Tuesday 27 November 2012

வெளிச்சங்கள்" (2)

"கச்சையை"-
கட்டி விட்டு-
கவர்ச்சி-
காட்டுபவர்கள்!

அதை வைத்து-
"கல்லா"-
கட்டியவர்கள்!

அவர்களின்-
பங்கிற்கு-
கட்டவிழ்த்து-
விடுவார்கள்!

தீவிரவாதி-என
புளுகு மூட்டைகள்!

சிலர்-
வாதிடுகிறார்கள்!

படத்தை-
பார்த்து-
யாராவது-
முடிவெடுப்பார்களா!?-
என்கிறார்கள்!

அவர்களிடம்-
சில-
கேள்விகள்!

சில குழந்தைகள்-
மாடியில் இருந்து -
விழவில்லையா!?

தன்னை-
"சக்திமான்"-
காப்பாற்றுவார்-என
நம்பவில்லையா!?

அது-
அத்தொடரின்-
விளைவில்லையா!?

"கள்ள தொடர்புகளுக்கு"-
"சீரியல்கள்"-
காரணமில்லையா!?

இதை-
மனோவியலாளர்கள் -
சொல்லவில்லையா!?

வளரும்போது-
குழந்தைகள்-
வன்முறையாளனாக-
மாறுவதற்கு!?

அவர்கள்-
காணும்-
வன்முறை காட்சிகளும்-
காரணம்-
அதற்க்கு!!

ஆனால்-
அச்சமூக-
மக்கள் மட்டுமா!?-
விதிவிலக்கு!?

பெண்களை-
கேவலபடுத்தியதாக-
பெண்கள் அமைப்புகள்-
போராடுவார்கள்!

அதை -
எல்லோரும்-
அவர்கள்-
உரிமை-
என்பார்கள்!

சமூகத்தை பற்றிய-
 தவறான காட்சிகளை-
நீக்க சொன்னால்-
கருத்து சுதந்திரத்துக்கு-
எதிரானவர்கள்-
என்கிறார்கள்!

உயிருக்கும்-
மேலாக நேசிக்கபடுபவரை-
அசிங்க படுத்திய-
திரை படத்திற்கு-
அறப்போராட்டம்-
நடத்தப்பட்டது!

போக்குவரத்துக்கு-
இடையூறு என-
தலையங்கங்கள்-
தீட்டப்பட்டது!

வருஷா வருஷம்-
குருபூஜைகளின்போது-
விழும்-
சாதிய கொலைகள்!

இவ்வருடம் மட்டும்-
நூற்றி ஒன்பது கொலைகள்-என
பத்திரிகை-
செய்திகள்!

ஏன்-
மறந்தது-
இதை பற்றிய -
எழுதிட-
பேனாக்கள்!

ஏன் இந்த-
இரட்டை வித-
பார்வைகள்..!!?

(குமுறல்கள் தொடரும்....)






8 comments:

  1. ஆதங்கம் ஆர்ப்பரிக்கிறது கவிதையில்...
    குமுறல்கள் தான் நம் நிலையோ...?!!!

    ReplyDelete
  2. இவ்வளவு நிகழ்வுகளும் என்று மாறப் போகிறதோ...?

    ReplyDelete
  3. அழகான அர்த்தமுள்ள ஆதங்கம்

    ReplyDelete
  4. வளரும்போது-
    குழந்தைகள்-
    வன்முறையாளனாக-
    மாறுவதற்கு!?

    அவர்கள்-
    காணும்-
    வன்முறை காட்சிகளும்-
    காரணம்-
    அதற்கு!!
    // உண்மைதான்! மாற்றம் வரும் என நம்புவோம்!

    ReplyDelete