரம்-என
மானபங்கப்படுத்துவதையா!?

சாதி சண்டையின்போது-
"சந்தடி"வேலை-
செய்வதையா!?

"பார்"இருக்குது-என
"மார்"காட்டி-
விளம்பரம்-
செய்வதையா!?

ஓடிபோய் வாழுவோம்-என
"விருந்துண்டு" விட்டு-
"விற்பனைக்கு" விடுவதையா!?

நாட்டு நலனை-
எழுதாமல்-
நடுபக்கத்தில்-
அரை நிர்வாண-
படத்தை போடும்-
பத்திரிகை-
பற்றியா!?

கௌசர் பானு-
வயிற்றை கிழித்து-
சிசுவோடு-
எரித்து கொல்லபட்டாள்-
குஜராத் கலவரத்திலே!

அம்மாநில-
முதல்வரோ-
பிரதம ஆசையிலே!

வினோதினி-
பொசுக்கபட்டாள்-
சென்னையிலே!

அப்பெண்ணின்-
ஈரம் காய்வதற்குள் -
திவ்யா-
எரிக்கப்பட்டுவிட்டாள்-
எரி அமிலத்தாலே!

புனிதா -
பள்ளிக்கு சென்றவள்-
துப்பட்டாவால்-
கழுத்து நெரித்து -கொல்லபட்டாள்-
தூத்துக்குடியிலே!

சில தினங்களுக்கு முன்-
பதிமூன்று வயது சிறுமி-
மயக்க ஊசிபோட்டு-
துவம்சத்திற்கு -
ஆளானாள்-
கோவை-ராமனாதபுரதிலே!

காஷ்மீராக இருக்கட்டும்!
கன்னியா குமரியாக இருக்கட்டும்!

குஜராத்தாக இருக்கட்டும்!
மணிப்பூராக இருக்கட்டும்!

எல்லா உயிர்களும்-
நம் உறவு என்பது-
நினைவிருக்கட்டும்!

யாருக்கு துயர் என்றாலும்-
முதல் எதிர்ப்பு-
நம்முடையதாக-
இருக்கட்டும்!

"கருவில் உன்னை-
சுமந்தவளையும்-
உன் கருவை-
சுமப்பவளையும்-
காலமெல்லாம் நேசி-"
விவேகானந்தர் சொன்னது!

"ஒரு பெண் தன்னந்தனியாக-
பயமில்லாமல் சென்றுவந்தால்தான்-
உண்மையான சுதந்திரம்-"என
காந்தி சொன்னது!

மனச தொட்டு-
சொல்லுங்க-
நாட்டோட நிலைமை-
இப்படியாங்க !?-
இருக்குது...!?

12 comments:


  1. "ஒரு பெண் தன்னந்தனியாக-
    பயமில்லாமல் சென்றுவந்தால்தான்-
    உண்மையான சுதந்திரம்-"என
    காந்தி சொன்னது!
    //இது நிறை வேறும் காலம்தான் பெண்களுக்கு பொற்காலம்.

    ReplyDelete
    Replies
    1. sadiqa sako..!

      maarum oru naal ...

      insha allaah.!

      Delete
  2. குமறல் சரியே.
    மன அடிப்படைகள் மாற வேண்டும்.

    ReplyDelete
  3. நல்ல ஒரு சாட்டையடி கவிதை....!

    ReplyDelete
    Replies
    1. mano sako..!

      mikka
      nantri...!

      ungal muthal varavirkku ...

      Delete
  4. காந்தியின் கனவு கனவாகவே போய்விட்டது! சமூக அவலங்களை சாடும் நல்ல கவிதை! நன்றி!

    ReplyDelete
  5. /பெண்ணினமா!?
    இம்சிக்கவே-
    பிறந்த இனமா!?
    //

    ஆரம்பமே அட்டகாசம்

    ReplyDelete
  6. அழகிய கவிதை

    ReplyDelete