Wednesday, 13 June 2012

மாற்று திறனாளிகளே ...



ஆரோக்கியமானவன்-
அடாவடியில்-
ஈடுபடுவதும்!

தெம்பா இருப்பவன்-
வம்பை தேடி-
அலைவதும்!

மலைகளையும்-
குடைந்து விடும்-
எலிகள் கூட்டம்!

பலசாலியவும்-
பலமிழக்க செய்யும்-
கவலை எனும்-
வாட்டம்!

கொள்கை கூட்டம் என-
சொல்லி கொண்டு-
கொள்ளை கூட்டம்-
ஆவதும்!

தேர்தல் அறிக்கையில்-
'சேது' நிறைவேற்றனும் என-
சொல்லி விட்டு-
இன்று -தேசிய சின்னமா-
அறிவிக்க அறிக்கை-
விடுவதும்!

இந்திய இறையாண்மையை-
'இடித்து' ஒழித்து விட்டு-
இந்தியா ஒளிர்கிறது-
என்பவனும்!

'உரிமையானவர்களை'-
ஒதுக்கி விட்டு-
கள்ள தொடர்புகளை-
தொடர்பவர்களும்!

நெஞ்சை-
நிமிர்த்தி அலைகிறார்கள்-
இந்த ஈன பிறவிகள்!

மனிதத்தின் -
அவலங்கள்!

எனதருமை-
மாற்றுதிறனாலிகளே!

நீங்கள் உடல் -
குறை உள்ளவர்களல்ல!

மாற்று திறனாளிகள்-
செய்திடாத-
சாதனையே இல்லை!

எல்லோருக்கும் வெளிச்சம்-
தரும் மின் விளக்கு!

அதை கண்டுபிடித்த-
எடிசன் காது கேளாதவர்-
என்பதை-
விளங்கு!

'மறைத்த' பின்தான்-
உருவாகும் -
வரலாறு!

சிலபேர்களை -
இடையிலேயே வாரிடலாம்-
இடர்பாடு!

ஆனால் உங்களின்-
விடா முயற்சியினால்-
நீங்கள்-
வாழும் வரலாறு!

சாமானிய-
என்னை போன்றவர்களுக்கு-
நீங்களே!
தன்னம்பிக்கை வேர் !

'வரும்போது'-
பொட்டளவு-
துணி கிடையாது!

'திரும்பா'பயணத்தின்போது-
போர்த்திட-
துணி கிடைக்குமா?-
தெரியாது!

நண்பர்களே!
உங்களுக்காக-
வாழும்காலங்களில்-
பொன்னாடைகள்-
தவம் இருக்கிறது!

Tuesday, 12 June 2012

கேலியா தெரியுது போல...?



மனம் வீசும் என-
எண்ணி-மொட்டுகளின் மேல்-
எரி திரவகத்தை ஊற்றுவதை-
போல!

பாலம் பாதியே-
கட்டி விட்ட நிலையில்-
ரயில் சேவை தொடங்குவது -
போல!

அதிக மகசூலுக்கு-
ஆசைபட்டு-
பூச்சி மருந்து எனும் -
விசத்தை தெளிப்பது -
போல!

தொண்ணூறு சதவிகிததும் மேல்-
அணு உலை நம்பி இருந்த-
ஜப்பானில் மூட-
இது வரை நடப்புல-
இல்லாத அழிவு உலையை-
நம் நாட்ட்டுல திறக்க-
நினைப்பது போல!

சமாதான புறாக்களை-
பறக்க விடுவது போல்-
பறக்க விட்டு-
துப்பாக்கிகள் குறி -
வைப்பது போல!

பசுமை நேசிப்பதால்-
வெளியேற மறுக்கும்-
பழங்குடி மக்களை-
வெளியேற்ற விரட்டி அடிப்பதை-
பசுமை புரட்சின்னு-
சொல்வதை போல!

பாலியல் செயலுக்கு-
மூடபடுவதற்க்கு-
பேரோ -'பீடம்'-
கொலைவழக்கு உள்ள-
மூடபடாததின்-
பேர் 'மடம்'-
என்பதை போல!

கேரளத்தில் மீனவனை-
சுட்டதுக்கு கைது-
ராமேஸ்வரத்தில் செத்தாலும்-
அறிக்கை விடுவது போல!

பட்டினியில் சாவும்-
குழந்தைகள்-
குழந்தை தொழிலாளர்களை-
வைத்துள்ள நம் நாடு-
வல்லரசு என பீற்றுவது -
மக்களை மடையர்கள் என-
எண்ணி விட்டார்கள்-
போல.......!


[குழந்தை தொழிலார்கள் எதிர்ப்பு தினத்தில்-
எனக்கு தோன்றிய எண்ணங்கள்!]

Monday, 11 June 2012

வார்த்தைகள்!



வார்த்தை-

சிலது-
வெல்லும்!

சிலது-
கொல்லும்!

வஞ்சி !~
உந்தன்-
மௌனமோ-என்னுள்
பிரளயமே-
உண்டு-பண்ணும்!

-------------------------------

ஆர்பரிக்கும்-
கடலலை!

கேட்கிறது-
சில வார்த்தைகளை!

உன்னை பார்க்க-
விருப்பம் இல்லை!

காரணம்-உன்னுடன்-
உன் நிழல் வரவில்லை!

பூவை தாங்காத-
தண்டா!?

நீ!
மட்டும் வரலாமோ?-
தண்டமா!?
-----------------------------
வார்த்தை-

சொல்லும் வரை-
செல்லா காசு!

சொல்லிய பின்னே-
செலவான காசு!
------------------------------------
பூக்களை-
ரசித்து இருக்கிறேன்!

புல்லின் மேல்-
படுத்தும்-
இருக்கிறேன்!

மா கவிகளின்-
வார்த்தைகளான-
கவிதைகளை-
படித்தும் -இருக்கிறேன்!

மழலைகளின்-
மொக்கை வாய்-
சிரிப்புக்கு முன்னால்-
மறந்து நிக்கிறேன்!
------------------------------------
நாம் -
வாய் பேசிட -
சில ஆண்டுகள் -
தாமதம் ஆனதால்-
வாடியவர்கள்-நம்
'நலன் விரும்பிகள்'!

இன்றோ நாம்-
'வாய் கூசாமல்'-
பேசிடும் பேச்சால்-
வாடுகிறார்கள்-
அதே-உறவுகள்!

மனிதர்கள்-
இந்த ஈன தனமான-
நன்றி கெட்ட-
செயலை புரிகிறார்கள்!

'நன்றி கெட்ட நாயே'-என
நன்றி உள்ள பிராணியை -
திட்டுகிறார்கள்!
----------------------------------

Saturday, 9 June 2012

மின்னாத மின் மினிகள்...



எண்ணெய் படிய-
தலை சீவி!

வலது பக்கம்-
எடுத்த வகிடு!

விழுந்து முளைக்க-
ஆரம்பித்த-
பற்கள்!

விளையாடி -
அடிபட்டு -
ஆற ஆரம்பிக்கும்-
புண்கள்!

கழுத்து வரை-
மாட்டிய-
பித்தான்கள்!

கால் சட்டையை-
தாங்கி நிக்கும்-
அரைஞான் கயிறுகள்!

சென்றோம்-
விரல் பிடித்த-
கைகளை-
விட்டு விட்டு!

பிரம்புகள்-
பிடித்த-
கைகளிடத்து!

இன்று-
பள்ளி சேர்க்கை-
அளவீடு-
பணத்தை கொண்டு!

அன்று-
அளவீடு-
வலது கையால்-
இடது காதை-
தொடுவதைகொண்டு!

புது-
நட்புகள்!
புது-
கவலைகள்!

பெற்றோர்கள்-
எதிர்பார்ப்புகள்!

சில-
பாராட்டுகள்!
பல-
விரட்டுதல்கள்!

ஆதரிக்கும்-
நன் நெஞ்சங்கள்!
அலட்சியபடுத்திய-
வன்மை நெஞ்சங்கள்!

அடி இல்லாத-
வாளியை கொண்டு-
கடலை அள்ள-
முயல்வதை போல!

சில-எழுத்துக்களையும்!
எண்களையும்!-அறிந்து-
விட்டு!

நினைப்பு-
கல்வி கடலை-
குடித்து விட்டது போல!

குடும்ப சுமையை-
சுமக்கும்-
மூட்டை தூக்கும்-
தொழிலாளி!

குழந்தைகள் எடையை விட-
அதிகம் புத்தக-
சுமை தரும்-
பள்ளி!

ஓய்வில்லாமல் ஓடும்!
சந்திரனும்!
சூரியனும்!

அமாவாசையும்!
சூரிய கிரகணமும்-
அவைகளுக்கு-
விடு முறை!

குழந்தைகள் -
சுதந்திரமா இருக்க-
அனுமதி இல்லையா?
கோடை விடுமுறை!

பெற்றோர்களே!
நம் மனம்-
குளிர்வது-
பிள்ளைகளால்!

நமது-
'பேராசையினால்'-
நசுக்கி விடாதீர்கள்-
'விசேச'வகுப்புகளால்!

Thursday, 7 June 2012

உலக உழைப்பாளிகளே ...



செய்வது-
சில்லறை வணிகம்!

சிதறிடாதது-
உங்களது-
உள்ளம்!

தலை கால்-
தெரியாமல் ,
ஆடுற உலகம்-
நாலு காசை -
'பார்த்த'பின்னாலே!

கொண்ட தொழிலை-
விடலியே-கை நிறைய
காசு -
'பார்த்த பின்னாலே'!

நூலை அசைத்தால்-
ஆடும்-
வானில் பறக்கும்-
பட்டம்!

வேர்களை கொண்ட-
பெரும் மரங்கள்-
நமது அசைப்பினால்-
காணுவதில்லை-
ஆட்டம்!

'கறைகள்' படிந்த-
கைகளுண்டு!

கண்ணாடி குடுவைகளினால்-
கீறல் தான்- உங்கள்-
கைகளில் உண்டு!

'சராமாரியான' பாதிப்பு-
சுழன்று அடிக்கும்-
காற்றினால்!

வயோதிகம் வந்தது-
உங்களுக்கு-
சுழன்ற காலத்தினால்!

நாட்டை ஏய்த்து-
ஏப்பம் விடுபவர்கள்-
வருகிறார்கள்-
பந்தாவாக!

உழைத்து உரமேறிய-
உடலைகொண்டவர்களே-
நீங்களோ இருக்கீங்க-
சாந்தமாக!

நேற்றைய பயணம்-
மிதி வண்டியில்!

இன்றைய-
மதிப்பு பல-
கோடிகளில்!

இந்த 'பாபாவுக்கு'-
ஆர்வமாம்-
ஊழலை ஒழிப்பதில்!

இதுபோன்ற -
நாடகங்கள் சாதாரணம்-
நம் நாட்டில்!

உழைப்பாளிகளே-
உங்களுக்கு கண்ணும்-
கருத்தும்-
உழைப்பில்!

உணவில் சிறந்தது-
தன் உழைப்பில்-
உண்பது-நபி மொழி!

உங்களை -
செம்மை படுத்திருக்கும்-
அம்மொழி!






Tuesday, 5 June 2012

மாறும் மண் வாசம்....



விளக்குகள்-
தாங்கிய -
கோபுரங்கள்!

கூடு கட்டி-
வாழ்ந்த-
புறாக்கள்!

பிறரும்-
அமர்ந்திட-
இருந்த-
திண்ணைகள்!

இன்று-
மறைந்து போன-
சுவடுகள்!

மின்சார இணைப்பு-
இல்லாத காலத்திலும்-
அச்சமற்று -
தூங்கிய இரவுகள்!

பக்கத்து வீட்டுக்கும்-
சேர்த்து சமைத்த-
'விஷேச ' உணவுகள்!

புள்ளை பிறந்த-
வீடுகளில்-
மூக்கை துளைத்த-
பூண்டு-
வாசனைகள் !

குழந்தைகளை-
வளர்க்க-
மழலையாக-
மாறிய-
மூத்தவர்கள்!

நிலவின்-
வெளிச்சத்தில்-
அமுதுண்ட-
நாட்கள்!

அன்னத்தை -
கண்டவுடன்-
நிலவின் வெளிச்சம்-
கொண்ட முகங்கள்!

வற்றி விட்டால்-
விளையாட்டு திடல்-
கண்மாய் கரைகள்!

மழை பெய்தால் -
மக்களின் அழுக்கெடுக்கும்-
தொழிற்சாலைகள்!

அணில் விளையாடிய-
தென்னைகள்!

இன்று-
அணிலை தேடும்-
தென்னம் பாலைகள்!

ஊரை சுற்றி வந்தாலும்-
மனசு சுத்தமான-
மனிதர்கள்!

இன்று-
'சுதி'யுடன்-
அலையும்-
'சுள்ளான்கள்!

பெரிய பாக்கியமாக-
கருதப்பட்டது-
தவிச்ச வாயிக்கு-
தண்ணீர் கொடுப்பது!

நிரஞ்ச தண்ணிய-
குறைஞ்ச அளவு கொடுப்பது-
அரசியல் சாணக்கியத்தனமாக -
கருதபடுது!

அன்று-
குளிர்ந்த காற்று-
வீசும்போதும்!
சிறு சிறு தூறல்கள்-
சிந்திடும்போதும்!
மனதை குளிர்விக்கும்!
மண் வாசம்!

இன்று!
நாட்டு நடப்புகளும்-
அநாகரீக அரசியலும்-
மண்ணில் கலந்து -
விட்ட-'அணு' வாசமும்!
குருதிகள் நாற்றமும்!
மூச்சடைக்கும்-
காலம்!



Sunday, 3 June 2012

வறுமை!



சுட்டிடும்-
நெருப்பு!

மூழ்கிடுவது-
தங்கம் என்றால்-
ஜொலிக்கும்!

வெறும் தாளேன்றால்-
சாம்பலாகும்!

இருபென்றால்-
ஆயுதம் ஆவோம்!

துரும்பென்றால்-
காணாமல்-
போவோம்!

நம்' தன்மையை'கொண்டே-
நிலை கொள்வோம்!

'உரு' மாறுவோம்!
-------------------------------------
வறுமை-
ஒருவனை-
செதுக்கும்!

செழுமையோ-
மயக்கும்!
---------------------------
இன்றைய-
சாதனையாளர்கள்!

நேற்று-
சோதனையின் மடியில்-
வளர்ந்தவர்கள்!
-------------------------------
வங்கியில்-
'இருப்பை' கொண்டிருப்பதால்-
'போகையில்'வருமோ-
கூடவே!

'இருப்பதை'-
பகிர்ந்துண்டால்-
கூடுமே-
நன்மையே!
-----------------------
ஏழையே -
துவளாதிரு!

பணக்காரனே -
ஆடாதிரு!

கீழே உள்ளது-
மேலே பறப்பதும்!

மேலே பறப்பது-
கீழே வருவதும்!

உலக-
இயல்பு!

ஏன்?-
'இல்லாததால்'-
மன கசப்பு!

'இருப்பதால்'-
இறுமாப்பு!
-------------------------
பண வரவில்-
இருக்கலாம்-
வறுமை!

மனதில்-
குடி கொண்டிட வேண்டாம்-
வெறுமை!
-----------------------------



'