Tuesday 6 November 2012

என்னை விடு....

தாங்கி விடு-
இல்லை-
தாக்கி விடு!

சொல்லி விடு-
இல்லை-
கொள்ளி இடு!

அள்ளி கொடு-
இல்லை-
அள்ள விடு!

மேய விடு!
இல்லை-
விரட்டி விடு!

அண்ட விடு!
இல்லை-
சண்டை இடு!

படித்து விடு-
இல்லை-
திருப்பி கொடுத்து-
விடு!

எரிந்து விடு!
இல்லை-
எரிய விடு!

சென்று விடு!
இல்லை-
வழி விடு!

என்னவளே!
நீதானே!
பார்வையால்-
கொளுத்தி-
போட்டாய்!

ஏன்?-
பதில் தராமல்-
கொளுத்தியதை-
அணைக்க -
மறுக்கிறாய்!

நீ தானே!-
புன்னகையை-
பொசுக்கென-
சிந்தி சென்றாய்!

என்னை-
பூவில் திரவம்-
ஊற்றியது போல்-
பொசுங்கிட-
செய்தாய்!

உன்-
மௌனம்-
இருக்கிறது-
கிணற்றில்-
விழுந்த-
கல்லாட்டமாய்!

என் -
முயற்சி-
தொடர்கிறது-
கூடன்குள-
மக்களின்-
போராட்டமாய்!

ஒன்று-
வாழ -
பதில்-
சொல்லு!

இல்லை-
மறக்க-
வழி-
சொல்லு!



11 comments:

  1. ம்ம்ம்ம்ம்ம் அருமை........

    ReplyDelete
  2. humm nallaathaan irukku seeni kavithai

    ReplyDelete
  3. கவிதை மிக அருமை......பகிர்வுக்கு மிக்க நன்றி .....

    நன்றி,
    மலர்
    http//www.ezedcal.com/ta(வலைப்பூ உரிமையாளர்களுக்கான தலையங்க அட்டவணை உருவாக்க உதவும் வலைதாளம் பயன்படுத்தி பயன்பெறுங்கள்)

    ReplyDelete
  4. முகாரி ராகம் .

    ReplyDelete