Friday, 1 June 2012

பெத்தால் தான் தாயா..!?

என் மழலைக்கும் -
என் மணாளிக்கும்!

என் தாயிக்கும்-
என் தாயின்-
சேயான எனக்கும்!

உறவினர்களுக்கும்-
உறவுகளின் உயிரின்-
உருவங்களுக்கும்!

இன்னும் -
எத்தனையோ -
பேர்களுக்கும்!

இத்தனை என -
கணக்கிட
முடியாதவங்களுக்கும் !

தாயாக-
நீ-
வளர்த்தாய்!

மாரோடு-
சாய்த்து-
கொண்டாய்!

இத்தனை பேருக்கும் -
நீ தாயா!?

இல்லையே!

பெத்தால்தான்-
தாயா!?

பெத்தது எல்லாம்-
பிள்ளையா!?

உன் வயிதுலதான்-
ஒரு கரு வளரலையோ!?

முன்னமே அந்த -
நல்லவர்கள்-
பிறந்து விட்டார்களோ!?

விதைகள் -
வளரும்வரை-
தேவை-
வேலிகள்!

வளர்ந்த-
விதைகள்!
வேலிகளை-
ஒதுக்குவதா-
முறைகள் !?

தொலை பேசியில்
பேசுகையிலே

உனக்கு -
கேளாமலோ !

எனக்கு
புரியாமலோ !

கலங்கி உள்ளேன்!
மனம் புழுங்கி உள்ளேன்!

விலைவாசி ஏத்தி
'வாக்கரிசி ' போட்டாங்க!

இதை சாதனை என -
விளம்பரம் போடுறாங்க!

விளம்பரத்துக்கு செலவு-
இருபத்தஞ்சி கோடியில!

மக்களோ -
பிச்சை எடுக்குற -
நிலையில!

நீயோ-
கற்களை-
கட்டிடங்கள் ஆக்கினாய்!

அதன் நிழலில் -
கூட இளைப்பாற-
மறுக்கிறாய்!

உனக்கு நான்-
என்ன கைம்மாறு-
செஞ்சு இருப்பேன்!?

உன் காதுல-
'அலுக்கதா'தொங்கி -
இருந்தா சந்தோசம்-
அடைந்து இருப்பேன்!

அலுக்கத்து- காதுல தொங்கும் வளையம்!

[இந்த கவிதை ஆச்சா கமிதா அவர்களுக்கும்-
உலகில் உள்ள பாட்டிமார்களுக்கும் அர்ப்பணம்]

Wednesday, 30 May 2012

'பொது' கிணறு....



அதிகாலை-
'வயசு'புள்ளைகளுக்கு!

காலை-
வேளை-
பள்ளி புள்ளைகளுக்கு!

அதுக்கு பின்னே -
தாய் மார்களுக்கு!

முற்பகளுக்கு மேல்-
காலை' வேலை-'
போய் திரும்பியவர்களுக்கு!

மாலை -
வயது முதிர்ந்தவர்களுக்கு!

காலை நேர-
கால அட்டவணையே!

மறு பாகமும்-
தொடருமே!

'தேவைகளை-
தீர்த்திடும்-
கிணறுகள்!

அதில் அசுத்தம்-
செய்வதுதான்-
மனித புத்திகள்!

ஓட்டை வாளியோ-
உடையாத வாளியோ-
மறுக்காம -
தண்ணி கொடுக்கும்-
கிணறுகள்!

பணக்காரனோ-
ஏழையோ-
அவன் செய்யும்-
நற்செயலை கொண்டே-
மனதில்-நிற்பார்கள்!

தண்ணீர் வரும்-
ஊத்துகள்!

அதை விட-
கண்ணீர் விடும்-
காஷ்மீர் மக்கள்!

கோடையில்-
மக்கள் கூடும்-
இடம்!

மழை காலங்களில்-
நாம் மறந்த-
இடம்!

'தேவைக்கு'-
திரும்பிவரும்போது-
'கடுப்பு'அடிப்பதில்லை-
கிணறுகள்-
நம்மிடம்!

பென்சனுக்கு-
நடந்து நடந்து-
தேஞ்ச தியாகிகள்-
உண்டு!

அலையவிடும்-
அரசு அதிகாரிகளும்-
உண்டு!

அள்ள அள்ள-
ஊறும்-
'கிணறுதான்'-
உண்டு!

நெடுதூரம்-
தெரியும்-
கடலில் உப்புண்டு!

கண்ணுக்கே தெரியாத-
மண்ணுக்குள் -
குடி நீர்-
இருப்பதுண்டு!

அது போலதானோ-
சோகங்கள்-
சுழட்டி அடித்தாலும்-
லட்சியம் கொண்டவன் -
மட்டும்-'இலக்கை'-
அடைகிறானோ!?





Monday, 28 May 2012

கூட்டு குடும்பம்!



கூட்டு பொரியல்-
உணவுக்கு சுவை-
கூட்டும்!

கூட்டு குடும்பமே-
சந்தோசத்தை -
கூட்டும்!
--------------------------
சொன்னாங்க-
கூடி வாழ்ந்தால்-
கோடி நன்மை!

நடப்பதிங்கே-
'கோடிகளால்'-
பிளவுபடும்-
கொடுமை!
-------------------------------------
வண்டி இழுக்கும்-
ஜோடி மாடுகள்!
தாயும்-
தந்தையும்!

கழண்டிடாமல்-
காக்கும் அச்சாணிகள்-
ஆச்சாவும்(பாட்டி)
அப்பாவும்(தாத்தா!)!

பயணிக்கும் -
கூழங்கள்-
பெற்ற பிள்ளைகள்!

இன்றைய -
தலை முறையோ-?
தடை என எண்ணி-
அச்சானிகளை கழட்டுவது-
போல!

மூத்தவர்களை-
ஒதுக்குகிறோம் -
குப்பையை போல!

அவசர கதியில் -
'வேகமாக'செல்ல!

பெற்றவர்களை-
முனைகிறோம்-
முதியோர் இல்லத்தில்-
தள்ள!

ஆம் -
இன்று நாம்-
இருக்கிறோம்-!
அரசு கண்டுக்காத -
வரலாற்று சின்னங்களை-
போல!

உறவுகள்-
'இருந்தும்' -
'இல்லாதது 'போல்-
அலைகிறோம்-
நாதியற்றவர்களாக!
--------------------------------------
விவகாரத்தும்-
கொலைகளும்-
நடப்பது அதிகம்-
தனி குடித்தனத்தில்-
உளவியல் உண்மை!

காரணம்-
கருத்துவேறுப்படும்போதும்-
'கடமை'தவறும்போதும்-
கட்டு படுத்த-
மூத்தவர்கள் இல்லாததே-
பேருண்மை!
-----------------------------------









Saturday, 26 May 2012

கல்யாணம்!



விசேசமானது!
இல்லாதவர்களுக்கு-
விஷமானது!

'புரிந்து'வாழ்ந்தால்-
வம்சம்-
விருட்சமாகும்!

'பிரிந்து 'வாழ்ந்தால்-
தலை முறை-
விரயமாகும்!
-------------------------

மங்களகரமானது!

'மங்கலங்கள்'-
'கரை'ஏற-
'லகரங்கள்-
'செலவாகுது!
----------------------------
ஆட்டம்-
பாட்டம்!

குடி!
கூத்து!

அலங்கோலம்!
கேவலம்!
கல்யாணம்!

நல்ல காரியம்-
கல்யாணங்கள் !

நடை முறை -
என்னவென்றால்-
நடந்தேறும் -
அவலங்கள்!

-------------------------
மனங்களின்-
சங்கம ஒப்பந்தம் -
கல்யாண முறை!

'கறி-
'சின்னதானதால்-
'பங்கம் 'விளைவிக்கும்-
உறவின் முறை!
--------------------------------------
உயிருக்கு உயிரான-
காதல் என்பான்!

ஊரு விட்டு-
ஊரு போய்-
கல்யாணம்-
செய்வான்!

சமாதானம் ஆகி-
வீட்டில்' சேர்த்தால்'-
கைக்கூலி கேட்டு-
நச்சரிக்கிறான்!
---------------------------
வில்லை ஒடித்து-
கரம் பிடித்தான்-
புராணம்!

மாமனார் குறுக்கை-
வரதட்சணையால்-
ஒடிப்பது-
கலிகாலம்!
------------------------
கல்யாண வீட்டுக்காரனுக்கு-
பெரும் செலவு!

அதில்-
மது கடைக்கே-
பெரும்பங்கு!

இதுவா!?
நாட்டுக்காக -
உயிரை கொடுத்தவர்களின்-
கனவு!?
-----------------------




Wednesday, 23 May 2012

'முடிவுக்கு '-முன் ...



முறுக்கேறிய -
தேகம்!

முடக்கிய-
வாதம்!

பலம் இழக்கும்-
செல்கள்!

செல்லரிக்கும்-
உடல்கள்!

வாழ்ந்த வருடங்கள்-
எத்தனை என்பதல்ல-
முக்கியம்!

வாழ்ந்த காலத்தில்
என்ன செய்தோம் என்பதே-
முக்கியம்!

வரலாறு ஒன்னு-
இருக்கு!

நாறிடவா -
நம் செயல்பாடு-
இப்படி இருக்கு!?

சுக போகங்களில் -
முங்கி திளைக்கிறோம்!

ஒரு 'ஓலை'பாயில்-
சுருண்டிட -
இருக்கிறோம்!

விளைஞ்ச கதிர்கள் -
அழகு மணிகள்!

அடித்து எடுத்தால் -
நெல்மணிகள் !

அடிபட்ட நெல்கள் -
பசியாத்துது !

கழிவான-
வைக்கோல்கள்-
கால்நடை களுக்கு -
இரையாகுது!

மனிதா!-
நம்மால் -
மற்ற மனிதனுக்கு-
பிரயோசனம் இருக்குது!?

நாம்-
சோத்துக்கு தண்டமா!?

பூமிக்குத்தான் -
பாரமா!?

சுனாமி காலத்தில்-
பல நூறு உயிர்கள் -
இழந்ததில் உலகமே-
அதிர்ந்தது!

ஒரு உண்மை தலைவன்-
'தவறி'விட்டாலோ -
அகிலமே கலங்குது !

'எண்ணி ' பார்க்கும் -
பணங்களை விட !

'எண்ணி ' பார்க்க வேண்டும் -
என்ன அர்த்தம் இருக்கு!?-
நம் வாழ்வினூடே!?






Tuesday, 22 May 2012

எல்லா புகழும் இறைவனுக்கு-3



என்ன செய்தேன்!
என்- எண்ணங்களை
சொன்னேன்!

பயந்ததுண்டு-
யாரிடமும் பேசிட!

பரிதவித்ததுண்டு
யாராவது- எதனையாவது
சொல்லிட!


கடுப்பானவர்கள் உண்டு-
நான் கவிதை-
எழுதுவதாக-
கேள்விப்பட்டிட!

எங்கோ பிறந்த-
வண்டுகள்-
மகசூல்-
ஏற்படுத்துது!

எங்கெங்கோ
பிறந்த நாம்-(பதிவர்கள்)
எழுதிட தூண்டுகிறோம்-
விருது கொடுத்து!

கொட்டும் மழை
அடையாளம் காணப் படுது!
அது விழும்-
இடத்தைக் கொண்டு!

கழிவில் விழுந்தால்-
கழிவு நீர்!

விளைநிலத்தில் விழுந்தால்-
விளையும் நெல்!

அதுபோலத்தானோ-
மனிதன் வாழ்வோ!?

ஒவ்வொன்றுக்கும்-
ஒரு நிலை உண்டு!
ஒவ்வொரு மனிதனுக்கும்-
தனி சிறப்புண்டு!

மனிதப் படைப்பின்-
நோக்கத்தை-
அறிந்தவர்கள்-
எத்தனை பேருண்டு!
அறிவோம்!
தெளிவோம்!

நாமும் வாழ்வோம்!
பிறரையும்-
வாழச் செய்வோம்!

விருதளித்த சகோதரி
கலைக்கு-
மிக்க நன்றி!

பகிர விரும்பும்-
உறவுகள் பத்து!

சென்னை பித்தன் அவர்கள்
வசந்த மண்டபம் மகேந்திரன் அவர்கள்
சதக் மஸ்லஹி அவர்கள்
ராஜி அவர்கள்
மனசாட்சி அவர்கள்
மதாஸ் அவர்கள்
சிட்டுக்குருவி அவர்கள்
ஜோஸபின் அவர்கள்
ரிஷ்வன் அவர்கள்
வைரை சதீஷ் அவர்கள்

தோழர்களே..
எழுதுவோம்!

சமூகத்தை-
எழுப்புவோம்!

அன்பு உறவுகளே-
இந்த விருதினைப்
பகிருங்களேன்!

உங்கள் பிடித்தமானவர்களுக்கு!
மற்றவர்களுக்கு
அறிமுகப்படுத்துவதற்கு!

Tuesday, 15 May 2012

பயணத்தினூடே".......

ரைட்ஸ் சகோதரர்கள்-
கனவு-
இரும்பு பறந்திட!

சிறுவயது ஆசை-
விமானத்தில்-
பறந்திட!

எத்தனை-
பறப்பன-
பறக்குது-
கறை உண்டா!?-
வானிலே!

கோடில்லாமல்-
செல்வதுண்டா?-
உலோக பறவை!-
விண்ணிலே!

இதில்தான்-
மாறு படுகிறான்-
படைத்த இறைவனும்!

படைக்கப்பட்ட-
மனிதனும்!

பணம் தேடி!
பகட்டு தேடி!

உள்ளூரில் இழந்த-
கவுரவத்தை -
மீட்க!

வயதுக்கு வந்த-
உடன்பிறந்தவளை-
கரை சேர்க்க!

கனவுகளை-
கொண்டவர்களை-
சுமந்து செல்லுது-
விமான றெக்க!

நாடுகளை கடக்கும்-
விமானத்திற்கு-
தேவை-
வழி காட்டி!(மேப்)

கப்பல் மாலுமிக்கு-
தேவை படுது-
திசைக்காட்டி!

அண்ட சராசரங்களை-
குறிப்பிட்ட கோடில்-
பயணிக்க வைக்க-
நிச்சயம் இருப்பான்-
"ஒரு நிர்வாகி"!

நிலையத்தில்-
குடி நுழைவு-
சோதனை!

சுங்க சாவடி-
சோதனை!

"சோதனைகளை"-
கடந்து செல்லும்-
வெளி நாட்டு-
ஊழியனுக்கு-
வாழ்வே ஆகும்-
வேதனை!

அவனுக்கு-
பணம் வரவாகும்!

இளமை-
செலவாகும்!

எண்ணி விடலாம்-
அவன் அனுப்பும்-
வருமானத்தை!

இழந்திருப்பான்-
எண்ணிலடங்கா-
தன்மானத்தை!

எல்லையில் காவல்-
ராணுவ வீரன்!

குடும்ப மானத்தை-
காக்க போராடுறவன்-
வெளி நாட்டு ஊழியன்!

வீரர்கள்-
சவ பெட்டியில்-
ஊழல்-
"பாரத தீயவர்கள்"!

"தியாகம்" செய்தவர்களை-
மறக்க-
"அத்தீயவர்களை" போலவா!?-
நாம்-
கொடியவர்கள்!,?


(இக்கவிதை அனைத்து வெளிநாட்டு-
ஊழியர்களுக்கு அர்ப்பணம்)