Thursday 7 June 2012

உலக உழைப்பாளிகளே ...



செய்வது-
சில்லறை வணிகம்!

சிதறிடாதது-
உங்களது-
உள்ளம்!

தலை கால்-
தெரியாமல் ,
ஆடுற உலகம்-
நாலு காசை -
'பார்த்த'பின்னாலே!

கொண்ட தொழிலை-
விடலியே-கை நிறைய
காசு -
'பார்த்த பின்னாலே'!

நூலை அசைத்தால்-
ஆடும்-
வானில் பறக்கும்-
பட்டம்!

வேர்களை கொண்ட-
பெரும் மரங்கள்-
நமது அசைப்பினால்-
காணுவதில்லை-
ஆட்டம்!

'கறைகள்' படிந்த-
கைகளுண்டு!

கண்ணாடி குடுவைகளினால்-
கீறல் தான்- உங்கள்-
கைகளில் உண்டு!

'சராமாரியான' பாதிப்பு-
சுழன்று அடிக்கும்-
காற்றினால்!

வயோதிகம் வந்தது-
உங்களுக்கு-
சுழன்ற காலத்தினால்!

நாட்டை ஏய்த்து-
ஏப்பம் விடுபவர்கள்-
வருகிறார்கள்-
பந்தாவாக!

உழைத்து உரமேறிய-
உடலைகொண்டவர்களே-
நீங்களோ இருக்கீங்க-
சாந்தமாக!

நேற்றைய பயணம்-
மிதி வண்டியில்!

இன்றைய-
மதிப்பு பல-
கோடிகளில்!

இந்த 'பாபாவுக்கு'-
ஆர்வமாம்-
ஊழலை ஒழிப்பதில்!

இதுபோன்ற -
நாடகங்கள் சாதாரணம்-
நம் நாட்டில்!

உழைப்பாளிகளே-
உங்களுக்கு கண்ணும்-
கருத்தும்-
உழைப்பில்!

உணவில் சிறந்தது-
தன் உழைப்பில்-
உண்பது-நபி மொழி!

உங்களை -
செம்மை படுத்திருக்கும்-
அம்மொழி!






18 comments:

  1. ம்ம்ம்
    ''உண்மை''
    நல்ல கவிதை நண்பா

    ReplyDelete
    Replies
    1. செய்தலி!

      உங்கள் முதல் வரவுக்கும்-
      கருத்துக்கும் மிக்க நன்றி!

      Delete
  2. “கண்ணாடி குடுவைகளினால்-
    கீறல் தான்- உங்கள்-
    கைகளில் உண்டு!“

    அந்தக் கீறல்களின் வடுக்கள்
    விழுப்புண்கள் இல்லையா அவர்களுக்கு....

    நல்ல கருத்துங்க சீனி.

    ReplyDelete
    Replies
    1. arouna!உங்களுடைய அழகிய பின்னூட்டதிற்கு-
      மிக்க நன்றி!

      Delete
  3. பெரும் செல்வந்தர்கள்
    சிறுவணிகத்தில் நுழைந்து
    அதனால் பயனுறும்
    சிறுவணிகர்களை
    அடியோடு அழித்து விடக்கூடாது
    என்ற ஆதங்கம்
    நமக்குப் புரிந்தாலும்
    அதனை செயல் படுத்துவோருக்குப்
    புரிய வேண்டும்..

    அழகான எண்ணம் நண்பரே...

    ReplyDelete
    Replies
    1. மகேந்திரன்!
      உங்களுடைய அழகிய பின்னூட்டதிற்கு-
      மிக்க நன்றி!

      Delete
  4. அருமையான கவிதை நண்பரே ..!

    ReplyDelete
    Replies
    1. வரலாற்று சுவடுகள்!
      உங்களுடைய அழகிய பின்னூட்டதிற்கு-
      வரவுக்கும் மிக்க நன்றி!

      Delete
  5. அருமையான கவிதை...காதல் கவிதை மட்டுமே படிக்காமல் சமுதாய சமூக கவிதைகள் இன்னும் இன்னும் படைக்க வேண்டுகிறேன்...இணைந்திருப்போம்.

    ReplyDelete
    Replies
    1. சதீஷ்!
      உங்களுடைய அழகிய பின்னூட்டதிற்கு-சமூக ஆர்வத்துக்கும்
      வரவுக்கும் மிக்க நன்றி!

      Delete
  6. உழைப்பின் உயர்வு சொல்லும் உயர் கவிதை

    ReplyDelete
    Replies
    1. அய்யா!
      உங்கள் வரவுக்கும் -
      கருத்துக்கும் மிக்க நன்றி!

      Delete
  7. சுயநலம் கூடி எல்லாமே வியாபாரமாகி வரும் காலத்தில் புத்தியோடு செயற்பட்டால் மட்டுமே வெற்றி !

    ReplyDelete
    Replies
    1. ஹேமா!

      உங்கள் வரவுக்கும் கருத்துக்கும்-
      மிக்க நன்றி!

      Delete
  8. //நாட்டை ஏய்த்து-
    ஏப்பம் விடுபவர்கள்-
    வருகிறார்கள்-
    பந்தாவாக!

    உழைத்து உரமேறிய-
    உடலைகொண்டவர்களே-
    நீங்களோ இருக்கீங்க-
    சாந்தமாக!//

    அழுத்தமான வரிகள். உங்கள் சிந்தனை சமுகத்தை குறித்து எழுதியதால் இந்தக் கவிதை இன்னும் சிறப்பை இருக்கிறது

    ReplyDelete
    Replies
    1. சீனு!
      உங்களுடைய வரவுக்கும்-
      கருத்துக்கும் மிக்க நன்றி!

      Delete
  9. இனிய கவிதை.. ரசித்தேன்..

    ReplyDelete
    Replies
    1. govi!ungal muthal varavukkum karuthukkum-
      mikka nantri!

      Delete