Wednesday 14 November 2012

யாருக்கேனும்.....

விறகு ஆவதற்கு-
முன்-
நிழல் தருகிறது-
மரங்கள்!

காய்வதற்கு-
முன்-
மணம் வீசுகிறது-
மல்லிகைகள்!

சருகாவதற்க்கு-
முன்-
பசுமை தருகிறது-
இலைகள்!

புதைவதற்க்கு-
முன்-
பிற உயிர்களை-
வாழ வழி செய்கிறது-
மழை துளிகள்!

உப்பில் -
சேர்வதற்கு-
முன்-
நிலத்தை-
செழிக்க செய்கிறது-
நதிகள்!

கரை சேர்வதற்கு-
முன்பு வரை-
"சுமைகளை-"
சுமக்கிறது-
கட்டு மரங்கள்!

சாம்பலாவதற்க்கு-
முன்-
பழைய கஞ்சிக்கு-
ருசி தருகிறது-
வாளமீன் -
கருவாடுகள்!

"அத்தனையும்"-
அழிவதற்குள்-
தருகிறது-
பயன்பாடுகள்!

மானுடர்களே!
நாம் "மறைவதற்குள்"-
யாருக்கேனும்-
உண்டா!?-
பிரயோசனங்கள்!

இருந்தால்-
சிறப்பு!

இல்லைஎன்றால்-
உயிருடன்-
"மரிப்பு"!


8 comments:

  1. வளமான உண்மைகள்.
    எடுத்து உரைத்த விதம் அருமை !

    ReplyDelete
  2. மிக மிக சரியாக எழுதி இருக்கீங்க......அருமையான வரிகள்....உங்கள் பகிர்வுக்கு மிக்க நன்றி..

    நன்றி,
    மலர்
    http//www.ezedcal.com/ta(வலைப்பூ உரிமையாளர்களுக்கான தலையங்க அட்டவணை உருவாக்க உதவும் வலைதாளம் பயன்படுத்தி பயன்பெறுங்கள்)

    ReplyDelete
  3. சிறப்பாக முடித்துள்ளீர்கள்... சொன்ன விதம் அருமை...

    ReplyDelete
  4. நல்ல கேள்வி! பயனுள்ளதாய் இருப்போம்! மனிதனாய் மரிப்போம்! நன்றி நண்பரே!

    ReplyDelete
  5. "அத்தனையும்"-
    அழிவதற்குள்-
    தருகிறது-
    பயன்பாடுகள்!

    //அருமை என்னுடைய வலைப்பூவில் நலம் தருவாய் நரசிம்மா மர்றும் வாழ வை கவிதைகள்! தங்களின் தகவலுக்கு! நன்றி!

    ReplyDelete
  6. அழகான வார்த்தைக் கோர்வைகள் நண்பரே...
    வாழ்த்துக்கள்..

    ReplyDelete
  7. பிரயோசனமில்லாத உடல்தான்.முடிந்தால் வாழும்போதோ பிறகோ தானங்கள் செய்ய இப்போ வழிமுறைகள் இருக்கு.இரத்ததானம்,கண்தானம் செய்வோம் !

    ReplyDelete
  8. சிறப்பான கவிதை. வாழும்போது யாருக்காவது பயன்பட வேண்டும் இல்லையெனில் வாழ்வதில் இல்லை அர்த்தம்!

    ReplyDelete