Tuesday 26 June 2012

கர்ப்பவதி! $



மாத தேதி-
"தள்ளி "போனால்-
மங்கை அவள்-
மகிழ்வும்-
மயக்கமும் -
அடைவாள்!

பரிசோதனைக்காக -
அழைத்து-
செல்லபடுவாள்!

மழலை மலரும்வரை-
மருத்துவமனையே-
மறு வீடாகும்!

மருத்துவர்கள்-
ஆலோசனையோ-
கொஞ்சம்!

சுற்றத்தார்-
யோசனைகளோ-
அதனையே மிஞ்சும்!

மலரிலும்-
மெல்லியது-
பெண்மை!

மெல்லியதிலும்
மென்மை-
தாய்மை!

தாயை மறந்தவன்-
தரம் கெட்டவன்-
என்பதே-
பேருண்மை!

கர்ப்பிணியை கண்டால்-
கல் நெஞ்சிலும்-
ஈரம் வருமடா!

கர்ப்பிணி வயிற்றை
கிழித்து -
சிசுவை கொளுத்தியது-
ஏனடா!?

மத வெறியன்-
அடுத்த பிரதம-
வேட்பாளராம்!!

ஆனாலும்-
இது- மத சார்பற்ற-
நாடாம்!!

நாட்கள் ஓட-
ஓட!

உயிரணு ஆரம்பிக்கும்-
உருவமாக -
மாற!

துடிக்கும்-
குழந்தை-
வயிற்றினுள்ளே!

இனிமை தரும்-
தாய்மை அடைந்தவளின்-
மனதினிலே!

கேலி பேசுவார்கள்!

பத்து மாதத்தில்-
பெண்ணின் "சுமை"-
குறைந்திடும்!

ஆணுடைய தொந்தி-
வயிறு எப்போது-
மாறிடும்!!?

பெண் வயிறு-
உயிரின் உறைவிடம்!

ஆண் வயிறு-
கொழுப்பின் இருப்பிடம்!

இதுவே-
என் வாதம்!

ஆண்களுக்கோ-
"ஆம்பிள்ளை " என-
நிருபித்து விட்டதாக-
நினைப்பு!

தாய்மை அடைந்தவளுக்கோ-
ஏறி இறங்கும்-
நாடி துடிப்பு!

சொந்தங்களில்-
சூடு பிடிக்கும்-
விவாதம்-
ஆண் பிள்ளையா!?
பெண் பிள்ளையா!?

எக்குழந்தை. -
ஆனாலும்-
அக்குழந்தை நம்-
வம்சங்களின்-
கிளை இல்லையா....!?



18 comments:

  1. நல்ல இருக்கு

    ஜோசப்
    http://wwww.ezedcal.com

    ReplyDelete
    Replies
    1. josap!

      muthal varavukkum karuthukkum-
      mikka nantri!

      Delete
  2. //பெண் வயிறு-
    உயிரின் உறைவிடம்!

    ஆண் வயிறு-
    கொழுப்பின் இருப்பிடம்!
    //

    எதார்த்தமான வரிகள் சீனி

    ReplyDelete
  3. அருமையான கவிதை.!

    ReplyDelete
  4. தாய்
    உண்மையை உரைத்தீர்

    ReplyDelete
  5. ஒரு தாய் தன் கரு சுமக்கையில்

    அதன் பாலினம் பற்றிய கவலை இருக்காது

    என்பதை மிகவும் அருமையாக சொன்னீர்கள் நண்பரே..

    ReplyDelete
  6. நல்லதொரு கற்பனையும் சிந்தனையும் நண்பா....
    கற்பனை என்பதற்கு இதில் இடமில்லை என்றுதான் கூற வேண்டும்
    அழகான கவி...வாழ்த்துக்கள்

    ReplyDelete
  7. உண்மை சொல்லும் வரிகள் உணருவார் உண்டோ?

    ReplyDelete
  8. இடையில் மோடிக்கு அடித்த வார்த்தைகள் அருமை.தொடருங்கள்..தொடர்கிறோம்..

    ReplyDelete