Wednesday 5 February 2014

மூன்றாம் சேர மன்னன் !! (20) {1100 வது பதிவு}

ஓலைச்சுவடி-
ஒளித்து வைத்திருந்தது!

சமஸ்கிருத மொழியையும்!
ரகசிய குறியீடுகளையும்!

தெரியவில்லை-
சேதுபத்திரருக்கு!

சென்றது-
மன்னரின் கைகளுக்கு!

''இண்ணும் நடத்த வேண்டிய-
கொலைகள்!

துரிதமாக முடிக்கவேண்டிய-
வேலைகள்!

அதனூடே-
ராஜபீடம்!
தாமரை பூ!
சொர்க்க வாசல்!

இப்படியாக இருந்தது!
ஓலைச்சுவடியில்!

சில தகவல்கள்-
அகபடாதிருந்தது-
மன்னர் சிந்தனைக்குள்!

பார்க்கிறார் அரசர்!
மறுபடியும்!

மேலும் உண்டானது-
குழப்பம்!

அரசர் இரவில்-
தூங்கியதாக தெரியவில்லை!

''அசந்த'' மெய்க்காவலர்கள்-
விழுத்திடும்போது-
மன்னர் படுக்கையில் இல்லை!

பதறிய காவலர்கள்-
தேடினார்கள்-
அரண்மனையெங்கும்!

தோட்டத்தில்-
சப்தம்!

அரபிகளோடு-
மன்னர்-
ஆலோசனை கூட்டம்!

காவலர்களுக்கு-
மன்னர் உத்தரவு-
''சென்று தயாராகவும்!''

நேரம் கழிகிறது!

முக்கிய அமைச்சர்களுடன்-
விசாரணை நடக்க இருக்கிறது!

வேணு அழைத்து வரப்பட்டார்!

அதட்டினால் -
அழும் குழந்தையை போல-
உண்மைகளை கொட்டினார்!

பிரபுவே!
கருணை காட்டுங்கள்!

இனி-
சொல்வதெல்லாம் உண்மைகள்!

''அரசே!
நான் -
இதற்கு முன் ஆண்ட-
மார்த்தாண்ட வர்மனின் உதவியாளன்!

பின்னாளில்-
ராஜ குருவால் ஒற்றர்படைக்கு சேர்க்கபட்டேன்!

ராஜ குருவிற்கும்-
மார்த்தாண்ட வர்மருக்கும்-
செய்திகளை பரிமாரியுள்ளேன்!

மன்னர்-
''சமீபத்தில் சொன்ன செய்தி!?

வேணு-
''மன்னர் ''மாயமாவார்''-
சீக்கிரத்தில்-
ஆட்சியில் அமர்வாய்-எனும் செய்தி!

மன்னர்-
''மார்த்தாண்டரிடம் -
ஏதேனும் படை உள்ளது!?''

வேணு-
''சிறு படை உள்ளது.!''

மன்னர்-
''எப்போது-
என்னை ''முடிக்க ''திட்டம்!'?

வேணு-
''உங்கள் பிறந்த நாளன்று..!''

அத்தனையும்-
தவடு பொடியானது-
அரபிகள் வரவால் -
அன்று!

அரபிக்களை வெளியேற்ற-
சூழ்ச்சி செய்தோம்!

கிரீட விவகாரத்தால்-
தூக்கு கயிற்றை -
எதிர்நோக்குகிறோம்!

வேணு-
கலக்கத்துடனும்-
கண்ணீருடனும்-
சொல்லி முடித்தார்!

சிறை சலுகைகளுக்கு-
அனுமதித்தார்-
மன்னர்!

பிறகு-
சீடர்கள் வந்தார்கள்!

விசாரணையை-
எதிர் நோக்கினார்கள்!

ஓலைச்சுவடு கொடுத்து-
விளக்கம் என்ன!?-
கேட்கபட்டது!

''அரசே!
எங்களையும் கொல்ல -
சொல்லியுள்ளது!

மடாலயத்தில்-
ரகசிய வழிகளுள்ளது!''

சீடர்கள் சொன்னார்கள்!

தளபதியார்-
''எங்கெல்லாம் -
ரகசிய வழிகள் உள்ளது!''!?

பதிலை எதிர்பார்த்து-
கேட்டதும்-
தளபதியார் அரண்டு போனார்!

பதிலாக வந்தது-
ராஜ குரு -
இப்போது இருக்கும் அறையும்..!!''-
என்று!

(தொடரும்...!!)






7 comments:

  1. அடே.. அவருக்கும் ரகசிய வழியா...? சுவாரஸ்யம் தொடர்கிறது...

    ReplyDelete
  2. 1100 பதிவு - மலைப்பாக இருக்கிறது...

    எனது இனிய நண்பரே... மென்மேலும் சிறக்க வாழத்துக்கள்...

    ReplyDelete
  3. 1100 வது பதிவுக்கு வாழ்த்துகள்..!

    ReplyDelete
  4. விறுவிறுப்பு கூடுகிறது! தொடர்கிறேன்! நன்றி!

    ReplyDelete
  5. விறுவிறுப்பு கூடுகிறது! தொடர்கிறேன்! நன்றி!

    ReplyDelete
  6. ராஜகுரு தப்பிச்சுட்டாரா...?

    ReplyDelete
  7. ரகசிய வழிகள்..... ம்ம்ம். என்ன நடந்தது.... தொடர்கிறேன்.

    1100- பதிவுகள் - மனமார்ந்த வாழ்த்துகள் சீனி.

    ReplyDelete