Saturday 22 February 2014

பிறந்த பூமி !(2)

பூமிக்கு மட்டும்-
உறிஞ்சிடும் தன்மை இல்லாமலிருந்தால்!

கடலும் -
காட்சியளிக்கும் சிகப்பு நிறத்தால்!

அத்தனை தேசமும்-
ரத்த சரித்திரத்தை தாங்கியே உள்ளது!

ரத்தச்சகதியை -
தன்னுள் புதைத்துள்ளது!

மண்ணின் மேலுள்ள-
மனிதனின் ஆசை!

வாயில் மண் விழும்வரை-
விடாத ஆசை!

கோடிகளில் உருளுபவனும்-
வயிற்றின் அளவே உண்ணுகிறான்!

மாட மாளிகை கொண்டவனும்-
சிறிதொரு இடத்தில்தான் துயில் கொள்கிறான்!

மனித மனமோ-
ஆழம் காணமுடியாத சமுத்திரம்!

எண்ணங்களோ உள்ளது-
அத்தனையும் எனக்கு மாத்திரம்!

மண்ணை பிடிக்கும் வேகத்தில்-
மனிதத்தை மிதிக்கிறான்!

ரத்ததில் குளிக்கிறான்!

எத்தனை இழப்பானாலும்-
எம் தேசம் எங்களுக்கே-என
முழக்கமிடும் ஒரு கூட்டம்!

எதிர்ப்பவர்களை எரித்து விட்டு-
அத்தேசம் நமக்கானது என்கிறது-
அதிகாரவர்க்கம்!

இப்புள்ளியிலிருந்தே துவங்குகிறது-
போராட்டம்!

நமது கவிதைக்கான களம்-
லிபியாவின் சுதந்திர போராட்டம்!

ஆதாரமான புத்தகத்தின் பெயர்-
பாலைவன சிங்கம் உமர் முக்தார்!

நூலின் ஆசிரியர்-
யூசுப் அவர்களாவார்!

இனி பயணிப்போம்-
பாலை வனத்தில்!

மன்னிக்கவும்-
போர்க்களத்தில்!


//இப்புத்தகம் கிடைக்கும்இடம்,
புது யுகம்,
26-பேரக்ஸ் ரோடு,
பெரிய மேடு,
சென்னை-3
போன்- +91 44 256 10 969 //


(தொடரும்....!!)


5 comments:

  1. // வாயில் மண் விழும்வரை விடாத ஆசை...! // உண்மை...

    தொடர்கிறேன்...

    ReplyDelete
  2. ///வாயில் மண் விழும்வரை-
    விடாத ஆசை! ///

    nitharsanamaana unmai ...

    ReplyDelete
  3. //பாலைவன சிங்கம் உமர் முக்தார்//
    தொடர்கிறேன்..

    ReplyDelete
  4. அடுத்த புத்தகம்..... நல்லது.

    தொடர்ந்து பயணிக்கிறேன் உங்களுடன், நீங்கள் சொல்லும் புத்தகத்துடன்.

    ReplyDelete