Monday 26 November 2012

வெளிச்சங்கள்! (1)

நடக்கும்-
"வெடிப்பு "-
சம்பவங்கள்!

பரப்பப்படும்-
அவதூறுகள்!

நடைபெறும்-
கலவரங்கள்!

சாதாரண-
செய்திகளாகும்-
கொலைகள்!

நடக்கும்-
கூட்டு-
கற்பழிப்புகள்!

மாண்டுவிடும்-
மனித நேயங்கள்!

ஒரு பக்கம்-
உண்மையை மறைக்கும்-
ஊடகங்கள்!

மறுபக்கம்-
பொய்யை உண்மையாக-
எழுதிடும்-
விஷம பேனாக்கள்!

சிலர்-
கைது-
செய்யபடுவார்கள்!

சிலர்-
போலி தாக்குதலில்-
சாவார்கள்!

காரணம்-
சொல்வார்கள்-
"நடத்தியவர்கள்"-
அவர்கள்-
என்பார்கள்!

ஆனாலும்-
குறையவில்லை-
"அசம்பாவிதங்கள்"!

திருடியவன்-
செத்து விட்டால்!

குறையனுமல்லவா-
திருட்டுகள்!

குற்றவாளிகள்-என
என்கௌன்டரில் (தற்காப்பு தாக்குதல்!)-
இறந்தவர்கள்-
என்றால்!

எப்படி-
தொடர்ந்து-
கொண்டிருக்கிறது-
வெடிப்பு-
சம்பவங்கள்!?

ஒரு சமூகத்தில்-
தவறு செய்பவர்கள்-
இருக்கலாம்!?

அதற்காக-
ஒரு சமுதாயத்தையே-
குற்றவாளி கூண்டில்-
நிறுத்தலாம்!?

அப்படிஎன்றால்-
இனிவருபவர்கள்!?

"தீர்ப்பு-"
சொன்னதுக்கு-
கல்லூரி மாணவிகளை-
எரித்தவர்கள்!!

"கணிப்பு "-
சொன்னதுக்கு-
பத்திரிகை -
அலுவலகத்தில்-
சில உயிர்களை-
எரித்தவர்கள்!!

கேரளத்தில்-
தன் கட்சியினர்-
செய்த கொலைகளை-
பெருமையாக-
முழங்கியவர்கள்!!

இன்னும்-
எத்தனையோ-
நடத்தப்படும்-
அரசியல்-
கொலைகள்!

ஆனாலும்-
இவர்களுக்கு-
"உத்தம புருஷ"-
வேடங்கள்!

இது-
எந்த ஊரு-
நியாயம்யா!?

இது-
ஒரு-
 சாமானியனின்-
சங்கடங்களைய்யா!?

கொஞ்சம்-
சொல்லிட -
ஆசைகொள்கிறது-
என் -
கவிதைகளய்யா!!


(குமுறல்கள் தொடரும்....)





7 comments:

  1. தங்கள் அருமையான பதிவுகளை தமிழன் (www.tamiln.org) திரட்டியிலும் இணையுங்கள்.

    ReplyDelete
  2. நியாமில்லை...

    தொடரட்டும் குமுறல்கள்...

    ReplyDelete
  3. கஷ்டமாகத்தான் இருக்கிறது.....

    நன்றி,
    மலர்
    http//www.ezedcal.com/ta(வலைப்பூ உரிமையாளர்களுக்கான தலையங்க அட்டவணை உருவாக்க உதவும் வலைதாளம் பயன்படுத்தி பயன்பெறுங்கள்)

    ReplyDelete
  4. அருமையான கவிதை

    //பரப்பப்படும்-
    அவதூறுகள்!

    நடைபெறும்-
    கலவரங்கள்!///

    ஒரு சமூகத்தைப் பற்றிய தவறான பரப்புரை பின்னாளில் கலவர அறுவடை

    ReplyDelete
  5. என்னங்க திடீர்னு சமூக கவிதைக்கு மாறிட்டீங்க? அருமையான படைப்பு வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  6. அழகான கருத்துக்கள்......கவிதையில்

    ReplyDelete
  7. குமுறல்களை கொட்டிவிடுங்கள் அண்ணா இதயம் கொள்ளாது!!!
    தொடரட்டும் தங்களது பணி நானும் தொடர்கிறேன்!

    ReplyDelete