Wednesday, 31 July 2013

இஸ்லாமும்-நபிகள் நாயகமும்!(28)

"பகிரங்க அழைப்பிற்கு"-
பின் !

பயங்கொண்டது-
பதறுகள் கூட்டம்-
சத்தியத்திற்கு முன்!

"வளர்வதை-"
வெட்ட-
நினைத்தார்கள்!

அதற்காக-
புத்தியை கத்தியாக-
தீட்டினார்கள்!

வரவிருக்கும்-
புனித யாத்ரீகர்கள்!

அவர்களிடம்-
சேர்ந்திட கூடாது-
சத்திய பிரசாரங்கள்"!

பரப்பவேண்டும்-
முஹம்மது (ஸல்)-அவர்கள்மீது
அவதூறுகள்!

சூட்டிடவேண்டும்-
"கெட்டபெயர்கள்"!

அவைகள்!
அவர்-
ஒரு ஜோசியர்!
பைத்தியகாரர்!

கவிஞர் !
சூனியக்காரர்!

சூனியக்காரர்-
தேர்ந்தெடுத்த-
பெயர்!

வலீத்-இது
தேர்ந்தெடுத்தவனின்-
பெயர்!

எதிரிகள்-
பொய் பிரசாரம்-
செய்தார்கள்!

முஹம்மது(ஸல்)-அவர்கள்
"உண்மையை கொண்டு-"
பிரச்சாரம் செய்தார்கள்!

ஆனால்-
வந்து சென்ற-
யாத்ரீகர்கள்!

"சத்தியத்தை"-
சுமந்து -
சென்றார்கள்!

இன்னொன்றுக்கு-
தயாரானார்கள்!
எதிரிகள்!

முஹம்மது (ஸல்)-அவர்களின்
பிரசாரத்தின்போது!

கூச்சலிடுவது!
எள்ளி நகையாடுவது!

சந்தேகத்தை கிளப்புவது!
மக்களை குழப்புவது!

இதிலும்-
தொடர்ந்தது-
"மாற்றமே"!

எதிரிகளுக்கு-
ஏமாற்றமே!

எதிரிகளின்-
மறு முடிவு!

துன்புறுத்திட-
துணிவு!

மின்னிடும்-
விண்மீன்களையும்!
வீசும் தென்றலையும்!

மறைக்க முடியுமா!?
அடைக்க முடியுமா!?

(தொடரும்....)



Tuesday, 30 July 2013

இஸ்லாமும்-நபிகள் நாயகமும்!(27)

மூன்றாண்டுகள்-
"ரகசியமாக அழைப்பு"-
நடந்தது!

அப்போதைக்கு-
வழிபாடாக-
தொழுகை மட்டுமே-
இருந்தது!

மிஃராஜ் எனும்-
விண்வெளி பயணத்திற்கு-
பிறகே-
ஐவேளை தொழுகை-
கடமையாக்கப்பட்டது!

இஸ்லாத்தை-
ஏற்றவர்கள்-
உள்ளத்தில்-
நல் எண்ணங்கள்-
விதைக்கப்பட்டது!

உள்ளங்கள்-
தூய்மையடைய-
ஆரம்பித்தது!

இறைவசனங்கள்-
முன் சென்ற-
நபிகளின்-
வாழ்கையை-
சொன்னது!

"சத்தியத்தால்"-
அவர்கள்பட்ட-
நிந்தனைகளை-
சொன்னது!

சோதனைகளையும்-
தாங்ககூடிய-
மனவலிமைக்கு-
வித்திட்டது!

இறை கட்டளை-
இறங்கியது!

"உங்களுடைய நெருங்கிய- உறவினர்களுக்கு-
அச்சமூட்டி எச்சரிக்கை -
செய்யுங்கள்!"-(26;214)
என்றது!

பெருமானார்(ஸல்)-
பகிரங்கபடுத்த-
தயாரானார்கள் !

தனது-
நெருங்கிய உறவுகளை-
கூட்டினார்கள்!

முதலில்-
எதிர்ப்பால்-
சொல்லவில்லை!

மறுமுறை-
சொல்லாமலில்லை!

சொல்லிவிட்டார்கள்-
உறவுகளிடம்-
ஓரிறை கொள்கையை!

நல்கினார்-
பெரிய தந்தை-
அபூதாலிப் ஆதரவை!

சிறியதந்தை
அபுலஹப் -
தெரிவித்தார்-
எதிர்ப்பை!

ஆதரித்தாலும்-
அபூதாலிப்-
விட்டு வரவில்லை-
அவரது-
"பழைய கொள்கையை"!

ஒரு நாள்-
காலை நேரம்!

ஒவ்வொரு கிளையாரையும்-
பெயரை சொல்லி-
அழைக்கும் சப்தம்!

மக்கள் -
கூடினார்கள்-
சஃபா மலையின்-
முன்பாக!

மலையில் -
இருந்தார்கள்-
முஹம்மது (ஸல்)-
மக்களை எதிர்பார்த்தவர்களாக!

இம்மலைக்கு பின்னால்-
ஒரு பெரும்படை-
உங்களை தாக்க வருவதாக-
சொன்னால் நம்புவீர்களா!?-என
கேட்டார்கள்-
மக்களை நோக்கி!

ஆம்! நம்புவோம்-
ஏனென்றால் -
நீங்கள் பொய்யுரைத்து கண்டதில்லை-என்றார்கள்
மக்கள் -
பெருமானாரை நோக்கி!

அப்பொழுது-
ஏகத்துவகொள்கையை-
சொன்னார்கள்!

மக்கள் பதிலேதும்-
சொல்லாமல்-
கலைந்தார்கள்!

அபுலஹப்-
வந்தான்!

நாள் முழுவதும்-
நாசம் உண்டாகட்டும்-என
சொல்லி சென்றான்!

அவன் மீது-
இறைவனே-
சாபத்தை விதித்தான்!

ஒருபக்கம்-
இஸ்லாத்திற்கு-
நெருக்கடி-
இருந்தது!

மறுபக்கம்-
நாலாதிசையிலும்-
பரவியது!

பிறப்பு -
இறப்பு-
யாராலும்-
கணிக்க முடியுமா!?

கிழக்கு -
வெளுப்பதைதான்-
தடுக்க முடியுமா!?

(தொடரும்...)







Monday, 29 July 2013

இஸ்லாமும்-நபிகள் நாயகமும்!(26)

மக்கா -
மக்கள்-
சிலைகளை-
வணங்கினார்கள்!

சிலை வணங்குவதற்கான-
ஆதாரங்கள்!

முன்னோர்கள்-
வணங்கினார்கள்!

அதனால் மட்டுமே-
வணங்கினார்கள்!

ஆனால்-
இஸ்லாம் கூறும்-
இறைவன்!

அவன்-
ஒருவனே!

இணை துணை-
இல்லாதவன்!

அன்பாளன்!
அருளாளன்!

மன்னிப்பவன்!
தண்டிப்பவன்!

அவன்-
யாராலும்-
பெறப்படவும் இல்லை!

யாரையும்-
பெறவும் இல்லை!

ஆட்சியாளர்களுக்கெல்லாம் -
ஆட்சியாளன்!

சூழ்ச்சியாளர்களுக்கெல்லாம்-
சூழ்ச்சியாளன்!

இஸ்லாமை யாரேனும்-
ஏற்றுகொள்வது !

"லா இலாஹ இல்லலாஹு-
முஹம்மதுர் ரசூலுல்லாஹி-என
மனமார ஏற்றுகொள்வது!

"வணக்கத்திற்குரியவன்-
அல்லாஹ்வை தவிர-
வேறுயாருமில்லை-
முஹம்மது(ஸல்) இறை தூதர்-
தமிழாக்கம் இது!

இஸ்லாமிய-
கொள்கை!

புரையோடிய-
அனாச்சாரங்களை-
எரித்திடும்-
நெருப்பின் வெட்கை!

சிலைகளை வைத்து-
சம்பாதித்தவர்கள்!

அதனால்-
தங்களை தாங்களே-
உயர்ந்தவர்கள்-என
எண்ணியவர்கள்!

வர்க்கபேதங்கள்!
வர்ணபேதங்கள்!

ஆண்டான்-
அடிமை முறைகள்!

பிறப்பால்-
உயர்தவர்கள்-என
எண்ணியவர்கள்!

இப்படியான-
விசயங்களை-
எதிர்த்தது!

இன்றும்-
என்றும்-
ஆணிவேரையே-
பிடுங்குவது!

இஸ்லாம்தான் அது!

அதனால்-
இந்த -
ஏகத்துவ கொள்கையை-
முஹம்மது(ஸல்)-
மறைமுகமாக எத்திவைத்தார்கள்!

முஹம்மது(ஸல்)-
துணைவியார் கதீஜா (ரலி)-
அபூபக்ர் (ரலி)-உள்பட
எட்டு பேர்கள் இணைந்தார்கள்!

கொஞ்சம் கொஞ்சமாக-
நூற்றி முப்பது  பேர்கள்-
ஆனார்கள்!

மறைமுகமாக-
செய்தது!

பகிரங்கபடுத்த-
நேர்ந்தது!

(தொடரும்....)

// இறைவனை தமிழில் கடவுள் என்றும் பகவான் என்றும் ஆங்கிலத்தில் god  என்றும் அழைக்கிறோமோ..அதுபோலவே அல்லாஹ் என்பது கடவுளை குறிக்கும் அரபு சொல்லாகும்.
அது முஸ்லிம்களின் தனிபட்ட கடவுள் பெயர் என சொல்லமுடியாது.//





Sunday, 28 July 2013

இஸ்லாமும்-நபிகள் நாயகமும்!(25)

"வரகா  "-அவர்களின்
வீட்டிற்கு சென்றார்கள்!

முஹம்மது(ஸல்)-அவர்கள்
நடந்தவற்றை சொன்னார்கள்!

"வரகா"-
பதில் சொன்னார்கள்!

வந்தவர்-
வானவர் ஜிப்ரீல்-
ஆவார்!

மூசா (அலை)-
அவர்களை-
சந்தித்ததும்-
அவரே ஆவார்!

உங்களை-
 ஊரை விட்டு-
மக்கள் வெளியேற்றுவார்கள்!-
வரகா சொன்னார்கள்!

"என்னை நேசிக்கும்-
இம்மக்கள் -
என்னை -
வெளியேற்றுவார்களா !?-
கேட்டார்கள்!

வரகா-
ஆமோதித்தார்கள்!

இளைஞனாக -
நான் -
அப்போது இருந்தால் -
உங்களுக்கு-
உதவுவேனே..!-என
அங்கலாய்த்தார்கள்!

சில காலத்திலேயே-
வரகா மரணித்துவிட்டார்கள்!

இறை செய்தி(வஹ்யி)-
வர தாமதமானது!

முஹம்மது(ஸல்)-அவர்கள்
மனமோ-
எதிர்பார்த்தது!

மலைக்கு மேல்-
செல்வார்கள்!

விழுந்திட-
முனைவார்கள்!

ஜிப்ரீல்(அலை)-
நீங்கள் இறை தூதர்தான்-என
சொல்லி மறைவார்கள்!

நபிகளார் -
திரும்பிடுவார்கள்!

ஒரு முறை-
நபிகளாரை-
கூப்பிடும்-
சப்தம்!

நபிகளார்-(முஹம்மது-ஸல்)
பார்கிறார்கள்-
சுற்றும் முற்றும்!

அண்ணாந்து-
பார்க்கிறார்கள்!

மேலே-
ஜிப்ரீல்(அலை)-ஐ
பார்க்கிறார்கள்!

நடுக்கத்தில்-
கதீஜா (ரலி)-அவர்களிடம்
போர்த்திட சொல்கிறார்கள்!

குளிர்ந்த நீரை-
ஊற்ற சொல்கிறார்கள்!

அப்போது-
இறைவசனங்கள்-
அருளப்பட்டது!

அது-
இப்படியாக-
இருந்தது!

"போர்வை போர்த்திகொண்டிருப்போரே..!
எழுவீராக!

மனிதர்களுக்கு -
அச்சமூட்டி எச்சரிப்பீராக.....!"(74:1-5)

இனி-
உறக்கம் கொள்ள-
வேலையில்லை!

இறைவனின் பணி-
படுத்து உறங்க இல்லை!

லட்சியபாதை!
சத்தியப்பாதை!

புறப்பட்டார்கள்-
மக்களை -
நன்மையின் பக்கம்-
அழைக்க!

மக்களோ-
ஆயத்தம் ஆனார்கள்-
கொடுமைகளை-
இழைக்க!

(தொடரும்...)

// இறை செய்தி வந்த வகைகள்;
உண்மையான  கனவு.
நபி (ஸல்) உள்ளத்தில் இறைசெய்தியை போட்டு விடுவது.
ஆடவர் உருவில் வானவர் தெரியபடுத்துவது.//

/நீளம் கருதி சுருக்கி கொண்டேன்//





Saturday, 27 July 2013

இஸ்லாமும்-நபிகள் நாயகமும்! (24)

முஹம்மது (ஸல்)-அவர்கள்
சமூக அவலங்களால் -
அவஸ்தைக்கு உள்ளானார்கள் !

தவறு செய்வதை கண்டு-
தத்தளித்தார்கள்!

சிறுவயதிலிருந்து-
சிலைகளை வணங்கியதில்லை!

சிலைகளின் பெயரால்-
அறுக்கபட்டவைகளை-
உண்டதில்லை!

தவறான விசயத்திலிருந்து-
தவிர்ந்திருந்தார்கள்!

தவறிடாமல்-
இறைவனாலும்-
பாதுகாக்கபட்டார்கள்!

மனம்-
தனிமையை-
தேடியது!

ஒரு-
தெளிவையும்-
தேடியது!

அதற்காக-
"ஹீரா "குகையில்-
தனித்திருப்பார்கள்!

தியானிதிருப்பார்கள்!

வழிபட்டுகொண்டிருப்பார்கள்!

நாற்பது வயது-
ஆனது!

பல இறைதூதர்களுக்கு-
நடந்தது!

நபித்துவம்-
அடைவது!

முஹம்மது(ஸல்)-
அவர்களுக்கும்-
நேர்ந்தது!

முஹம்மது(ஸல்)-
திடுக்கிட்டார்கள்!

வானவர்-
ஜிப்ரீல் (அலை)-
வருகை புரிந்தார்கள்!

வானவர்-
ஜிப்ரீல்(அலை)-
ஓதுவீராக..!-என
சொன்னார்கள்!

முஹம்மது(ஸல்)-அவர்கள்-
ஓத தெரிந்தவனில்லையே..!-
என்றார்கள்!

வானவர்-
இறுக்க கட்டியணைத்து-
ஓத சொன்னார்கள்!

மூன்று முறை-
அதையே-
வானவர்-
சொன்னார்கள்!

மீண்டும் -
முஹம்மது(ஸல்)-
சொன்னதையே-
சொன்னார்கள்!

'' அனைத்தையும் படைத்த-
உங்கள் இறைவனின்பெயரால்-
ஓதுவீராக...!(96:1-6)
வானவர் சொன்னார்கள்!

இவ்வசனத்தை -
சுமந்தவர்களாக-
முஹம்மது(ஸல்)-
நடுக்கத்துடன்-
வீடு  சேர்ந்தார்கள் !

போர்வையை போர்த்துங்கள்!
போர்வையை போர்த்துங்கள்!-
என்றார்கள்!

நடுக்கம் -
தீர்ந்தபின் -
கதீஜா (ரலி)-
விசாரித்தார்கள்!

முஹம்மது(ஸல்)-
நடந்தவற்றை-
சொன்னார்கள்!

"வராகா" எனும்-
பெரியவர்!

முஹம்மது(ஸல்)-
அவர்களின்-
உறவினர்!

வேதங்கள்-
படித்தவர்!

"ஹிப்ரு " மொழி-
அறிந்தவர் !

அவரிடம்-
சென்றார்கள்!

அவர்-
கேட்டார்!

சொன்னார்!

உண்மையையும்!
அதிர்ச்சியையும்!

(தொடரும்....!)

// வானவர் ஜிப்ரீல் மூலமாக வந்த வசனங்கள்தான் குர் ஆன் எனும் வேதமாகும்.இது முழுக்க முழுக்க
இறைவனின் வசனங்களாகும்.
முஹம்மது(ஸல்)அவர்கள் சொல்ல சொல்ல தோழர்கள் தோல்கள் மரக்கட்டைகள் இவைகளில் எழுதிவைத்து சேர்த்ததே.குர் ஆன்
ஆகும்.விருப்பம் உள்ளவர்கள் வாங்கி படித்து பாருங்கள்.தமிழாக்கமும் உள்ளது.
படித்து பார்த்தால் இலகுவாக புரிந்திடும்.//

// ஹதீஸ் எனும் நபி மொழியே முஹம்மது(ஸல்)அவர்கள் சொன்னவைகள் -செய்தவைகளாகும்.//

Friday, 26 July 2013

இஸ்லாமும்-நபிகள் நாயகமும்!(23)

எப்படிபட்டவர்-
முஹம்மது (ஸல்)-
அவர்கள்!

கேட்டால் சொல்வார்கள்-
மக்கத்து மக்கள்!

நல்லவர்!
நியாயமானவர்!

நாணயமானவர்!
நேர்மையானவர்!

உண்மையானவர்!
நம்பிக்கையானவர்!

இப்படியாக-
சொல்வார்கள்!

அம்மக்களே-
பிறகு-
"இப்படியும்"-
சொன்னார்கள்!

பைத்தியகாரர்!
சூனியக்காரர்!

உறவுகளை -
பிரிக்கிறவர்!

வியாக்கியானம்-
பேசுபவர்!

திட்டமட்டும் இல்லை!

"தீர்க்கவும்"-
முடிவு செய்யாமல் இல்லை!

தீட்டிய -
வாள்கள்-
குறிவைத்தது!

குறிவைக்கவே-
ஈட்டிகள்-
தீட்டப்பட்டது!

கற்களும் -
சொற்களும்-
பதம் பார்த்தது!

நாற்பது வயதிற்கு -
முன்-
முஹம்மது(ஸல்)-ஐ
நேசித்தவர்கள்!

அதன் பிறகு-
ஏன் !?-
விஷம் கொண்டார்கள்!

முஹம்மது(ஸல்) அவர்களுக்கு-
என்ன நேர்ந்தது!

அதற்காக-
இம்மக்களுக்கு-
என்ன!?-
நேர்ந்தது!

முஹம்மது (ஸல்)-
வாழ்ந்தது-
அறுபத்தி மூன்று-
ஆண்டுகள்!

அதில் கழிந்தது-
நாற்பது ஆண்டுகள்!

இன்னும்-
இருபத்தி மூன்று ஆண்டுகள்!

உலகில் இதுவரைக்கும்-
தொடரும் விமர்சனங்கள்!

என்ன!?-
சொன்னார்கள்!

அவர்களை-
பாவிகள்-
என்னவெல்லாம் -
செய்தார்கள்!

தொடருங்கள்!

(தொடரும்...)

Thursday, 25 July 2013

இஸ்லாமும்-நபிகள் நாயகமும்!(22)

மக்காவில்-
கதீஜா எனும்-
பெண்மணி!

அவர்-
செல்வமும்-
மதிப்பும் மிக்க-
பெண்மணி!

அவர்-
வியாபாரம்-
செய்து வந்தார்!

சில ஆட்களையும்-
வேலைக்கு பணித்திருந்தார்!

கிடைக்கும் லாபத்தில்-
விற்றவருக்கும்-
பகிர்ந்தளிப்பார்!

முஹம்மது (ஸல்)அவர்களின் -
நேர்மையை அறிந்திருந்தார்!

ஒரு முறை-
முஹம்மது(ஸல்) அவர்களை-
கூப்பிட்டு வரசொன்னார்!

கதீஜா -
லாபத்தில் பங்குண்டு-என
சொன்னார்!

முஹம்மது (ஸல்)-
வியாபாரத்திற்காக-
ஷாம் தேசம் சென்றார்!

அவர்களுடன்-
கதீஜாவின்-
அடிமை பெண் மைசராவும்-
சென்றார்!

லாபத்தோடு-
முஹம்மது (ஸல்)-
நாடு திரும்பினார்!

கதீஜா-
மனமகிழ்ந்தார்!

பங்கு கொடுத்தார்!

தன் பங்கு-
லாபத்தால்-
மகிழ்ந்தார்!

கதீஜா அவர்கள்-
ஒரு விதவை பெண்!

கதீஜாவின்-
"முடிவுக்காக"-
தலைவர்கள்-
காத்திருந்தார்கள்-
அவர்களின் முன்!

மைசாரா-
முஹம்மது(ஸல்)-
அவர்களின்-
நற்குணங்களை -
கூறிகொண்டிருக்க!

தன் வாழ்க்கைத்துணை -
முஹம்மது (ஸல்)-
அவர்களே -என்கிற
எண்ணம் மேலோங்க!

தன் எண்ணத்தை-
தோழி நபீசாவிடம்-
சொல்லி விடுகிறார்!

முஹம்மது (ஸல்)அவர்களும் -
சம்மதிக்கிறார்!

பெரியவர்கள் கூடி-
பேசி முடிக்கிறார்கள்!

திருமணத்தையும்-
நடத்தி முடிக்கிறார்கள்!

திருமணத்தின்போது-
கதீஜா  அவர்களுக்கு-
நாற்பது வயது!

முஹம்மது (ஸல்)அவர்களுக்கு-
இருபத்தைந்து வயது!

அத்தம்பதிகளுக்கு-
ஆறு மக்கள்மார்கள்!

நான்கு பெண்கள்!
இரண்டு ஆண்கள்!

பெண்மக்கள் -
வாழ்ந்தார்கள்!

ஆண்மக்கள்-
குழந்தை பருவத்திலேயே-
மரணித்தார்கள்!

சத்தியத்தை-
சொல்ல வந்த-
உத்தமருக்கே-
எத்தனை வேதனை!?

நம் போன்ற -
சாமானியருக்கு-
வராதாது-
சாத்தியமா!?
சோதனை!?

(தொடரும்....)