மயிலிறகாகி கவிதைப் புத்தகத்தினுள் ஒளிந்திட !
தாய்ப்பாலாகி குழந்தை முகத்தில் வாசமாகிட!
ரத்தத்துளியாகி தாய் நாட்டிற்காகப் போராடும் போராளியின் உடலில் ஓடிட!
மழைத்துளியாகி மல்லிகை மொட்டினுள் தங்கிட!
தாவணிமுனையாகி பிரியமானவளின் முக்காடாக மாறிட !
பேனாவின் மைத்துளியாகி,புரட்சியாளனின் எழுத்தினில் ஓர் புள்ளியாகிட!
வாழ்வை அர்த்தமாக்கி,மரணத்திடும்போதும் புன்னகைத்திட !
ஆசைகள் நிறைவேறட்டும்
ReplyDelete