Sunday, 30 September 2012

வினோதங்கள்....

உள்ளாடைக்கு மேல்-
முழு ஆடை-
சராசரி-
என்பது!

முழு ஆடைக்கு மேல்-
உள்ளாடை-
அபாரம்-
என்பது!

உள்ளாடை தாண்டி-
முழு ஆடை தொங்குவது-
புதுமை என்பது!

பதவி வந்தவுடன்-
புதிய சட்டமன்றம்-
மூடப்பட்டது!

நாசமா போன-
டாஸ்மாக் அடைப்பு-என்ற
செய்தி-
பொய்யாய்போனது!

அவதூறு கூட-
பெண்களை கூறுவது-
பாவமாக கருதப்பட்டது!

அந்தரங்கங்களை-
படம் பிடித்து-
காசு பார்க்கும்-
கேவலங்கள்-
நடக்குது!

ஆனாலும்-
சுதந்திரம் என்று-
நயவஞ்சக நரியிடம்-
சிக்குவதும்-
தொடர்கிறது!

பதவி ஏற்பில்-
வறுமையை ஒழிப்போம்-என
சூளுரைப்பது!

குடும்பத்தோட-
வெளிநாடு போய்-
சுற்றுவது!

அதிர்ச்சி தந்தது-
முன்னாள் அதிபர்-
பதவிகால செலவு-
207 கோடி என-
படித்தது!

தேசம் பிரிவதற்கு-
முன்னால் வந்தவர்கள்-
ஊடுருவியவர்களாம்!

பிரிந்த பின்-
வந்த "இடிப்பு" புகழுக்கோ-
பிரதம ஆசையாம்!

யாரும் ஊடுருவவில்லை-என
எல்லை பாதுகாப்பு படை-
சொல்லுது!

நாட்டை கெடுக்கும்-
நாதாரிகள் -தொடர்
பொய் பிரச்சாரம்-
பண்ணுது!

மக்கள் தொகை-
பெருக்கத்திற்கு-
கல்வியறிவு இல்லாததே-
காரணமாம்-
மாண்பு மிகு-
சொன்னது!

தகப்பன்மார்களே-
நம்மளை-
எந்த "இடத்தில்"-
வைப்பது!

துப்பாக்கி சுடும்-
பயிற்சி எடுத்தான்-
ஒருவன்!

அவனை காண-
வந்தான்-
நண்பன்!

அதிர்ச்சியாகி விட்டான்-
வந்தவன்!

ஆம்-
அனைத்து "துளைகளும்-"
வட்டத்திற்குள்-
இருந்ததை பார்த்தான்!

"சுட்டவனிடம்-"
கேட்டான்-
வந்தவன்!

குறி தவறாமல்-
சுடும்-
நீ!
போட்டிகளில்-
ஏன் வெற்றி-
பெறுவதில்லை!?-
என்று!

பதில் சொன்னான்-
போட்டியின்போது-
வட்டம் போட்டு-
அதில் சுட-
சொல்கிறார்கள்!-
இங்கே நான்-
சுட்ட பிறகு-
வட்டம் போட்டுகொள்வேன்-
என்று!

இப்படித்தான்-
யாரும்-
தப்புகளை தெரிந்தபின்னும்-
திருத்திக்கொள்ள முயல்வதில்லை!

அதற்க்கு -
தர்க்கம் செய்து-
நியாய படுத்த -
தவறுவதில்லை!







Saturday, 29 September 2012

மழையும்-என் மன நிலையும்!

மழை வருவதற்கான-
அறிகுறி!-
 குளிர்ந்த காற்று!

மனம் தரும்-
காற்று-
என்னவள் "சுவாசித்த"-
காற்று!
-------------------
கொட்டி தீர்க்கும்-
மழை!

அநியாயமா-
"தீர்க்கப்பட்ட"-
உயிர்களுக்காக-
கண்ணீர் அஞ்சலி -
போல!
----------------------------
இடி முழக்கத்துடன்-
கூடிய மழை!

கதறுவது போல்-
என் உணர்வலை!

காரணம் -
வெங்காயம்விற்பவர்-
தீவிரவாதியாம்!

விசா மறுக்கப்பட்டவர்-
பிரதம வேட்பாளராம்..!!!
------------------------------
முள்ளை மிதித்து விட்டு-
முள்ளு குத்தியது-
என்பது போல்!

தாமதமாக-
கிளம்பி விட்டு-
பேருந்து தாமதம்-
என்பது போல்!

மரங்களை -
வெட்டி விட்டு-
பருவமழை-
 பொய்த்து விட்டது-என்பது!
வேடிக்கையா இருக்கு-
"முன்னே "குறிப்பிட்டது -
போல்!
------------------------
சில துளி-
மழை என்றாலும்-
மண் வாசம் வீசுது!

அழகிய காஷ்மீரே-
உன் மண்ணில்-
ரத்த "கவுச்சி-"அல்லவா!
வீசுது!

அழகென்றால்-
ஆபத்து-
என்பார்கள்!

அழகு பூமியே-
உன்னையும்-
ஆபத்து என்று-
பொய் பரப்புகிறார்கள்!
----------------------------
வானம் கூட-
மேகம் எனும்-
ஆடை பூண்டுள்ளது!

வெட்கங்கெட்ட -
மனுஷ ஜென்மம்-
ஆடை அணிந்தும்-
தேகங்களை காட்டுது!
----------------------------


Thursday, 27 September 2012

நடை பாதை..

என்னவளே!
உன் வீட்டை-
சுற்றுவதே-என்
வாடிக்கையானது!

நீயோ!-
ஒளிந்திடுவதே-
தொடர்கதையானது!

தூணுக்கு-
பின்னால்-
மறைந்திருப்பாய்!

தூணின் நிழலின்-
பருமனால்-
"தெரிந்திடுவாய்"!

உன் தாய்-
முதுகு புறம்-
புதைந்து கொள்வாய்!

நான் போகும் -
பாதையெல்லாம்-
புதை குழிகளை-
காண செய்தாய்!

தோழிகளோடு-
அளவாவி இருப்பாய்!

நான் வருவது-
அறிந்தால்-
அமுதவாய் -
அடைத்திடுவாய்!

வீட்டுக்குள்ளே-
உன் காலடி-
சத்தம்!

போகும் -
எனது-
பிடரியை -
தட்டும்!

நீ!-
"குத்த வைக்கும்"-
திண்ணையும்!

வெண்ணையை -
பார்ப்பது போல்-
பார்க்கும்-
என்னையும்!

அழகே!
"போக்கத்தவன்"-என
என்னை ஒதுக்கினாயோ!?

இல்லை-
"பொழச்சிட்டு "போறான்-என
பதுங்கினாயோ !?

தன் நிழலை பார்த்து-
கிணற்றில் விழுந்த-
சிங்கத்தை போல!

ஆம்பிள்ளை சிங்கம்-என
அலட்டிய என்னை-
ஆட்டங்கான செய்து விட்டாய்-
உன் அலட்சியத்தாலே!

வஞ்சி நீ!
வெறுத்ததால்-
வாழ்கை "முடிப்பவனல்ல-"
நான்!

ஒரு அச்சு பிழை-என்பதால்
முழு புத்தகத்தை-
எரிப்பவன் அல்ல-
நான்!

பூக்களின் ரசிப்பவர்கள்-
மத்தியில்-
வேர்களின் பொறுமையை-
நினைப்பேன்!

படைப்புகளின்-
அதிசயங்கள் எழுதுபவர்கள்-
மத்தியில்-
படைத்தவனின்-
வல்லமையை நினைப்பேன்!

என் பார்வை-
சற்று வித்தியாசமானது!

அதுதான்-
எனக்கு பாடங்களை-
தருகிறது!

நடை முறை-
வலிகளைஎல்லாம்-
வேதனையாக-
பார்த்திருந்தேன்!

"நடை பாதை"-
"நேச வலியால்-
வலிகளையும்-
நேசிக்க ஆரம்பித்து விட்டேன்!




Tuesday, 25 September 2012

அதுவா!? இதுவா!?

 மழை துளிக்காக-
சிப்பி திறந்திருக்கா!?

சிப்பி திறந்திருப்பதால்-
மழை துளி-
அதில் விழுகிறதா!?

உடலுக்காக-
உயிரா!?

உயிருக்காக-
உடலா!?

மலர் என்றாலே-
அழகா!?

அழகேன்றால்தான்-
மலரா!?

நீதிவான்களை-
கண்டறியவே-
அநியாயங்கள்-
நடக்கிறதா!?

அநீதிகள் நடப்பதால்தான்-
நியாயவான்கள்-
உருவாகிறார்களா!?

பூமிக்காக-
மழையா!?

மழைக்காக-
நீர் ஆவியா!?

துன்பங்கள்-
இன்பத்தை-
அடையாள படுத்தவா!?

இன்பத்தின் இனிமையை-
ருசிக்க செய்வது தான்-
துன்பமா!?

பசிக்காக-
உணவா!?

உணவுக்காக-
பசிக்கிறதா!?

வாழ்வுக்காக-
தேடலா!?

தேடும் வரைதான்-
வாழ்வா!?

சிந்தனையால்-
எழுத்தா!?

எழுதுவதால்-
சிந்தனையா!?

அதுவா!?
இதுவா!?

சொல்ல முடியல-
எதுவா!?

இரண்டுக்கும்-
உறவுண்டு!

பார்க்க முடியா-
பிணைப்பு உண்டு!

அதுபோல்தான்-
நம் வாழ்வுக்கும்-
முடிவுண்டு!

"முடிவுக்கு"பின்-
நம் செயலுக்கு-
"கூலி" உண்டு!!



Sunday, 23 September 2012

அறிவது என்னவென்றால்...

தேனீக்கள்-
தேனை சேகரிப்பது!

மேகங்கள்-
தண்ணீரை சுமப்பது!

பட்டு பூச்சிகள்-
பட்டு நூற்கள்-
தருவது!

மரங்கள்-
கனிகளை-
தருவது!

செடிகள்-
பூக்கள் -
தருவது!

இறப்பு நிச்சயம்-என
தெரிந்தும்-
ராணி தேனீ இடம்-
"உறவில்"ஆண் தேனீ-
ஈடுபடுவது!

தன்னுள்-
கடல்-
உணவுகளை-
வைத்திருப்பது!

இன்னும் எல்லை-
மீறாமல்-
"பொறுமை"காப்பது!

பூமி நம்மை-
சுமப்பது!

வேதனை என-
தெரிந்தே -தாய்
கருவை சுமப்பது!

பிராண வாயுவை-
மரங்கள் தருவது!

இன்னும்-
எத்தனையோ-
உள்ளது!

அதை அடுக்கிட-
எவராலும்-
முடியாது!

தனக்கு -
உபயோகம் இல்லாததை-
"இவைகள்"ஏன்-
செய்கிறது!

அவையெல்லாம்-
மனிதர்களுக்கு-
பிரயோஜனம் ஆகிறது!

"அறிவுடையோருக்கு-
எத்தனையோ-
அத்தாட்சிகள் உள்ளது"-
இறை வாக்கு!

அத்தாட்சிகளை-
அறிய கூடிய-பார்வைதான்
இல்லையோ-நமக்கு!?

படைப்புகளின்-
"தன்மையை-"
 அறிய முயல்வது-
விஞ்ஞானம் !

படைத்தவனின்-
வல்லமையை -அறிவதே
மெய்ஞானம் !




Friday, 21 September 2012

அறிவுக்கு பொருந்தும்....!!?

வயது வேகத்தில்-
"வாழ்ந்தார்கள்"!

"வாழ்ந்ததால்-"
பிறந்தவர்கள்!

வயசான -
பெற்றவர்களை-
கவனிக்கணுமா!?

"மாங்கு ,மாங்கு"-என
படித்தவர்கள்!

மனைகளைஎல்லாம்-
விற்று மருத்துவர் ஆனவர்கள்!

நோய் என வருபவர்களிடம்-
நியாயமா நடக்கணுமா!?

அரை மணி நேரம்-
தாமதமானாலும்-
அரைநாள் சம்பளம்-
அம்போவென ஆகும்போது!

அடிபட்டு கிடப்பவரை-
ஆஸ்பத்திரியில்-
சேர்க்கனுமா!?

சத்தான உணவை-
உண்டு-!
"கெத்தா " ரத்தம்-
சேர்த்ததை!
யாருக்கோ!?-
ரத்தம் தானம்-
செய்யனுமா!?

எங்கோ-
 இயற்கை சீற்றம்!
இங்கே நாம்-
உணவு பொருட்கள்-
அனுப்பனுமா!?

கஷ்டப்பட்டு தான்-
உழைச்ச காசை-
கஷ்டபடுபவர்களுக்கு-
கொடுக்கனுமா!?

கோடி கணக்குல-
செலவுபண்ணிய-
அணு உலையை-
மூடியே போடணுமா!?

அறிவுபூர்வமான-
பதில்-
தேவை இல்லாதது!

அன்புபூர்வமான-
பதில்-
தேவையானது!

அறிவுக்கு மட்டும்-
இடம் கொடுத்து-
பதில் தேடுவது-
அபத்தம்!

அறிவோடு அன்பு-
கலந்த தேடலே-
பொருத்தம்!

அறிவியல்-
உலகம் இது!

அன்பா!?-
அப்படின்னா!?-என
கேட்கும் -காலம்
இது!

அதன் விளைவே-
உலகம் சுடுகாடாகுது!


ஏழைக்கு உதவுங்கள்-என
கையை நீட்டினார்-
ஒருவர்!

நீட்டிய கையில்-
எச்சியை துப்பினார்-
எதிர் இருந்தவர் !

இது எனக்கு-
மறுகையை நீட்டி-
கேட்டார்-
ஏழைக்கு!?

வெட்கி தலை குனிந்தார்-
தவறு செய்ததற்கு!

கை நீட்டி-
உதவி கேட்டவர்-
அன்னை தெரசா!

எந்த தீர்வுக்கும்-
அறிவுடன் அன்பும்-
இருக்கணும்-
முழுசா!!

"அளவற்ற அருளாளன்-
நிகரற்ற அன்புடையோன்"-
படைத்த இறைவன்!

அன்பு கலந்த-
நெஞ்சம் உள்ளவன்தான்-
மனிதன்!





Wednesday, 19 September 2012

காதலெனும் தேர்வில்...(4)

திரும்பி-
 திரும்பி-
பார்த்தவளை!

தீர்மானித்து விட்டேன்-
திரும்ப -
பார்க்கவே -
கூடாது-
அவளை!

"கொடூரம்" நடக்காமல்-
போனதால்!

நடமாட -
அவளை விட்டதால்!

பிரிந்த காரணத்தை-
அறியலாம்-
ஒரு நாள்!

அவளின்-
நியாயத்தையோ!

எனது-
தவறையோ!?

நாடாளு மன்ற-
கூட்ட தொடரை-
நடக்க விடாமல்-
தடுத்தது-
எதிர் கட்சி!

அதனால்-
லாபம் அடைந்தது-
ஆளும் கட்சி!

எதிர் கட்சிக்கு-
ஆளும் கட்சி-
பதில் சொல்லவில்லை!

எதிர் கட்சியை-
எதிர் கேள்வி கேட்கவும்-
ஆளும் கட்சிக்கு-
வாய்ப்பில்லை!

இவர்களை நம்பி-
ஏமாறும் மக்களின்-
நிலையோ-
கேவலப்பட்ட நிலை!

கோட்டை நீயும்-
தாண்ட கூடாது-
நானும் தாண்ட-
மாட்டேன்-
பேச்சி பேச்சாத்தான்-
இருக்கணும்-வடிவேலு
காமெடி!

நீயும் பேசகூடாது-
நானும் பேசமாட்டேன்-
இரண்டு கட்சியுமே-
தப்பிக்கலாம்-இது
அரசியலின் "அசிங்க-"
நெடி!

நான்-
அப்பேதையை-
கொன்று இருந்தால்!

என் கோபத்தை-
தீர்க்க அதுவே-
வழி என-
வாதிட்டிருந்தால்!

இது-
தனி மனித உரிமை-என
உலகம் போற்றுமா!?

அவள்-
 உறவுகள்தான்-
வேடிக்கை -
பார்க்குமா!?

அது போலதான்-
உயிரினும் மேலாக-
நேசிப்பவரை-
உபயோகமில்லாமல்-
அசிங்கபடுத்தி விட்டு!

கோடானு கோடி-
உள்ளங்களை-
ரணமாக்கி விட்டு!

இது-
கருத்து சுதந்திரம்-என்பது
முறையா!?

இதுதான்-
நாகரீகத்தின்-
நெறியா!?

எவ்வளவு முடியுமோ-
அவ்வளவு இழிவுபடுத்தி விட்டு-
"சுதந்திரம்" என்பது-
முறையா!?

ஆரோக்கியமான-
விமர்சனங்களும்-
விவாதங்களும்!-
வரவேற்கத்தக்கது!

அறிவுக்கும்-
மனித மாண்புக்கும்-
பொருத்தமானது!

மாபாதக செயலின்-
எல்லைக்கு சென்றேன்!

நல்ல வேளை-
திரும்பி வந்தேன்!

என்னை -
தடுத்தது-
குட்டி நாய்-
பால் குடிக்க-
முயன்றது!

"போக "வேண்டிய-
வழியை காட்டியது-
பிஞ்சு குழந்தை-
கபடமில்லாமல்-
சிரித்தது!

பேருந்தில் -
சன்னலோரத்தில்-
இருந்தபடி!

சில்லென்ற காற்றை-
ரசித்தபடி!

இனியாவது-
மனிதனாக -
வாழனும் -என
நினைத்தபடி!

"காதல் தேர்வில்"-
தோல்வி கண்டேன்!

வாழ்க்கை பாதையை-
தெரிந்து கொண்டேன்....!!

(முற்றும்)

(குறிப்பு-கொலை முயற்சி கதைக்காக கற்பனையே-
முன்னேயே குறிப்பிட்டு இருந்தால் சுவராஸ்யம் குறைந்திடும் என்பதால்-
கடைசியில் எழுதி விட்டேன்)