Wednesday 19 September 2012

காதலெனும் தேர்வில்...(4)

திரும்பி-
 திரும்பி-
பார்த்தவளை!

தீர்மானித்து விட்டேன்-
திரும்ப -
பார்க்கவே -
கூடாது-
அவளை!

"கொடூரம்" நடக்காமல்-
போனதால்!

நடமாட -
அவளை விட்டதால்!

பிரிந்த காரணத்தை-
அறியலாம்-
ஒரு நாள்!

அவளின்-
நியாயத்தையோ!

எனது-
தவறையோ!?

நாடாளு மன்ற-
கூட்ட தொடரை-
நடக்க விடாமல்-
தடுத்தது-
எதிர் கட்சி!

அதனால்-
லாபம் அடைந்தது-
ஆளும் கட்சி!

எதிர் கட்சிக்கு-
ஆளும் கட்சி-
பதில் சொல்லவில்லை!

எதிர் கட்சியை-
எதிர் கேள்வி கேட்கவும்-
ஆளும் கட்சிக்கு-
வாய்ப்பில்லை!

இவர்களை நம்பி-
ஏமாறும் மக்களின்-
நிலையோ-
கேவலப்பட்ட நிலை!

கோட்டை நீயும்-
தாண்ட கூடாது-
நானும் தாண்ட-
மாட்டேன்-
பேச்சி பேச்சாத்தான்-
இருக்கணும்-வடிவேலு
காமெடி!

நீயும் பேசகூடாது-
நானும் பேசமாட்டேன்-
இரண்டு கட்சியுமே-
தப்பிக்கலாம்-இது
அரசியலின் "அசிங்க-"
நெடி!

நான்-
அப்பேதையை-
கொன்று இருந்தால்!

என் கோபத்தை-
தீர்க்க அதுவே-
வழி என-
வாதிட்டிருந்தால்!

இது-
தனி மனித உரிமை-என
உலகம் போற்றுமா!?

அவள்-
 உறவுகள்தான்-
வேடிக்கை -
பார்க்குமா!?

அது போலதான்-
உயிரினும் மேலாக-
நேசிப்பவரை-
உபயோகமில்லாமல்-
அசிங்கபடுத்தி விட்டு!

கோடானு கோடி-
உள்ளங்களை-
ரணமாக்கி விட்டு!

இது-
கருத்து சுதந்திரம்-என்பது
முறையா!?

இதுதான்-
நாகரீகத்தின்-
நெறியா!?

எவ்வளவு முடியுமோ-
அவ்வளவு இழிவுபடுத்தி விட்டு-
"சுதந்திரம்" என்பது-
முறையா!?

ஆரோக்கியமான-
விமர்சனங்களும்-
விவாதங்களும்!-
வரவேற்கத்தக்கது!

அறிவுக்கும்-
மனித மாண்புக்கும்-
பொருத்தமானது!

மாபாதக செயலின்-
எல்லைக்கு சென்றேன்!

நல்ல வேளை-
திரும்பி வந்தேன்!

என்னை -
தடுத்தது-
குட்டி நாய்-
பால் குடிக்க-
முயன்றது!

"போக "வேண்டிய-
வழியை காட்டியது-
பிஞ்சு குழந்தை-
கபடமில்லாமல்-
சிரித்தது!

பேருந்தில் -
சன்னலோரத்தில்-
இருந்தபடி!

சில்லென்ற காற்றை-
ரசித்தபடி!

இனியாவது-
மனிதனாக -
வாழனும் -என
நினைத்தபடி!

"காதல் தேர்வில்"-
தோல்வி கண்டேன்!

வாழ்க்கை பாதையை-
தெரிந்து கொண்டேன்....!!

(முற்றும்)

(குறிப்பு-கொலை முயற்சி கதைக்காக கற்பனையே-
முன்னேயே குறிப்பிட்டு இருந்தால் சுவராஸ்யம் குறைந்திடும் என்பதால்-
கடைசியில் எழுதி விட்டேன்)



11 comments:

  1. நன்றாக முடித்துள்ளீர்கள்... வித்தியாசமான முயற்சி... வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  2. அருமை............

    ReplyDelete
  3. மிக அருமையான கவிதை ......பாராட்டுகள் நண்பரே..

    நன்றி,
    பிரியா
    http://www.ezedcal.com/ta (வலைப்பூ உரிமையாளர்களுக்கான தலையங்க அட்டவணை உருவாக்க உதவும் வலைதாளம் பயன்படுத்தி பயன்பெறுங்கள்)

    ReplyDelete
  4. அதற்குள் முடித்துவிட்டீர்களே....ஆனால் முடிவு நன்றாகத்தான் இருந்தது!

    ReplyDelete
  5. மிக அருமை....மக்கள் படு பாட்டை அழகாக சொல்லி இருக்கிறிர்கள்...முடிவு மிக மிக அருமை...

    நன்றி,
    மலர்
    http://www.tamilcomedyworld.com (100% காமெடி மட்டும் : தமிழ் காமெடி, டிவி நிகழ்சிகள், திரைப்படங்கள்)

    ReplyDelete
  6. கடைசியில் சொல்லாதவரைக்கும் அனுபவப் பகிர்வு என நினைத்திருந்தேன்
    பல நெத்தியடி வரிகளுடன் அழகான முடிவு

    ReplyDelete
  7. இன்னும் கொஞ்சம் சொல்லியிருக்கலாமோ என்றிருக்கிறது சீனி.ஆனாலும் நல்ல முயற்சி.வாழ்த்துகள் !

    ReplyDelete