இனிப்பை-
தேடிவரும்-
எறும்புகளை போல்!
பெண்களின்-
கூந்தலில்-
அழகூட்டும்-
மல்லிகைகள் போல்!
எண்ணம் எனும்-
கருவை -
சுமந்து கொண்டு!
சிந்தனை காட்டில்-
நுழைவேன்-
வார்த்தைகளை-
தேடிக்கொண்டு!
வார்த்தைகள்-
தேனடை மொய்க்கும்-
தேனீக்கள் போல்-
மொத்தமாக வந்து-
திணறடிக்கும்!
பல நேரங்களில்-
மாய மானைப்போல்-
மாயமாக-
மறைந்திடும்!
திணறடித்தாலும் -
மாயமானாலும்-
தேடல் தொடர்கிறது!
சிந்தனை காட்டில்-
உலாவுவது-
எனக்கு-
பிடிக்கிறது!